பேச்சின் பேறாற்றல் பேராற்றல்!

மேல்மாடி கலகலத்துக்கொண்டிருக்கிறதேன்னு கொஞ்சம் ரொப்புவோம்னு மேஞ்சதுல யூதகுலத்தின் ஆணிவேரான தோரா என்னதான் சொல்லுதுன்னு பார்த்தப்போ
இது கிடைச்தது, சரி நல்ல விஷயமாயிருக்கேன்னு இங்க இடறேன்பா, இதயும் "லொஷான் ஹராவா" (படிச்சப்புரம் புரியும்) நினைக்கக்கூடாது.

பேச்சின் பேறாற்றலை பற்றி தோரா என்ன கூறுகிறதென்றால், பேச்சு ஆக்குவதற்கான கருவி. அதே சமயம் பேச்சால் அழிக்கவும் முடியும். வாழ்வும் சாவும் நாக்கிலே (அல்லது வாக்கிலே)
நாம் அன்றாடம் பேச்சு வழக்கில் உள்ள சில வற்றை "லொஷான் ஹரா" என்றழைத்து பட்டியலிட்டுள்ளார்கள்:

1. இருந்தலும் அது நிஜம்தான்..
2. நான் அவன்(ள்) பேர சொல்லவே இல்லையே..
3. இதையே வேர யாராவது என்னப்பத்தி இத மாதிரி சொல்லியிருந்த கண்டுக்கவேமாட்டேன்..
4. அதான் எல்லாருக்கும் ஏற்க்கனவே தெரிஞ்சுபோச்சே...
5. அவன்(ள்) ஒன்னும் நினைக்க மாட்டான்(ள்)..
6. அவன்(ள்) மூஞ்சிலேயே சொல்லிருவேன்..
7. சும்மா சொன்னேன்..
8. அந்த ஊர்காரனா...
9. இதெல்லாம் தொழில் போட்டில சகஜம்..
10. இத சொல்ல கூடாதுதான் ...
11. ஏன்ட்ட சொல்லாமே..
12. மெளனமாய் விழியை மட்டும் உருட்டுவது

இவை எல்லாம் தவிர்க்கப்பட வேண்டியவை. மேற்கூறியவைகளை கூறுவதால் ஆக்கபூர்வமாகவோ அல்லது எந்தவிதமான சேதாரமோ ஏற்படாத பட்ச்சத்தில் சொல்லிக்கலாம்னு ஒரு எக்ஸப்ஷன் கொடுத்திக்காங்கோ.

தினப்படி சத்தியம்தானா?
லொஷான் ஹாராவ தவிர்த்து, உங்க கருத்த சொல்லுங்க மக்களே.

3 comments:

Anonymous said...

சுரேஷ்,

10

7

:-))))))

Anonymous said...

பேறாற்றல்?

-வசந்தன்-

கிவியன் said...

கிடைக்கிர நேரத்துல வலையேத்துரதுனால தமிழ் தடுமாறுதுன்னு சொல்லி ஜகா வாங்கினா அதுவும் கூட லொஷான் ஹரவாபூடும். தப்புதான், கவனமா இருக்க முயற்ச்சிக்கிறேன், நன்றி வசந்தன்.

சுரேஷ்