இந்தியாவை வெளிநாட்டு மீடியாக்கள் காட்டும் விதம்

சென்ற திங்கட்கிழமை NZ-ல் ஒலிபரப்பாகும் ஒரு தொலைகாட்சி சானலில் (TV3, Campbell Live 7.30pm) விடியோ டைரி என தனிப்பட்ட நபர்கள், அதாவது freelancer, உலகத்தில் எந்த மூலையிருந்தும் அனுப்பும் செய்தி தொகுப்புகளை பற்றிய நிகழ்ச்சியின் துவக்க நாளன்றே கலாக்கத்தாவின் ஒரு பகுதியை பதிவு செய்து அனுப்பியதை காண்பித்தனர் (அனுப்பியவர் NZ-காரர்). தெருவில் குப்பை குமிந்து கிடப்பதையும், வெய்யிலின் வெப்பத்தால் அது எப்படி துர்நாற்றம் அடிப்பதையும், அருகிலேயே மக்கள் வாழ்வதையும், திறந்தவெளியில் மூலை முடுக்கில் சிறுநீர்கழிப்பதையும் அதை தவிர்க்க, ஆங்காங்கே வெவ்வேறு கடவுள் படங்களை வரைந்து வைப்பதையும், மேலும் விபச்சாரிகள் எவ்வாறு இரவில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வடிக்கையாளர்களை பிடிப்பதற்காக நிறைந்திருப்பதயும் ஏதோ வேற்று கிரகவாசிகள் மாதிரி ஒரு பின்னனியுடன் வழங்கினர். குப்பையும், இயற்கை தொந்திரவை கிடைத்த இடத்தில் இறக்கிவைப்பதும் மூன்றாம் நாட்டு நகரங்களின் அதிகப்படியான ஜனத்தொகையால் இருந்துவரும் ஒரு பிரச்சினை. இதை நியாப்படுத்தவில்லை. ஆனால் உலகின் முதல் தொழிலான விபச்சாரம் என்னமோ நம்ம ஊர்லதான் நடக்கிரமாதிரி சொன்னா எப்படி நியாயம்? ஒரு நாள் முன்புதான் இங்கே ஆக்லாண்டில் விபச்சாரிகளின் நடமாட்டம் அதிகமாகி வருவதையும் ($5- துக்கும் தாயாரக உள்ளதாக வேறு ஒரு விபரம் தந்தனர்), ஒருத்தி கொல்லப்பட்டதையும் காண்பித்தனர். இன்றைய நாட்களில் தொலைகாட்சி ஒருவரை மிகச்சுலபமாக bias (தமிழாக்கம் என்னப்பா?) செய்துவிடக்கூடிய மிக சக்திவாய்ந்த ஊடகம் என்பது யாவரும் அறிந்ததே.

ஒரு ராமகிருஷ்ணரையும், தாகூரையும், தெரஸாவையும், போஸ்-க்களையும்(சுபாஷ், ஜகதிஷ், சத்தியேந்திரநாத்) சந்திரசேரையும், சென்னையும் தந்த ஒரு மாநிலத்தித்தை பற்றி காண்பிப்பதற்க்கு இவர்களுக்கு வேறு ஏதும் இல்லாது போனது ஆச்சர்யமே. அல்லது, ஒரு நாட்டை பற்றி அறிந்து கொள்ள இவர்களது மீடியாக்கள் எடுத்துக்கொண்ட விஷயம் மிகவும் கீழ்தரமானதாக இருக்கும் போது இவர்களது ரசனையை என்னவென்று கொள்வது? இது பற்றி அந்த தொகுப்பாளருக்கு ஒரு கண்டன அஞ்சல் உடனே அனுப்ப இயலாது போனதால் இதை வலையிலாவது பதிப்போம் என பதித்துவிட்டேன்.

5 comments:

Anonymous said...

bias பக்கச்சார்பு அண்ணே . . .

Anonymous said...

நாங்களும் நீங்க செய்ய நினைத்தது மாதிரி செய்ய முயன்றால் இலங்கையர்களுக்கு முழுநேர வேலையே இதுவா போய்விடும் . . . (இந்திய ஊடகங்களுக்கு (media) கண்டனம் அனுப்புறத சொல்லுறன்)
இதை இங்கே பதிந்தவர்
சனியன்

Anonymous said...

அய்யா சனியன் அவர்களே நான் ஒன்றும் இந்திய மீடியாக்கள் மிகசிறந்தவை என்று கூறவில்லை. அதேசமயம், நான் சுட்டிக்காட்டியது ஒரு நாட்டை பற்றின அரசியலையோ, அரசாங்கத்தையோ
பற்றி மீடியாக்களின் பார்வையையும் இல்லை. மிகமேம்போக்காக இப்படி நடக்கிரது என காட்டியதைத்தான்.

பக்கச்சார்புக்கு நன்றி

சுரேஷ்

dondu(#11168674346665545885) said...

"நான் சுட்டிக்காட்டியது ஒரு நாட்டை பற்றின அரசியலையோ, அரசாங்கத்தையோ
பற்றி மீடியாக்களின் பார்வையையும் இல்லை. மிகமேம்போக்காக இப்படி நடக்கிறது என காட்டியதைத்தான்."
அதையேதான் சனியன் அவர்களும் கூறுகிறார். இதில் என்ன பிரச்சினை? என்ன, நீங்கள் ஒரு வெளிநாட்டை உதாரணமாக காட்டினீர்கள். அவர் இந்தியாவையே காட்டி விட்டார்.
இக்கதையிலிருந்து அறியும் நீதி யாது? நீ ஒருவரை சுட்டிகாட்டினால், மற்றவர் உன்னைச் சுட்டிக்காட்டுவார், மற்றும் மீடியாக்கள் பொறுப்பின்மை என்பது உலகளாவிய பிரச்சினை என்பதுமே ஆகும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

சரியாக சொன்னீர்கள் டோண்டு