என் அம்மா வளையம் விடுவாள்

மிகவும் அன்பானவள்
என் அம்மா
அப்பாவை தூர வைத்துவிட்டு
எனக்காக வாழுகிறாள்
எங்கு போனாலும்
தூக்கிச் செல்வாள்
இன்றும் அமர்ந்திருக்கிறேன்
அவள் இடுப்பில்
என் முகத்தை
வருடிச் செல்லும்
அவள் விட்ட
புகையில் முளைத்த
வளையம் சொல்லும்
என் அம்மா
மிகவும் அன்பானவள்.

1 comments:

Damu said...

உங்கள் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்கிறேன்
-தாமு