நடந்தவை நடப்பவை-2

குருவுக்கு தட்சணை கொடுக்க வேண்டும் என்பது நமது பாரம்பரியம். உதாரணத்துக்கு ஏகலைவன். சொல்லிக்கொடுத்த வாத்தியாருக்கு குருதட்சணை குடுக்கவில்லை என்றால் அவர் சொல்லிக்கொடுத்தது உதவாது என்பதும் ஒரு வகை நம்பிக்கை. இது ஒரு சர்வீஸ் ஃபி மாதிரி என்றாலும் குருவுக்கு உரிய தானம் என அதை ஒரு உயர்ந்த இடத்தில் வைக்கிறோம். காலப்போக்கில் இதுவே கற்பது பள்ளி கல்லூரி என ஆகியவிட்டதால் (fees) கட்டணம் என மாறிவிட்டது. நம்ம ஊர்ல பள்ளிக்கூடத்துல ஃபீஸ் கட்டலேன்னா, பையனையோ பொண்ணையோ, . ஃபீஸ் கட்டினா உள்ள வா இல்லேன்னா போய்ட்டுவான்னு வீட்டுக்கு அனுப்பிச்சுருவாங்க. இதை நாம சகஜமா எடுத்துட்டு அது சரிதானே ஃபீஸ் கட்டாம புள்ளய எப்படி சேர்த்துகறதாம்னு ஞாயமா தோணும். ஆனா இங்க நிஸில் ஒரு ப்ரைமரி ஸ்கூல்லையும் இத மாதிரி நடந்தது. விஷயத்த மேல சொல்லரதுக்கு முன்னாடி இங்க ப்ரைமரி ஸ்கூல் பின்னனிய பாக்கனும். ஒரு பத்து பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஃபீஸெல்லாம் கிடையாது. எல்லாம் அரசாங்க செலவு. ஆனா பின்னாடி ஜனத்தொகை கொஞ்சம் பெருகினப்புறம் கட்டுப்பிடி ஆகாததுனால வாத்தியார் சம்பளம் போக மத்த இதர செலவுகள அந்தந்த பள்ளிக்கூடங்கள் பாத்துக்க வேண்டியதுன்னு ஆகிப்போச்சு. அதனால பள்ளிகள் பெற்றோரிடமிருந்து நன்கொடை கேட்டு அனுப்புவார்கள். இங்க கவனிக்க வேண்டியது "நன்கொடை" என்பதை. அதவாது ஏதோ முடிஞ்சவங்க குடுத்தா சரி. இது இன்னமும் வழக்கில் உள்ளது. ஒரு வருடம் முழுவதற்கும் மிகக்குறைந்த தொகையே. முக்கால்வாசி பெற்றோர் கொடுத்துவிடுவார்கள். மீதி கால்வாசி கொடுக்க மாட்டார்கள். எத்தனை முறை கடிதமனுப்பினாலும் ஒன்றும் பெயராது. சமீபத்தில் இப்படி ஒரு ஸ்கூலில் நடந்த போது சம்பந்தப்பட்ட அந்த மாணவரை வீட்டுக்கு அனுப்பினார்கள். அவ்வளவுதான் ஒரு கூட்டம் கூட்டி அது எப்படி அந்த மாணவரை தண்டிக்கலாம் என்று ஒருவித கண்டனப்போராட்டமாகிவிட்டது. காரணம் , ஃபீஸ்/நன்கொடை கட்டாதது மாணவரின் குற்றம் அல்ல அது பெற்றோரின் குற்றம். அப்படியிருக்க அந்த மாணவரை தண்டித்தது சரியல்ல என்பதே. இது கவணிக்க வேண்டிய ஒரு மாற்றுக் கோணம். இந்த விஷயத்தில் குழந்தையை தண்டிப்பது சரியா? போராடியவர்கள் கூறியது ஃபீஸ் கட்ட வைப்பதை அந்த பெற்றோருடன் பேசி தீர்வு காணவேண்டுமெயொழிய அந்த மாணவரை பள்ளியில் சேர்த்துக்கொண்டுதானாக வேண்டும் என்று. அப்படியே நடந்தது. மாணவரை மீண்டும் சேர்த்துக் கொண்டனர், ஆனால் பெற்றோர் ஃபீஸ் கட்டினார்களா என தெரியவில்லை. நம்ம ஊர்ல இதுபோல் சாத்தியமா? இப்படி இருந்தால் எல்லோருக்கும் கல்வி என்பது சற்று எளிதாகும்.


ரசிகன் என்று வரும்போது உலகத்தில் எந்த நாடாக இருந்தாலும் ஒரே மாதிரிதான் உள்ளது. அடுத்த மாதம் ஆக்லேண்டில் நடக்கவிருக்கும் Red Hot Chili Peppersன் இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை இன்று அதிகாலை தொடங்கியது. அதற்காக சனிக்கிழமை நள்ளிரவு 2.30 மணியிலிருந்து அதாவது 24 மணிநேரத்துக்கும் அதிகமா வரிசையில் காத்திருந்தனர். இதில் வாசையில் தூங்கிக்கொண்டிருந்த ஒருவர் மீது காரை இடித்து சென்று விட்டனர். இன்னும் யாரென்று கண்டுபிக்கவில்லை. நான் இதனை தட்டச்சிக்கொண்டு இடையில் செய்தியை சென்று பார்த்தால் அடிபட்டவர் இறந்துவிட்டதாக செய்தி சொல்கிறது. மிக அதிர்ச்சியாக இருக்கிறது. இதைப் பார்க்கும் போது, கையில் கற்பூரமேற்றுவதும், பாலாபிஷேகம் செய்வதும், இன்னும் ஒருபடி மேலே சென்று கோவில் கட்டுவதும் உயிரை விடுவதைவிட மேலானது. வாழ்க ரசிகர் மன்றம்.

2 comments:

துளசி கோபால் said...

ப்ரைமரியில் படிக்கிற பசங்க இல்லாததால் அந்தப் பக்கம் கவனம் போகலை. இந்த PTA மட்டும்
50 $ கட்டச் சொல்லும். அதைக் கட்டலேன்னா அந்த்ப்பிள்ளையை வீட்டுக்கு அனுப்பிட்டாங்க?

அடப்பாவமே(-:

கிவியன் said...

PTA டொனேஷனேதான்.

இன்னும் க்.ச-ல வெய்யில் காயுது போலிருக்கே? டுனேடின்ல தண்ணீர் கட்டுப்பாடு கொண்டுவந்துட்டாங்களாம். Global warming நம் கதவை தட்டிப்பார்க்கிறது. எவ்வளவு சீக்கிரம் விழித்துக்கொள்கிறோமோ அவ்வளவு நல்லது.