இடப்பெயர்ச்சி

தெற்கு அரைக்கோளத்திலிருந்து வடக்கு அரைக்கோளத்திற்கு பிரயான நேரம் குறைந்தது 27 மணிநேரம். இரா முருகன் விட்டு சென்ற எடின்பரோ குறிப்புகளை தொடர எண்ணம். அவரளவுக்கு முடியதென்றாலும். 19 குறிப்புகளை தாண்டி என்னத்த எழுத இந்த "காரைக்குடி" சைஸ் எடின்பரோ பற்றி?

சரி முதலில் பிரயானத்தை பற்றியே எழுதலாம். அவ்வளவு விஷயமிருக்கிறது.
23 kg மேல் பெட்டி கனம் இருந்தால் இப்போது "அண்ணா இவ்வளவு வெயிட் கூட வருது, கிலோவுக்கு $75 தான் பில் போட்டுர்லாமா?" என முகத்தில் சிரிப்பு மாறாமல் கேட்கிறார்கள். என் பெட்டி 27kg. குளிர் பிரதேசம் என இரண்டு கோட்டை வைத்தது செம வெயிட். வழி அனுப்ப வந்த மனைவியிடம் பெட்டியை திறந்து கைக்கு கிடைத்ததையெல்லாம் உறுவி கொடுத்துவிட்டு மீண்டும் எடை போட்ட போது 22.9 kg. எனக்கு ஒரு யோசனை தோன்றியது. விமான வடிவமைப்புக்கு ஒரு மனிதனின் எடை சுமாராக 80 kg என எடுத்துக்கொள்கிறார்கள் என வைப்போம். பக்கத்து சீட்காரர் 120 கிலோ இருந்து, நீங்கள் 75 kg என்றிருந்தால், உங்களுக்கு பெட்டியில் சிறிது அதிகப்படி எடுத்து செல்ல அனுமதி தரவேண்டும். அப்ப பக்கத்து சீட்டுக்கு என கேட்டால், உங்கள விமானத்துல விடுறதே பெரிய விஷயம் கைய வீசீட்டு வாங்க அடுத்த முறை விமானம் ஏர்ரதுக்குள்ள வெயிட்ட குறைச்சுடுபா என ஒரு வசீகர கார்டு போர்டிங் பாஸுடன் கொடுக்கலாம்.

நியுஸியிலிருந்து எந்த பக்கம் பிராயணம் போனாலும் நான் கவனித்தது சகமனிதருக்கு தரும் மரியாதை(politeness) குறைந்துகொண்டே வருவது. அண்ணா ஏதோ நாலைரை மில்லியன் மக்கள் இருந்தா அதெல்லாம் இருக்கும் இப்படி வெள்ளம் மாதிரி மக்கள் தொகை இருக்க்ம் நாட்டிலெல்லாம் இத எதிர் பாக்கப்படாதுன்னு சொல்லரது கேட்க்குது. மற்றுமொன்று, ஆசிய பிராந்தியத்தை சேர்ந்த தனி ஆண் பிராயானம் செய்தால் விமான நிலையங்களில் தனி மரியாதைதான். சிங்கப்பூர் சாங்கியில் லண்டன் விமானத்தை பிடிக்க செக்யுரிடி செக்குக்காக நின்ற போது, என்னை அன்புடன் தனியே அழைத்து random check என கூறி, you are the privileged one (ஆஹா அப்படியா!!) என்று சிரித்த படியே சொல்லிவிட்டு, டிடெக்டர் வளையத்தை என் உடம்பெங்கும் ஓட்டி சட்டை பான்ட் பைகளை தடவி பார்த்து காபின் லக்கேஜை தலைகீழாக கவிழ்த்து, ரொம்ப நன்றி நீங்கள் போகலாம் என்று விளித்தார். இதற்கு பின் விமானத்தில் ஏற சீட் எண் படி அழைத்து அதற்கு வரிசையில் நின்ற போது மேலும் ஒரு செக்யுரிடி நேராக என்னிடம் வந்து பாஸ்போர்ட் போர்டிங் பாஸ் செக் செய்து, லண்டனில் தங்குவியா என கேட்டார், இல்லை என்றதும் எங்க போற என்றார், ஸ்காட்லேண்ட் என்றதும், அட ஆப்படி ஒரு இடமே இல்லியே மேப்ல என்பது போல் ஒரு லுக் விட்டு சரி போ என்று சென்றுவிட்டார். இதே போல் முன்பு எல்.ஏயிலும், பின்பு ஹாங்காங்கிலும் நடந்தது. எனக்கென்னமோ என்னை மாதிரி ஒரு ஆளை வலிவீசி தேடிக்கொண்டிருப்பது போல் பட்டது. பென்டு நிமித்தாம விட்டா சரி. இங்கு கவனிக்க வேண்டியது அவர்கள்(செக்யுரிடி) ஜோக்கடித்து பேசினால் நீங்கள் சிரிக்கலாம், இல்லை இப்ப என்ன இழவு ஜோக் வேண்டி கிடக்கு என லுக் விடலாம். ஆனால் பதிலுக்கு நீங்கள் ஜோக் மாத்திரம் அடிக்காதீர்கள். ரொம்ப சீரியஸாக எடுத்துக்கொள்ள வாய்பிருக்கிறது.

மற்றொரு விஷயம் மிக நுட்பமாக கவனித்தது, ஆக்லேன்டிலுருந்து வந்த விமானத்திலிருந்து சிங்கப்பூர் வந்திரங்கியபோடு அதிகாலை 5.30 மணி. புதிதாக கட்டியுள்ள 3ம் நிலையத்தில் ஏரோ ப்ரிட்ஜ்ஜை விட்டு நிலைய நுழை வாசல் வந்ததும் அங்கே ஒரு பணிப்பெண் நின்று கொண்டு எல்லோருக்ககும் காலை வணக்கம் கூறி வரவேற்றுக்கொண்டிருந்தாள் (போட்டி என வந்துவிட்டால் என்ன வெல்லாம் செய்கிறார்கள்?) எனக்கு முன்னும் பின்னும் பல வெள்ளையர்கள். முகத்தில் ஒரு புன்னகையுடன் அநத பெண் எல்லோருக்கும் வண்க்கம் வைத்துக்கொண்டிருந்தாள். நான் சற்று தனித்தே வந்து கொண்டிருந்தேன், அதுவரை சொல்லிக்கொண்டிருந்தவள் சற்று என்னை உற்று கவனித்தாள் புன்னகை மறைந்தது நான் அவளை கடக்கும் வரை மெளனம் கடந்தத பின் மறுபடி வணக்கம் என என் பின்னே வந்த வெள்ளைக்கு. பெரிய விஷயமில்லை ஆனால் அந்த பணிப்பெண் நம் திராவிட நாட்டை சேர்ந்தவள். என்னவென்று சொல்லுவது?

லண்டன் ஹீத்ரோவில் 4 நிலையங்கள் (terminals) இருந்து ஐந்தாவது நிலையம் கடந்த 5 வருடங்களாக கட்டுமானம் நடந்து இப்போது முடிவடைந்து, இந்த மாதம் 14 தேதி இங்கிலாந்து ராணியால் திறந்து வைக்கப்பட்டது. 27தேதி முதல் பொதுமக்களுக்கு. இதனால் பிரயானிகளுக்கு சற்று சுலபமாககும் என சொல்கிறார்கள். இருந்தால் சரி. ஒரு நிலையத்திலிருந்து மற்றொரு நிலைத்திற்கு மாறுவது சற்று கடினமே அதுவும் லக்கேஜ் வண்டியை தள்ளிக்கொண்டு மைல் கணக்கில் நீளும் சுரங்க நடைபாதையில் சற்றே கவனிக்காமல் போனால் வேறு எங்காவது கொண்டுவிட்டுவிடும்.

பிராயாணத்தின் போது வேறு வழியேயின்றி நான் பார்த்த படங்கள்:

American Gangster - Denzel Washingtonனின் நடிப்பை தவிர இந்த படத்தில் ஒன்றும் விசேஷமாக ஒன்றுமில்லை. காட்ஃபாதர் போன்று இன்னும் எத்தனை படங்கள் எடுப்பார்களோ.
Romulus my father - நல்ல படம். Eric Bana மிக அற்புதமாக நடித்துள்ளார். தந்தைக்கும் மகனுக்குமான் உறவை சொல்லும் படம். ஒளிப்பதிவு மிகப் பிரமாதம்.
High School Musical 2- கிட்டத்தட்ட நம்ம தமிழ் படம் மாதிரி ஜாலியாக பாட்டும் டான்ஸும் குடும்பத்துடன் பார்க்கலாம்.
மலைக்கோட்டை-டமில் படம் நம்ம நெட்டை நடிகர் விஷால் நடித்தது, கை விரலை காண்பித்து, இருக்கர எல்லா கோட்டை ஊர்களின் பெயரை அடுக்கி அது எல்லாத்தையும் பார்த்ததாக் கூறி ஒரு '&$%*யும் பிடுங்க முடியாது என்று பின்னி பெடலெடுத்து (அப்டீன்னா என்னங்க?) பாதி படம் முடிவதற்குள் தலைவலி வந்து விட்டது.

ஆக இவ்வளவு கஷ்டங்களையும் 27 மணிநேரத்திற்குள் அனுபவித்து ஒரு வழியாக ஊர் வந்து சேர்ந்து முன் பின் அறிந்திராத (மின்ஞ்சல் மூலம் நட்பு) நண்பர் விமான நிலையத்திற்கு வந்து அழைத்து சென்று சுடச்சுட சாதமும் குழப்பும் வைத்து(தானே சமைத்து) உபசரித்தது, இவ்வளவு கஷ்டங்களையும், இது மாதிரி ஒரு நண்பர் கிடைப்பார் என்றால், மறுபடியும் பட முடியும் என்று தோன்றியது.

2 comments:

சிங்கை நாதன்/SingaiNathan said...

//விமான வடிவமைப்புக்கு ஒரு மனிதனின் எடை சுமாராக 80 kg என எடுத்துக்கொள்கிறார்கள் என வைப்போம். பக்கத்து சீட்காரர் 120 கிலோ இருந்து, நீங்கள் 75 kg என்றிருந்தால், உங்களுக்கு பெட்டியில் சிறிது அதிகப்படி எடுத்து செல்ல அனுமதி தரவேண்டும்//

இதே போல் நானும் நினைத்துள்ளேன் , ஒரு ஆள் அவரது உடல் எடை மற்றும் பொதி எல்லாம் சேர்ந்து இவ்வளவு எடை என அனுமதிக்கலாமே என ..:)

//அதுவரை சொல்லிக்கொண்டிருந்தவள் சற்று என்னை உற்று கவனித்தாள் புன்னகை மறைந்தது நான் அவளை கடக்கும் வரை மெளனம் கடந்தத பின் மறுபடி வணக்கம் //

// சிங்கப்பூர் சாங்கியில் லண்டன் விமானத்தை பிடிக்க செக்யுரிடி செக்குக்காக நின்ற போது, என்னை அன்புடன் தனியே அழைத்து random check என கூறி, you are the privileged one (ஆஹா அப்படியா!!) என்று சிரித்த படியே சொல்லிவிட்டு, டிடெக்டர் வளையத்தை என் உடம்பெங்கும் ஓட்டி சட்டை பான்ட் பைகளை தடவி பார்த்து காபின் லக்கேஜை தலைகீழாக கவிழ்த்து, ரொம்ப நன்றி நீங்கள் போகலாம் என்று விளித்தார். இதற்கு பின் விமானத்தில் ஏற சீட் எண் படி அழைத்து அதற்கு வரிசையில் நின்ற போது மேலும் ஒரு செக்யுரிடி நேராக என்னிடம் வந்து பாஸ்போர்ட் போர்டிங் பாஸ் செக் செய்து, லண்டனில் தங்குவியா என கேட்டார், இல்லை என்றதும் எங்க போற என்றார், ஸ்காட்லேண்ட் என்றதும், அட ஆப்படி ஒரு இடமே இல்லியே மேப்ல என்பது போல் ஒரு லுக் விட்டு சரி போ என்று சென்றுவிட்டார். இதே போல் முன்பு எல்.ஏயிலும், பின்பு ஹாங்காங்கிலும் நடந்தது. எனக்கென்னமோ என்னை மாதிரி ஒரு ஆளை வலிவீசி தேடிக்கொண்டிருப்பது போல் பட்டது.//


ஹாஹாஹா , :) எப்போ வந்தீங்க ? இங்க "மா செலமாட்" என்பவர் தப்பித்து ஓடிவிட்டார் தடுப்புக்காவல் மையத்திலிருந்து ஒரு ஒன்றரை மாதத்திற்கு முன். இன்னும் பிடிபடவில்லை. உங்க போட்டோவை நட்சத்திரப்பக்கத்தில் பார்த்தபோதே எங்கோ பார்த்த்தமாதிரி இருக்கே என நினைத்தேன் . இப்போதான் தெரியுது :) . தினமும் பஸ் , ரயில் , பொது இடம் , உணவகம் எல்லா இடமும் உங்க படம்தான் ... இல்ல இல்ல மா செலாமாட் படம் :) . கொஞ்சம் பார்த்து இருந்துக்கோங்க குறிப்பா இந்த பக்கம் வந்தா .

அன்புடன்
சிங்கை நாதன்

கிவியன் said...

வாங்க சிங்கைநாதன். நம்ம ஊரா இருந்தா மா செலமாடு கேச முடிச்சிடலாம்னு என்ன பிடிச்சு கொண்டுபோனாலும் போயிருக்கலாம், சிங்கபூர்ன்றதால தப்பிச்சேன்.

நியுஸியிலிருந்து யுகே வரும்போது சிங்கை வழியாக வந்தேன் மார்ச் முதல் வாரம்.