எடின்புரத்து மக்கள்-1

எடின்பரோ மிகப் பழமையான நகரம். உதரணத்துக்கு, எந்த ஒரு கடையிலும, போன நூற்றாண்டில் ஆரம்பித்தது என்பதை since 1846, Estd 1874 என பெருமையாக போட்டிருப்பதை பார்க்கலாம் . நான் முடிதிருத்த சென்ற கடை ஆரம்பித்தது 1890ல். 118 வருடங்களுக்கு வெட்டி தள்ளியிருக்கிறார்கள். இங்கு சுலபமாக முடி திருத்தும் கடையை கண்டுபிடிக்க வசதியாக எல்லா முடிதிருத்த கடை வாசலில் சிவப்பும் வெள்ளையும் பட்டையாக சுழன்ற மாதிரி வண்ணமடித்த ஒரு பெரிய சைஸ் உலக்கையை வாசலில் வைத்திருக்கிறார்கள்.


கடை உள்ளே சென்றால் காலம் உறைந்து கிடந்தது. பழைய நாற்காலிகள், பழைய கண்ணாடிகள், சுவரெங்கும் ஒவியங்கள், மின்சாரம் கண்டுபிடித்த காலத்து வயரிங் அதன் சுவிட்சுகள் என கதவை திறந்து கிட்டத்தட்ட 1890 -கே போன மாதிரி இருந்தது. நல்ல வேளை லேட்டஸ்ட் ப்லிப்ஸ் மின்சார முடி வெட்டும் கருவியும், ஆங்காங்கே கிழித்துவிட்டுக்கொண்ட Levi ஜீன்ஸ், லேசர் கட் ஹேர்ஸ்டைல் கொண்ட முடிதிருத்த நங்கைகள் 21ம் நூற்றாண்டு.

"இங்க பல மாடல்கள் வந்து வெட்டிக்கொண்டிருக்கிறார்கள் தெரியுமா" என சுவரிலிருந்த புகை படங்களை காண்பித்தாள் எனக்கு வெட்டிய நடு வயது பெண்மணி. நம்க்கு ஒருத்தரயும் தெரியவில்லை, அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் "ஓ வாவ்!!" என்று அசையாமல் கேட்டுக்கொண்டிருந்தேன். 10 நிமிடங்கள் வெட்டியதற்கு ஆறு பவுண்டுகள்.

பல எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள், அறிஞ்ர்கள் என புகழ் பெற்றவர்கள் பிறந்த அல்லது வாழ்ந்த இடம் எடின்பரோ.. இன்று நாம் எடுத்துத் தள்ளும் வண்ண புகைப்படத்தை முதன் முதலில் எடுத்தவர் எடின்பரோவில் பிறந்த புகழ் பெற்ற கணித மற்றும் இயற்பியல் விஞ்ஞானி James Clerk Maxwell. அவர் பிறந்த நெ 14, இந்தியா தெரு நானிருக்கும் இடத்திலிருந்து பத்து நிமிட தூரத்தில் இன்றும் உள்ளது.

நம்ம ஊர்ல அரசியல் சம்பந்த பட்டவர்களின் சிலையையே பார்க்க முடியும். ஆனால் இங்கு எடின்பரோவின் பிராதான சாலையான பிரின்சஸ் தெருவில் நடுநாயகமாக சிலை வைத்திருப்பது எழுத்தாளர் Walter Scottக்கு.


அதுவும் சும்மா நட்ட நடு ரோட்டில் இல்லை. மிக அழகிய வேலைப்பாடு மிக்க உயர்ந்த கோபுரத்துடன்.ஆக எழுத்தாளர இப்படி மதிக்கிர ஒரு ஊர்ங்கறது ஒரு பெரிய விஷயம். அதனாலதான் இன்னிக்கி இந்த ஊர்ல பிறந்து வளர்ந்த J.K.Rowling இங்கிலாந்து ராணியை விட பணக்காரராக இருக்கிறாரோ என்னவோ.

வலம் தொடரும்....


மொக்கை பகுதி:


நியுஸியில் நண்பர் ஒருவர், பிரயாணத்துக் கேற்ற ஒரு பையை, சூடு ஆறாமல் ஒரு ப்ளாஸ்க், ஒரு சிறு சாப்பாட்டு டப்பா, சாவி, பேனா, விசிட்டிங் கார்டு, செல் ஃபோன், இத்யாதிகளை வைத்துக்கொள்ளலாம், அன்புடன் பரிசளித்தார். நல்ல உயர்ரக பை. பல பன்னாட்டு பொருட்கள் போல் சீனாவில் தயாரான சரக்குதான்.
அந்த பையில் ஒரு டாக் (tag) எந்த கம்பெனி தயாரிப்பு என்று ஒரு பக்கத்திலும் (கிழே உள்ள படம்)

அதன் பின் பக்கத்தில் இந்த பையை எப்படி பரமரிக்க வேண்டும் என்ற குறிப்பும் இருந்தது. அனால் என்னால் அதை மட்டும்தான் புரிந்து கொள்ள முடிந்தது. அதற்கு கீழே உள்ளதை இங்கே நீங்கள் பார்க்கலாம்:
என்ன ஏதாவது புரிந்ததா?

ஒரு குத்து மதிப்பாக என்னதாண்டா சொல்லவறீங்க? சீன மொழியை அப்படியே ஆங்கலத்தில் மொழி பெயர்த்த மாதிரி உள்ளது. ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது, சீனாவில் எப்படியாவது ஆங்கிலத்தை வென்று விட வேண்டும் என்ற ஒரு தீவரம் தெரிகிறது. இந்த க்வாலிடி கண்ட்ரோல் எனப்படும் ஒரு பகுதி மக்களை இந்த பை தயாரிக்கும் நிறுவனம் விசேஷமாக் கவனித்திருக்க வேண்டும். இல்லையெனறால் பாரிஸிலிருந்து நியுஸி வரை வியாபாரம் செய்யும் ஒரு கம்பெனியின் பொருட்க்களில் இப்படி ஒரு tag போட முடியுமா?

7 comments:

துளசி கோபால் said...

வேற எதுக்கோ போடவேண்டிய டேக் மாறிப்போச்சோ? :-))))

நாய்ச்சிலை படம் போடுங்க. இன்னும் 007 விஷயமெல்லாம் இருக்கு:-))))

கிவியன் said...

வாங்க துளசி, நானே ஏழு நாளும் எப்படிடா எழுதரதுன்னு மண்ட பிச்சிக்கிட்டு இருக்கேன், சைக்கிள் கேப்ல புகுந்து நம்ம பதிவையே ஹைஜாக் பண்ணீடுவீங்க போல இருக்கே, எலி ஆகிடுச்சு, இனி நாய் பூனை எல்லாம் வரும்...007 பால்காரர பத்தி அப்படி ஒண்ணும் விஷயமில்ல, வேணுமின்ன அவரு ஒரு பக்கா மேல் ஷாவனிஸ்ட்டுன்னு ஒரு வரி போடலாம்.

இலவசக்கொத்தனார் said...

அவங்க சொன்னா மாதிரி எல்லாம் செஞ்சு பையை பத்திரமாப் பார்த்துக்கறீங்க இல்ல!! :))

கிவியன் said...

இ.கொ, ஆஹா அப்படியே ஒரு வரி விடாம சொன்னபடி பாத்துக்கறேன். ஆனா பாருங்க இந்த யுனிவர்ஸ்ச எப்படி பத்துக்கறதுன்னுதாங்க புரில.

சின்ன அம்மிணி said...

அந்த நியூசி நண்பர்கிட்ட கேளுங்க அவருக்கு சீன மொழி தெரியுமான்னு. ஒருவேளை அவர் உங்களுக்கு அதுக்கு அர்த்தம் என்னன்னு புரிஞ்சு உங்களுக்கு விளக்குவார்னு நம்பறேன்.
//என்பதை since 1846, Estd 1874 என பெருமையாக போட்டிருப்பதை பார்க்கலாம் . நான் முடிதிருத்த சென்ற கடை ஆரம்பித்தது 1890ல்.// இந்தியால கூட சில வீடுகள இந்த மாதிரி கட்டின வருசம் போட்டு பாத்திருக்கேன்.

என் சுரேஷ் said...

வணக்கம்!

என் பெயர் தான் உங்கள் பெயர் என்று அறிந்ததில் மகிழ்ச்சி.

உங்கள் பதிவுகளை வாசித்தேன். நன்றாக எழுதுகிறீர்கள்.

நட்சத்திர வாழ்த்துகள்

தோழமையுடன் என் சுரேஷ்
nsureshchennai@gmail.com

கிவியன் said...

சி.அ, ரங்கமணியதானே சொல்றீங்க, அவரு javaவோட சீன லாங்வேஜும் படிச்சிருக்காருன்னு தெரியாம போச்சு, கேட்டுருவோம்.

என் சுரேஷுக்கு இந்த சுரேஷின் நன்றி.