பேக்கப்(backup) செய்ய மறவேல்....

இல்லேன்னா தொடரந்து எடின்புரத்து மக்கள் எழுத முடியாம, 15 வயதுக்கு எவ்வளவு சுதந்திரம் தேவை? என்று பதிவு போட வேண்டியதிருக்கும்.


கோவாவில் மரணமடைந்த ஸ்கார்லெட் முதலில் தலைப்பு செய்தியாக இருந்து, பின்பு, இரண்டு, பத்து பதிமூன்றாம் பக்கம் என இங்கு யுகேயிலும் மெல்ல சத்தம் அடங்கிவிட்டது. அனால் நேற்று பாருங்கள் இங்கு வந்த ஸ்கார்லெட்டின் உடம்பை பிரிடிஷ் அதிகாரிகள் மூன்றாவது முறையாக போஸ்மார்ட்ம் செய்த போது சில பாகங்களை காணோம் என்று கண்டுபிடித்துள்ளனர். கோவா அதிகாரிகள் அதெல்லாம் சகஜம்பா என சவுண்டுவிட்டிருக்கின்றனர். காணாமல் போனவை இரண்டு கிட்ணி, வயிறு, மற்றும் கருப்பை. கோவா அட்டாப்ஸியில் கிழிச்ச அதிகாரி, அட்டாப்சி அரையில் அடிக்கும் ஃபார்மால்டிஹைட் மப்புல உள்ள வெக்க மறந்திருக்கலாம்.

ஃபியோனா இன்னும் என்னவெல்லாம் சந்திக்க வேண்டியதிருக்குமோ?

இந்த விஷயத்தில் ஒரு மீள் பார்வையில் 15 வயது விடலை பருவ வயது குழந்தைகளுக்கு எவ்வளவு சுதந்திரம் தரலாம்? இந்திய ஊடக வியூகம் இந்த பெண் ஏற்கனவே போதை பொருட்கள் உபயோகிக்கும் வழக்கம் உள்ளவர், இவளுடைய அம்மா ஃபியோனா இப்படி இவளை தனியே விட்டிருக்கக்கூடாது என்ற ரீதியில் இருக்கிறது. ஆனால் இங்கு யுகே ஊடகங்கள் கோவாவில் பெண்கள் தனியே போகமுடியாது, அங்கு பல ஆண்கள் குறி விரைத்து அலையும் கார்த்திகை மாதத்து நாய் போல் அலையுர மாதிரியான ஒரு பார்வை. ஏனென்றால் நாம் குழந்தைகளை வளர்க்கும் முறையும் இங்கு மேற்கில் வளர்க்கும் முறைக்கும் மிகுந்த வித்தியாசங்கள உள்ளன.

ஸ்கார்லெட்டை தனியே விட்டது தப்பு என்று எப்படி சொல்ல முடியும்? 15 வயதிலிருக்கும் குழந்தைக்கும் எல்லைகள் தேவைதான். ஆனால் அவர்கள் அதனை மீறுவதற்கு தயங்குவதே இல்லை. இதனால் பெற்றோருக்கும் அந்த வயது குழந்தைக்கும் மன்ஸ்தாபங்கள் வருவது தவிர்க்க முடியாது. இதற்காக எல்லைகளை கடுமையாக்குவது சரியென தோன்றவில்லை. சுதந்திரம் இவர்களுக்கு மிக அவசியம். சுதந்திரத்தை அவர்கள் எப்படி கையாளுகிறார்கள் என்பதை பொருத்து. ரொம்பவும் பொத்தி பொத்தி கட்டுப்பாட்டுக்குள் வைத்தால் அவர்கள் வளர்ந்த பின் முற்றிலுமாக இழக்கவும் நேரிடும்.

ஆக என்ன சொல்ல வரேன்னா நேத்திக்கு நம்ம லாப்டாப் sticky key errorரினால் ஊத்திக்கிச்சு. ஆக பதிவு போட முடியாம போயி, எங்க நட்சத்திர வாரம் விட்டு போயிருமோன்னு, ஆபிஸிலிருந்து கிட்டத்தட்ட பாயை பிறாண்டி ஒரு பதிவுன்னும் வெய்ங்களேன்..



மொக்கை:



போபால் விஷவாயு விபத்து நடந்து 26 வருடங்கள் ஒடிவிட்டன. போபாலை தாண்டி யாருக்கும் இது நினைவிருக்குமா என்பது சந்தேகம். இன்றும் அந்த தொழிற்சாலையை சுற்றி உள்ள தண்ணீர் நிலைகள் விஷத்தன்மையாகவே இருக்கிறது பலரும் இன்னும் இதனால் பாதிப்படைந்து வருகின்றனர். இதை கண்டித்து ஒரு கண்டன கடிதம் இங்கு சென்ற வார கார்டியன் நாழிதலில் வந்தது. அருந்ததி ராயுடன் சேர்ந்து இன்னும் ஒரு 100 பேர் கையெழுத்திட்ட ஒரு கடிதத்தின் பகுதி கீழே. எனக்கு இதை படித்தது. அக்பர் பீர்பால் கதைதான் ஞாபகத்துக்கு வந்தது. அக்பர் பீர்பால் வர ஏன் தாமதம் என போய் பார்த்துவர சொன்ன போது பீர்பால் அரசனது முட்டாள்தனத்தை உணர்த்த, கீழே மூட்டப்பட்ட நெருப்பிலிருந்து மிக உயரே ஒரு பாணையில் சமைத்துக்கொண்டிருப்பார். அதை போல்தான் உள்ளது, இந்தியாவில் பிரச்சனைக்கு, யுகேயில் கண்டனம் தெரிவிக்கிறார்கள்.

Letters
Legacy of Bhopal

* The Guardian,
* Friday April 11 2008
* Article history

About this article

This article appeared in the Guardian on Friday April 11 2008 on p33 of the Leaders & reply section. It was last updated at 00:17 on April 11 2008.

Nearly a quarter of a century after the Union Carbide gas disaster in Bhopal, the company's factory remains uncleaned while chemicals leaking from the site continue to poison the drinking water of tens of thousands. Children in the affected communities are being born with deformities so severe that their pictures could not be published. Union Carbide, now wholly owned by Dow Chemical, disclaims responsibility for the factory and for the last 16 years has refused to appear in the Indian court where it faces serious criminal charges. In these circumstances, we urge India's prime minister, Manmohan Singh, and his ministers to honour their promises made two years ago on proper healthcare and monitoring for those affected by the gas and poisoned water, to obey the Indian supreme court's 2004 order to provide safe drinking water for communities whose water is poisoned, and not to have business dealings with Union Carbide or its owners while the contempt of court continues.

Indra Sinha writer, Tahmima Anam writer, Michael Anderson filmmaker, Saffron Burrows actress, Matthew D'Ancona writer, Anne Enright writer, Hari Kunzru writer, Arundhati Roy writer and 95 others

4 comments:

meena said...

நெல்லை மாவட்ட செய்திகளுக்கு
www.nellaitamil.com

கிவியன் said...

மேலே உள்ளது இங்கு யுகேயிலிருந்து இயங்கும் ஒரு தளம். ஆன்லைன் ரேடியோவில் ஐரோப்பிய செய்திகளை தமிழில் வழங்குகிறார்கள், இடையே சுந்த்ர இலங்கை தமிழில் விளம்பரங்களோடு:

ஓ சாரீக்கு ப்ளவுசும் உடனடியா தெச்சு தருவினம்? என்ற ரீதியில். கேட்டுப்பாருங்கள்.

துளசி கோபால் said...

என்னன்னு இந்த சுதந்திரத்தைச் சொல்ரது? இங்கே உள்ளூரில் ஒரு 15 வயசுப் பொண் பன்னெண்டுநாளாக் காணோம்.

நேத்துதான் சவத்தை ஆத்துத் தண்ணீரிலிருந்து எடுத்துருக்காங்க.

வயசுப் பசங்களை வச்சுருக்கும் ஒவ்வொரு பெற்றொருக்கும் வயித்துலே தீ. இதிலே வெள்ளையன், கறுப்பன், ப்ரவுண் நிறத்தான்னு ஒரு பேதமும் இல்லை(-:

கிவியன் said...

துளசி, பெற்றொருக்கு வயிற்றில் தீ என்பது எல்லா தேசத்திலும் பொதுவாக இருக்கிறது. ஆனால் வயது பசங்கள் எதிர்பார்க்கும் சுதந்திரம் மிகப்பெரிதாக இருக்கிறது. ஒவ்வொரு பெற்றொரும் கத்தி முனை மாதிரி மிக கவனமாக கையாள கற்றுக்கொள்ள வேண்டும். வாழ்கையில் பெற்றொருக்கும் பசங்களுக்கு இது ஒரு வாழ்கை பாடம் மாதிரி அனுபவச்சித்தான் கற்றுக்கொள்ள முடியும்.