என்னத்த எழுத என்று 6 நாட்கள் ஓடி விட்டது. அவ்வளவாக பின்னூட்டமே விடாதவனுக்கு பின்னூட்டங்கள் வேறு.
வலைபதிவு எழுதுவது வெட்டி வேலையா? இல்லை என்றே தோண்றுகிறது. இதனால் எனக்கு என்ன நன்மை என்றெல்லாம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாது தொடங்கியதுதான். நிறைய யோசிப்பவன் ஆனால் எதையும் யாரிடமும் சொல்லவதில்லை. எனக்கு நான் சிந்திப்பதை ஒர் இடத்தில் எழுதிவைக்கும் ஒரு நல்ல வடிகால் வலைப்பதிவு. நான்கு வருடங்கள் தாண்டியும் வலைபதிவு எழுதுவது எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது.
இதை படித்துக்கொண்டிருக்கும் உங்களை போன்ற முகமரியா வாசகரை சென்றடைய முடிகிறதே இதைவிட வேறு என்ன வேண்டும்?
உங்கள் வருகைக்கும் என்னை நட்சத்திரமாக்கி ஒரு சந்தர்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த தமிழ்மணத்துக்கும் என் நன்றிகள் பல.
எனக்கும் எனக்கு முன்னால் நடசத்திரமானவர்களுக்கும் ஊக்கமளித்ததை போல வர இருக்கும் நட்சத்திரங்களுக்கும் உங்களின் ஆதரவு பல நல்ல பதிவுகளை வெளிக்கொண்டுவர நிச்சயம் உதவும்.
என் வலைக்கு வந்தவர்கள் நாளையும் என் வலைக்கு வருவீர்கள என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன்..
3 comments:
தமிழ்மணம் நட்சத்திர ஆக்கங்களுக்கு பாராட்டுகள் !
//என் வலைக்கு வந்தவர்கள் நாளையும் என் வலைக்கு வருவீர்கள என்ற நம்பிக்கையுடன் ...//
ஆஹா..... என்ன ஆடுதுன்னு பார்க்க வரணும்?:-)))))
நன்றி கோவியாரே. துளசி ஆடுறது என்ன பாடவே வெச்சுருவோமல மீண்டும் மீண்டும் வருக.
Post a Comment