புதிய முகம்

இப்படி ஒரு முகம்வேண்டுமா? லிஜ்ஜட் பாப்பட் ஒன்றை எடுத்துக் கொள்ளவும். 700-1000W மைக்ரோவேவ் அவசியம் தேவை. பாப்படில் சிறிதே சிறிது தண்ணீரை இரண்டு பக்கமும் தடவி மைக்ரோவேவில் வைக்கவும். பின்பு, ஹைபவரை தேர்ந்தெடுத்துக்கொண்டு, 1 நிமிடம் நேரத்தை தேர்ந்தெடுத்துவிட்டு, அப்படியே டிவி பார்க்க சென்றுவிட வேண்டும். சற்று புகைகிற நாற்றம் மூக்கை துளைக்கும் போது மைக்ரோவேவை நிறுத்தினால் மேற்கண்ட முகம் கிடைக்கும். அது எம்ஜியாராகவுக் இருக்கலாம் இல்லை The Dark Knight ஜோக்கர் மாதிரியும் வரலாம். அப்படியே டிவியில் ஒன்றிப்போய்விட்டீர்கள் என்றால், தீபாவளி மெர்குரியும் பார்க்கலாம்,அதற்கற்புறம் என்ன நடக்கும் என்பதை அவரவர் கற்பனைக்கு விட்டு விடுகிறேன்.

3 comments:

Thooya said...

:)

துளசி கோபால் said...

கருகுன ப்ரெட் ஸ்லைஸ்களை வச்சு ஓவியம் செய்யறான் வெள்ளைக்காரன்.

நாமோ இந்தியர்கள் அதுதான், நமக்குப் பப்படம்:-))))

சின்ன அம்மிணி said...

ஸ்காட்லாந்து போய் சமையல் பண்ண ஆரம்பிச்சுட்டீங்க போல இருக்கு