சரியாதான் வெடிச்சுது

சின்ன வயசுல தீபாவளிக்கு அவுட், ஆட்டம்பாம் எல்லாம் அப்படியே வெறும் தரையில் பத்த வெச்சு வெடிச்சா ஒரு எஃபெக்ட் இல்லாம போகும். அதனால கொட்டங்குச்சி, தகர டப்பா (மஞ்சள் பின்னனியில் பச்சை பனமரம் போட்ட டால்டா டப்பா மிகச் சிறந்தது), தெருவில் சிமெண்ட் குப்பைத்தொட்டி இருந்தால் அது விஷேசம். வீட்டுக்கான அஸ்திவாரத்துக்காக தோண்டிய குழியிருந்தால் மிக மிக சிறந்தது. ஆக ஒண்ணுமறியா விடலை பருவத்தில் சிவகாசி வெடியை வெச்சு இவ்வளவு `ஆராய்ச்சி ` செஞ்ச்சிருக்கோம்னா நெசமாவே அணுகுண்டு வெடிக்கனும்னா எவ்வளவு ஆராய்ச்சி செஞ்சிருக்கணும்??

அதத்தான் சமீபத்துல சந்தானம் கேட்டாரு. ஏம்பா இப்படி 11 வருஷம் கழிச்சு இப்படி சொல்லறியேன்னு எல்லோரும் கேட்டாங்க. இவருதான் அந்த குண்டு வெச்ச குழிக்கு பொறுப்பாளரா இருந்தாரு. ஆனா பாருங்க இப்பதான் அந்த அணுகரு இணைதல் குண்டு (Fusion) மாத்திரம் சரியா வெடிக்கலன்னு சந்தேகம் வந்திருச்சு.

இப்ப ரெண்டு பக்கம் ஆகிப்போச்சு. பல முன்னாள், இன்னாள் மற்றும் எதிர்கால பத்ம விபூஷன்கள் கடுப்பாகி கை சட்டையை உருட்டி விட்டு அதெல்லாம் சரியாதான் வெடிச்சது இனிமே மேற்கொண்டு வெடிச்சு பார்க்க தேவையே இல்ல அப்படின்னு அறிக்க மேல அறிக்க விட்டாங்க இன்னும் விட்டுக்கிட்டே இருக்காங்க. 1998ல வெடிச்சதுலேயே எக்கசக்கமான தரவுகள் (data) கிடச்சுட்டதால, அதவெச்சு இதவிட பெரும் வெடி செய்யர அளவுக்கு நாங்க கணனிலேயே ஒப்பியக்கம் (simulation) செஞ்சு இருக்கோம்ங்கறாங்க. இன்னொரு பக்கம் ஒரு பத்மஸ்ரீ, அதுகூட வேண்டாம், ஒரு அரசாங்க செக்ரட்டரி பதவி கூட கிடக்காத மத்த விஞ்ஞானிகள் சந்தானம் சொல்லரது சரிதான் அரசாஙகம் இத ஒரு கமிட்டி போட்டு மறு விசாரனை பண்ணனும்ங்கறாங்க.

விஞ்ஞான ஆராய்ச்சியில் சில சமயம் பல குழுக்கள் தங்களது முடிவுகளை வெளியிடும் போது தரவுகள் (data) ஒத்துபோவதற்காக கொஞ்சம் பிழை-விழுக்காடுகளை சேர்த்துக்கொள்வது மிக இயல்பானது. ஆனால் எந்த அளவுக்கு என்பது அந்தந்த விஞ்ஞானியின் நேர்மையை பொறுத்தது. ஆக பத்து அடி குழியை 40 அடி இருக்கலாம் என காட்ட வழியிருக்கிரது. அட ஆராய்ச்சில இதெல்லாம் சகஜம்பான்னு சொல்லும் விஞ்ஞானிகள் பலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஆனா இப்ப பிரச்சன சரியா வெடிச்சுதா இல்லயாங்கரது இல்ல. மிக நுட்பமா பாத்தா இதுக்கு பின்னாடி இருக்கக் கூடிய சாத்திய கூறுகள் அசாத்தியமானது.
இப்படி இருக்கலாம். கணனில சிமுலேஷன் பண்ணி பாத்தா ரொம்ப டவுட்டா இருக்கே இத நம்பி நாம ரொம்ப சவுண்டு விட்டுட்டோமோன்னு கைய பிசிஞ்சு இப்ப நிலம CTBTல கையெழுத்த போடுன்னு அமெரிக்கா காரன் வந்து நிக்கிரானேன்னு முழிபிதுங்கி யோசன பண்ணப்போதான் இந்த ஐடியா தோணுச்சு. யாராவது சரியா வெடிக்கலேன்னு கம்ளெயிண்ட் பண்ணனும், அதான் சாக்குன்னு ஒரு கமிட்டிய போட்டு அது முடிவு சொல்லர வரைக்கும் நாங்க CTBTய தொட்டுகூட பாக்க மாட்டோம்னு அறிவிச்சுடலாம். இல்லே போனா போகுதுன்னு இன்னும் இரண்டு வெடிச்சு பாக்கலாம். இப்படி வெட்டிச்சா அமெரிக்கா மேலும் பிரச்சன பண்ணும், இத வெச்சு அரசியல் கட்சியெல்லாம் ஆளாளுக்கு பிரச்சனைக்கு தீர்வுன்னு கிளம்பிருவாய்ங்க அப்புறம் அத வெச்சு தேர்தல முன்ன பின்ன கொண்டு வரலாம் அரசாங்கத்த மாத்தலாம்.....அஹா என்னவெல்லாம் சாத்தியம்...

அப்பா சந்தானம் பத்த வெச்சுட்ட.... இது வெடிக்குமா? இல்ல புஸ்ஸா?? பொருத்திருந்துதான் பாக்கனும்.

0 comments: