காற்று புதிதாய்

மனுஷனோட சில கண்டுபிடிப்புகளில், இதுக்கு மேல இதுல மேம்படுத்த ஒண்ணுமில்ல அப்படின்னு பல உபகரணங்கள் இருக்கிறது. அதுல ஒண்ணு இந்த மின்விசிறி. நமக்கு ரொம்ப பழகிப் போனது, மூன்று அல்லது நான்கு பட்டை(??)(fan blades) வைத்து, பல வகைகளில்.
இந்த மேசை மின்விசிறியில் ஒரு முக்கியமான் குறைபாடு என்னவென்றால் பாதுகாப்புக்காக கம்பி வலை இருந்தாலும் சில சின்னஞ்சிறிசுகள் விசிறி சுற்றும் போது விரலை நுழைத்து பார்க்க மிக ஆவலாக இருப்பார்கள். தவிர சிலது காத்து வருதோ இல்லயோ மகா சத்தம் போடும். ஆக மின்சாரத்தை வீணடித்து மிக குறைந்த ஆற்றல் (efficeincy) கொண்ட இந்த மாதிரி விசிறியை பிரிட்டனை சேர்ந்த ஜேம்ஸ் டைசன் (பை இல்லா தூசு உறிஞ்சி bagless vacuum cleaner கண்டுபிடித்தவர்) ஆராய்ச்சி செய்து இப்போது படத்தில் உள்ளது போல் பட்டைகளே இல்லாத மின்விறியை கண்டுபிடித்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளார். இருநூற்றுக்கு சில செண்டுகள் குறைவான பவுண்டுகளுக்கு இந்த வருட கிருஸ்துமஸ்க்கு மிக சிறந்த பரிசாக கொடுத்தாலும், நாலு மாசம் கழிச்சுதான் இங்க ஐரோப்பால ஊர்ல இத உபயோகப்படுத்த முடியும். குளிர்ல மின்விசிறியா?? ஆனா இது நம்ம ஊருக்கு மிக தேவையான உபகரணம்.

இதுக்கு இணையா தமிழ்மணத்த உருவாக்கின காசி ஆறுமுகத்தின் இடியாப்ப-மாயாஜாலத்தை கூறலாம்

”வெள்ளக்காரன் நீராவில இன்ஜின், கப்பல் விடுறான் இங்க என்னடான்னா இட்லியும் குழா புட்டும் பண்ணி உள்ள தள்ளரான்”...என்று எம்.ஆர் ராதா சொன்னது ஏனோ இந்த இடத்தில் தவிர்க்க முடியவில்லை, நிசமாவே உள்,வெ - கு எதுவுமில்ல, தவறாக சொல்ல வில்லை.

சரி இந்த பதிவு இப்படி தொழில் நுட்பம் என்று ஆகிவிட்டதால், மேலும் ஒன்றை பற்றி எழுதலாம் என்று தோன்றுகிறது.

நாம தினப்படி உபயோகப்படுத்தும், ஒட்டும் பட்டை அதாவது sticky tape அல்லது செலோ டேப் எக்ஸ் கதிர் வீச்சை வெளியிடக் கூடியவை என்று சொன்னால் பாதிபேர் அடுத்த முறை அதை கொஞ்சம் பயந்து கொண்டுதான் கையாளுவார்கள். எனினும் பயப்படத்தேவையில்லை. தகுந்த முறையில் அதாவது காற்றழுத்தம் குறைந்த வெளியில் இந்த டேப்பை உறித்து எடுக்கும் போது இவை எக்ஸ்-கதிர்களை வெளியிடும் என்பதை கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் முன்பாக இதை கண்டுபிடித்தாலும் சென்ற வருடம் அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் இதனை முறையான பரிசோதனை மூலம் நிரூபித்திருக்கிறார்கள். இப்போது இதை வைத்து குறைந்த விலையில் கையடக்க எக்ஸ்-ரே கருவிகளை கொண்டுவர முடியுமா என இதை தீவிரமாக மறு ஆராச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆக Old is gold... பழசா இருந்தாலும் புதுசா எதாவது செய்ய முடியும், உட்கார்ந்து படுத்து யோசிக்க வேண்டும்...

0 comments: