சிவசேனாவின் சமூகம்

சமீபத்தில் மும்பையில் 17 வயது பெண் காவல் நிலையத்திலேயே குடிபோதையில் இரண்டு கான்ஸ்டபிள்களால் கற்பழிக்கப்பட்டதை கண்டிக்கும் விதமாக தனது கட்சி பத்திக்க்கையான "சாம்னா"வில் இத்த கண்டிக்கறேன்னு ஆண்கள் எல்லோரும் மிருகம் போன்றவர்களேங்கற மாதிரி எழுதியிருக்கிறது. அது என்னா சொல்லுதுன்னா, கற்பழிக்கறது ரொம்ப தப்பு அதுவும் போலீஸ் ஸ்டேஷன்லேயே பண்றது மகா தப்புன்னு சொன்னாலும், இதுக்கு யார் காரணம்னா பொண்ணுங்கதான்னு ஒரே அடியாய் சொல்லுது. இது எப்படின்னாக்க அந்த காவல் நிலையத்தில நிறையா அரை குறை ஆடையோட இருக்கற பத்திக்கைகள்ள வர்ர படங்கள் இருந்துச்சாம். அதனால பொண்ணூங்க ஒழுங்கா அங்கன இங்கன காமிக்காம ஆடை உடுத்தினா ஊர்ல எவன் கற்பழிக்கப்போறான். ஆகா, இன்னா ஒரு ரீஸனிங்பா! இத்தோட விட்டுச்சா, அரை குறை ஆடையால ஒரு ஆம்பளே கவர்ந்திழுக்கப்படுகிறான் அப்போ அது யார் தப்பு? கவர்ச்சியாக ஆடை உடுத்திய பெண்ணால் கவர்ந்திழுக்கப்பட்டு எதோ ஒரு மிருக உந்துதலில் ஒரு ஆண் கற்பழித்துவிடுவதாக ஒரு காரணம் கொள்ளுமளவுக்கு இருக்கிறது இந்த கட்டுறை. ஆண்களுக்கு கட்டுப்பாடே கிடையாதா? ஆண்கள் மிருகம் போன்றவர்களா?

சேனாவின் இந்த கொள்கை, "பாரம்பரியத்தின் பாதுகாவலர்கள்" என்பதையும் தாண்டிச்செல்கிறது. ஆம்பள அப்படித்தான் இருப்பான்யா நீ ஒழுங்கா இருன்னு சொல்லுறது பெண்ணின் தனிமனித உரிமையை பறிப்பதல்லவா? இவர்களின் ஆணாதிக்க மனப்பாண்மையை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார்கள். இவர்களெல்லாம் நாடாள வந்தால், ஆஹா சமூகம் எப்படி இருக்கும்?

2 comments:

Narain Rajagopalan said...

சாம்னா வை தூக்கி குப்பையில போடுங்க. அது தெரிஞ்ச கலாச்சார காவலன் வேஷம் போடும் பத்திரிக்கைதானே. நேற்று பெங்களூர் பல்கலைக்கழகத்தில் லிப்ட் கேட்ட ஒரு பெண்ணை டாக்சி டிரைவர்கள் கடத்தி சென்று வன்புணர்ந்திருக்கிறார்கள். எல்லாம் முடிந்த பின் அந்த பெண்ணை தூக்கி கடாசி விட்டு போய்விட்டார்கள். அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் செய்யப் போனால், அது அந்த குறிப்பிட்ட வட்டத்தில் வராது என்று அவரை இன்னொரு காவல் நிலையத்திற்கு அனுப்பியிருக்கிறார்கள். இதை என்னன்னு சொல்வீங்க? அதைவிட கொடுமை, இது பெங்களூரில் எவ்விதமான அதிர்ச்சியையோ, போராட்டத்தையோ, எதிர்ப்பினையோ ஏற்படுத்தாதுதான்.

தாமு said...

பெண்கள் உண்மை பேசினால், ஒரு விஷயம் தெளிவாகும். தன்னை ,தன்னுடையதை தேவைக்கு அதிகமாக வெளிபடுத்த வேண்டும் என்று ஏன் தோன்றுகிறது . ஆழ்மனதில் ஒரு சிக்னல் உண்டு . அதுதான் தெரிய வேண்டும் . மற்றபடி நான் விஷயங்களை நியாயப்படுத்தவில்லை

-தாமு