நிலை கெட்ட மாந்தர்..

இது சென்ற வாரம் சந்தையில் நடந்தது. வாரா வாரம் சனி ஞாயிறுகளில் நடக்கும் காய்கறி சந்தைக்கு புள்ளாண்டனுடன் சனிக்கிழமை சென்றிருந்தேன். இங்குதான் எது வாங்கினாலும் பிளாஸ்டிக் பையிலே போட்டு குடுக்கறதுனால
கைக்கு நாலு பைகளை தூக்கிக்கொண்டு கடை கடையாய் தாண்டி வந்துகொண்டிருந்தோம். ஒரு கடையில் வாழைப்பழத்தை வாங்கிக்கொண்டு வேறு ஏதோ வாங்க நினைத்து பிறகு வேண்டாமென்று வந்துவிட்டேன். கைகளில் இருக்கும் பைகளையெல்லாம் ஆங்காங்கே கீழே வைத்துவிட்டுத்தான் பொருக்கி எடுக்கமுடியும் (இங்கே பொருக்கலாம் தெரியுமோ?). இப்படித்தான் வாங்கிய வாழைபழத்தை அம்போவென்று விட்டுவிட்டு அடுத்த கடைக்கு போயிட்டேன். இரண்டு நிமிடம்கூட இருக்காது அது கவனத்துக்கு வரவே அதைத் தேடி வந்த போது, அப்போதுதான் அது ஒரு "இந்திய பெருங்குடியின்" கையில் இருப்பது கண்டு திகைத்துவிட்டேன். சுற்று முற்றும் ஒரு பார்வை பார்த்துவிட்டு கையில் எடுத்துக்கொண்டு பேசாமல் நடையை கட்டிவிட்டார். (அய்யா அயிரம் பேர் வாழைப்பழம் வாங்கிட்டு அதே மாதிரி பையிலதான் போவான் இதுல உன்னோடதுதான்னு அதெப்படி சொல்லாலாம்னு முனுமுனுக்கறட்னு காதுல விழுது. அட நாமதான் நம்மால முடிஞ்சது சுற்றுப்புற சுழல் சுத்தமா இருக்கனும்னு ஒரு பையை குறைப்போமேன்னு கொத்தமல்லியையும் அதுல போட்டுவச்சதால கண்டுபிடிக்கிரது சுலபமாபோச்சு).

கேக்குரதா வேண்டாமான்னு யோசிச்சு பேசாமா வந்துட்டேன். யோசிச்சது என்ன?

1. ஒரு இந்தியன சக இந்தியன் நடு மார்கெட்ல வச்சு "என்னோடத எடுத்துட்டு போறீங்களேன்னு கேட்டு, சரிதான் இவிங்க இப்படித்தான் இருப்பாங்க போலிருக்குன்னு பாக்கறவங்க ஒரு தப்பான முடிவுக்கு வர வழிவகுக்கும்

2. அப்படியே கேட்டாலும், இது உன்னோடதுன்னு எப்படி சொல்லரன்னு" முன்னாடி முனுமுனுத்த மாதிரி கேட்டா நான் என்னத்த பண்ணமுடியும்?

3. சரி நிஜமாகவே ஞாபக மறதியாக எடுத்து சென்றிருக்கலாம்.

சரி போகட்டும், ஏதோ தேவை போலருக்கு என்றுவிட்டுவிட்டேன்.

ஆனால் முடிவில் தோன்றியதோ, ஒரு இந்தியன் இப்படி செய்கிறாரே என்று வருத்தமாக இருந்தது. (சுடரதுதான் சுடர போயும் போயும் இரண்டு டாலர் பெருமானமுள்ள பொருளையா சுடரது? )
அயிரம் மைல்கள் தாண்டி வந்து வாழ்ந்தாலும், இங்குள்ள மக்களின் நேர்மை கண்டாவது மாறியிருக்கலாம் (NZ-ல் 98 சதம் மிக நேர்மையானவர்கள், போட்டது போட்ட இடத்தில் அப்படியே இருக்கும் யாரும் தொடமாட்டார்கள், எடுத்தாலும் உரியவரிடம் கொண்டு சேர்க்க முயற்ச்சி எடுக்கப்படும். ஆசியாவினர் வந்த பின்புதான், குற்றங்கள் கூடிவருவதாக புள்ளிவிவரம்
சொல்கிறார்கள்). இப்படி தாமரையிலை தண்ணீர் போல சமயம் கிடைக்கும்போது தலையெடுக்கும் குணத்தை விடமாட்டேன் என்று வாழ்ந்தால், என்னவென்று சொல்வது?

4 comments:

Anonymous said...

அன்புள்ள சுரேஷ்,

வழைப்பழம் போனாப் போகட்டும். இப்படிக் கொத்தமல்லியை அநியாயமாக் கோட்டை
விட்டுட்டீங்களே!!!

ஆப்பிள் போயிருந்தா இன்னும் உத்தமம்:-))))))

என்றும் அன்புடன்,
துளசி.

பி.கு: எப்ப இங்கே விசிட்?

Mahamaya said...

கேட்க வேண்டியதைக் கேட்க வேண்டிய நேரத்தில் கேட்டுவிடாமலிருந்தால், அவர் தன் தவற்றை உணர்வது எப்போது?

வெளிநாடு என்பதால் அந்த நபருக்கு மட்டும் காதில் விழும்படியாவது நீங்கள் கேட்டிருக்க வேண்டும்.

Anonymous said...

நன்றி SK. ஊட்டுகாரம்மாவும் இதையேதான் சொன்னாங்க. இனி நடந்தால் கேட்டுருவோம்ல(?).

சுரேஷ்

தாமு said...

இன்னொன்று செய்திருக்கலாம் , முகவரி தெரிந்தால் வீட்டிற்கு தகவல் அளிக்கலாம். (எத்தனை வயசானா என்ன வீட்ல அடி வாங்கட்டும் )
-தாமு