மழைக்கூ
பளிச்சிடும் மின்னலில்
பூத்தது ஆயிரம் பூ
என் குடையில்.
முன்னேற்றம்
சோடியம் வேப்பர் இலையில் வழியும்
அரசமரத்துக் கீழ்
எப்போதும் புன்னகையுடன்
பிள்ளையார்.
வாழும் கணக்கு
எட்டடிக்கு மூன்றடி
நிலப்பரப்பின்
மூலையில்
ஒரு ஜான் கயிறு
கொண்டு கட்டப்பட்ட
மாடு மேயும்
பரப்பளவு என்ன?
என்று ஏழாம் வகுப்பில்
போட்ட கணக்கின் விடை
ஐயா! நடு வயதில்
இப்போது
புரரிகிறதய்யா.
Ego
புறத்துக்கு நான்
என்னை காட்டியிருக்கும்
அடையாளம்
அகத்துள் விரியும்
வெறுமை
சிதைத்துவிடுமோ
என்றஞ்சி,
கடந்த காலத்தை
பகைத்துக்கொண்டு,
நிச்சயமில்லா
எதிர் காலத்தில்
காட்டிய அடையாளத்தையே
காப்பற்ற வேண்டி,
நழுவிப் போகும்
நிகழ் காலத்தில்
நித்திய அவதி.
பிகு: திருமா, மருத்துவர் , ஏனையர் பொருத்தருள எல்லாம் வல்ல...
3 comments:
சுரேஷ்...
முன்னேற்றம் சூப்பர்.....
பிள்ளையார் கூட "தொழில்நுட்பத்திற்கு" அடையாளமாகி விட்டார் ம்ம்ம்ம்
தொடர்ந்து எழுதுங்கள் (தோண்டுங்கள்)
சுரேஷ்,
கவிதைகள் நன்றாக இருக்கின்றன.
வந்தமைக்கும், வாசித்து பின்னூட்டமிட்டமைக்கும்
கணேஷுக்கும், முத்துவுக்கும் நன்றி
Post a Comment