ஆஸ்த்ரேலியா - இந்தோனேஷியா பகையும்..

அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்த மாதிரி ஆஸ்த்ரேலியா இந்தோனேஷியா மீது படையெடுத்தால் அது ஆச்சர்யபடுவதற்க்கில்லை. அந்த அளவுக்கு சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் 4-1/2 கிலோ போதை பொருள் வைத்திருந்ததாக ஷப்பெல் கோர்பி என்ற 27 வயது ஆஸ்த்ரேலிய பெண் கைது செய்யப்பட்டு மே 28ம் தேதி 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். இதை நேரடியாக TVல் ஒலிபரப்பப்பட்டபோது ஆஸ்த்ரேலியாவே அந்த 5 நிமிடங்களுக்கு ஸ்தம்பித்துப் போய் பார்த்துக்கொண்டிருந்ததாம்.

இது சரியா தவறா என்று சிண்டை பிய்துக்கொண்ட்டு விவாதிக்கிறார்கள். ஒட்டு மொத்த ஆஸ்த்ரேலியர்களும் இந்தோனேஷியாவை புறக்கணிக்க வேண்டுமென்கிறார்கள். இதன் மூலம் இந்தோனேஷியா மீது மேற்கத்தியர்கள் கொண்டுள்ள அபிப்ராயம்:


1. நாணயமற்ற அரசு
2. படிப்பறிவில்லாத மக்கள்
3. ஊழல் நிறைந்த நாடு
4. போலிசும் நீதிமன்றமும் நேர்மையில்லாதது, ஊழல் நிறைந்தது.


ஆகவே மக்களே (மேற்கத்தியர்களுக்கு) இந்த லீவுக்கு பாலி போகலாம்னு இருந்தியா? வேண்டாம். ஆஸ்த்ரியாவோ, லிஸ்பானோ இல்லை பாரீசுக்கோ போங்களேன்னு உபதேசம் செய்கிறார்கள். இப்பத்தான் சுனாமி வந்து ஒரு வழியாக மீண்டு கொண்டிருக்கிறார்கள். சுற்றுலாவை நம்பியிருக்கும் ஒரு நாடு. இந்த மாதிரி கண்மூடித்தனமாக ஒரு நாட்டை பகிஷ்கரித்தல் சரியா? அங்குள்ள ஹோட்டல் தொழிலாளியோ, கைவண்டி இழுப்பவனோ, டாக்ஸி ஓட்டுபவனோ இவர்களை என்ன செய்தான்?

இதன் பின்னனி என்ன?போதை பொருள் வைத்திருந்ததால் மரண தண்டனை. இது இந்நாட்டின் மிகதெளிவாக அறிவிக்கப்பட்ட சட்ட விதி. கோர்பிக்கு அளித்த நீதி வாக்குமூலம் கூட நிரபராதி என்று நிரூபிக்கும் வரை (Guilt until proven inocence) என்றுதான் குறிபிடுகிறது. அனால் கோர்பி எப்படி நிரூபிப்பார் அதுதான் கேள்விக்குறியாக உள்ளது.

அஸ்த்ரேலியாவிலோ, அமெரிக்காவிலோ 4-1/2 கிலோ போதை பொருளை எடுத்துக்கொண்டு போய் கையும் களவுமாக பிடி பட்டால், "இல்லீங்க ஏதோ எனக்கே தெரியாம நடந்து போச்சுன்னு" சொன்னா அங்க உள்ள ஜட்ஜு "சரிடா கண்ணா இனிமே பாத்து நடந்துக்கோன்னு" அனுப்ச்சுடுவாங்களா?இதனால ஒரு நாடுட்கெதிராக கண்டமேனிக்கும் வசை பாடுவதும், அங்கு உள்ள மக்கள் மொத்தமாக கேவலமானவர்கள் என்றும் சொன்னால் அது சரியாகுமா?

இவுங்களுக்கு (மேற்கத்தியர்) இவுங்க ஊர்ல காக்கா தலைகீழா பறக்கும்னு சொன்னா நியாயம். இதையே பக்கத்து ஊர்க்காரனும் சொன்னான்னா அவிங்கெல்லாம் காட்டுவாசிங்க. இவிங்களும் இவிங்க மேண்மையும்...ஹும்.

7 comments:

கிவியன் said...

இன்னாட திரும்ப திரும்ப இதையே
வலையேத்திட்டிருக்கானேன்னு நினைக்கப்படாது. போன முறையில் பின்னூட்டப் பெட்டி வேலை செய்யாததுனால அத சரி செஞ்சு மறு பதிவா போட்டிருக்கிறேன். பின்னுட்டமிட நினைத்தவர்கள் (நேரமிருந்தா) பின்னூட்டமிடலாம். நன்றி.

Sri Rangan said...

சுரேஷ்,மேலத்தேயம்-கீழத்தேயம் என்ற கருத்தியலானதுதாம் நீங்கள் சுட்டிக்காட்டியது.இது மேற்குலகின் அதி திமிர்த்தனமான இனவாதமாகும்.இந்தியாவில் எப்படித் தலித்துக்களைப் பற்றிய கருத்தியல் நிலவுகிறதோ, அதேபோன்றே இவர்களும் கீழத்தேச மக்களைப் பற்றி இப்படி உருவாக்கி வைத்துத் தமது நலன்களையடைகிறார்கள்.இன்றும் நமது மகாபாரதக் கதைகளில் கட்டப்பட்டுள்ள அரக்கரெனும் கருத்தியலைக் கட்டுடைத்துப் பாருங்களேன்,அங்கே நமது நிலை புரிந்துவிடும்!உடமையாளர்கள் எங்கேயும் ஒரேமாதியே சிந்தித்துத் தமது உடமைகளைக்காக்க-அந்தந்த நாட்டின் காலவர்த்தமானத்திற்கொப்பக் காரியமாற்றுகிறார்கள்.இதில் மனிதத்தோல் மட்டுமே வித்தியாசம்.மற்றவை யாவும் ஒரு வர்க்க நலனைக் கொண்டவையே!

கிவியன் said...

நன்றி ஸ்ரீரங்கன்,
மகாபாரத்தை பிரித்து பார்க்கலாம்தான். ஆனா இங்கே குழாயடி மாதிரி போயிடுமேன்னுதான் விஷயத்த பூடாகமா தொட்டு விட்டுடேன். உங்கள் பார்வை சரிதான்

சுந்தரவடிவேல் said...

கிவி,
அந்தப் பெண் இந்தோனேஷியாவில் பிடிபட்டார்/தண்டிக்கப் பட்டிருக்கிறார் (அப்படித்தானே?) என்று எங்கேனும் குறிப்பிட்டால் சட்டென்று புரியும்!

கிவியன் said...

//அந்தப் பெண் இந்தோனேஷியாவில் பிடிபட்டார்/தண்டிக்கப் பட்டிருக்கிறார் (அப்படித்தானே)// அப்படியேதான்.

இதுக்குதான் குறைந்தபட்சம் விகடன் மாணவர் பத்திரிக்கையாளராகவாவது
பயிற்சி எடுத்திருக்க வேண்டும். நன்றி சுந்தரவடிவேல்.

துளசி கோபால் said...

தப்பு நடந்திருக்கற மாதிரிதான் இருக்கு!

இந்தோனேஷியாவுலேதான், போதைப் பொருள் கடத்துனா தண்டனை பயங்கரமுன்னு
தெரிஞ்ச விஷயம்தானே? அப்படி இருக்கறப்ப ஒருத்தி நாலரைக்கிலோ(!!!!!!) பொருளை,
பூட்டாத ஓரு 'பாடி போர்டு'வச்சுருக்கற பையிலே வச்சுக் கொண்டுபோக நினைப்பாளா?

எம்.கே.குமார் said...

இப்போதைக்கு போர் தொடுத்தா கொஞ்சம் கஷ்டமப்பு. இருங்க, இன்னும் இருக்கும் எல்லாத்தையும் வெட்டி புடுங்கி எடுத்துகிட்டு அப்புறம் வந்து எல்லாத்தீவுலயும் கொடிய நடலாம். எவன் கேப்பான்?

முஸ்லீம் நாடா இருந்தாலே முஸ்லீமாலும் பிரச்சனை, மூஸ்லீம் இல்லாதவனாலும் பிரச்சனை!

ஆனாலும் அந்தப்பொண்ணு பாவம், ரொம்ப அழுவுதுப்பா!

எம்.கே.குமார்