"மால்" என்னும் ராட்சச இயந்திரம்...

இந்த வார இறுதியில் இங்கு பக்கத்திலுள்ள "Mall" எனப்பட்டும் ஒரு வணிக மையத்துக்கு சென்றிருந்தேன். ஒரு 8 மதங்களாக மற்றியமைக்கும் பணி நடந்துகொண்டு வருகிறது. ஒரே தளத்திலிருந்த பார்க்கிங்கை இரண்டு தளமாக்கி மேலும் கடைகளை விரிவு படுத்தி வேலை என்னமோ இன்னும் முடிந்த பாடில்லை. நான் பாட்டுக்கு பழைய விதத்திலுருந்த மால் நினைப்பில் ஒரு நுழைவாயில் புகுந்து கடைகளை பார்த்துக்கொண்டே போகையில் புதிய சுவர் எழுப்பி "மன்னிகனும் அப்படியே வந்த வழியால போயி நீங்க நுழஞ்சதும் விட்டீங்க பாருங்க ஒரு "தானியங்கி படி" (அதாங்க escalator) அதுல போனின்னா இன்னும் கடைகள் கீது" ன்னுச்சு. சரிடான்னு போனா அங்க அந்த படிகிட்ட இன்னொரு பலகை வச்சு இன்னின்ன கடைகள் அப்படியே மாலுக்குவெளில போய் லெப்ட்ல போனின்னா வந்துடும்னுச்சு. சரிதான் அங்க போனா, "மவனே நீ-லா இன்னாத்துக்கு வந்தே சும்மா ஜன்னல நின்னு ஜொள்ளுவுட்டுட்டு போயிடப்போறே பேசாம பார்க்கிங் போயி கார எடுத்துட்டு வீட்டுக்கு போயிரு"ன்னு இன்னொரு பலகா வச்சாலும் ஆச்சர்யபடுறதுக்கில்லேன்னு, மேலே ஏறிப்போயிட்டேன். அப்படி போகரச்சேதான் முன்னால மால்கம் க்லாடுவெல் (Malcolm Gladwell) எழுதிய ஒரு கட்டுரை ஞாபகத்துக்கு வந்தது.

இந்த மாதிரி "மால்" என்னும் கூட்டுக் கடை அமைப்பை முதன் முதலில் நிறுவியவர் விக்டர் க்ரண் (Victor Gruen) என்பவர். ஆஸ்த்ரியவிலுள்ள வியன்னாவிலிருந்து கையில் வெறும் 8 டாலர்களும் கட்டிடக் கலைக்கான பட்டமுமாக அமெரிக்காவில் குடியேறிய இவர் 1954ல் ஏற்ப்படுத்திய இந்த மாலானது, இன்று இந்தியவிலும் பல நகரங்களில் வரத்துவங்கி, மாபெரும் புரட்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. இவரை தொடர்ந்து, அல்ப்ரெட் தப்மேன் (Alfred Taubman) இதனை மேலும் சில மாறுதல்கள் செய்து செம்மையாக்கினார். ஒரு மால் என்பது எப்படி இருக்க வேண்டும் என்ற இலக்கணங்கள் இவர்கள் ஏற்படுத்தியதே. இரண்டு தளங்களுக்கு மேல் இருக்கக் கூடாதென்பதும், கடைகளை எதுவும் மறைக்கக் கூடாதென்பதும், உண்ணும் விடுதிகள் எங்கே இருக்க வேண்டும் என்பதும், இவர்கள் ஏற்படுத்திய சில முக்கிய விதிகள். வாடிக்கையாளருக்கும் பொருளுக்குமிடையில் எந்தத் தடைகளுமிருக்கக்கூடாதென்பதால் மிக கவனமாக வடிவமைத்தன்ர். இதனை "உச்சக்கட்ட தடைகள்" (threshold resistance) என குறிப்பிடுகிறார்கள். இதனால்தான், முதல் தளத்திலிருந்து இரண்டாம் தளத்திலுள்ள கடைகளிலுள்ளவற்றையும்காண வசதியாய் கண்ணாடிகளால் ஆன கைப்பிடிகளை அமைத்தனர். மிக விரிந்து ஒரே தளத்தில் பரந்து விரிந்து மால் அமைத்தால், வாடிக்கையாளர் சோர்ந்து போய் மெக்டொனாலாட் ஹாப்பி மீல் வாங்கி சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குபோய் விடக்கூடுமாகையால் அதிகபட்சமாக இரண்டு தளத்தையமைப்பதால், ஒரு வழியாக வந்து கீழ்தளத்தை கடந்து கடைசியிலுள்ள எஸ்கலேட்டர் வழியாக மேல் தளத்துக்கு வந்து மீண்டும் கீழே வரும்படி இருந்தால் வாடிக்கையாளர் மாலிளுள்ள எல்லா கடைகளையும் பார்க்கும் வாய்ப்பு அதிகம் என வகுத்தனர்.இவர்களது அமைப்புப்படி ஒரு மால் எப்படியிருக்க வேண்டுமென்றால் எலிப்பொறி போன்று "வடிக்கையாளர் பொறி" (customer trap) யாக இருக்க வேண்டும்.

தான் பிறந்து வளர்ந்த வியன்னாவில் எப்படி நகர்புறம் அமைந்திருந்த்தோ அதே போன்று தான் சுவீகரித்த நாடான அமெரிக்காவில் புற நகரங்களையும் அமைக்க எண்ணித்தான் இந்த மால் என்னும் கடையமைப்பை க்ரண் உருவாக்கினார். ஆனால் இதில் முதலீடு செய்தால் பெரும் லாபமீட்டலாமென பலர் முதலீடு செய்தனர். பின்னால் அரசாங்கமும் விரிச்லுகைகளிக்க அதுவே காட்டுத் தீ போல பரவி இப்போது எங்கு பார்த்தாலும் மால்தான். கடல்போன்று கார்களுக்கிடையே மால்களிருப்பதை பார்த்து மிகவும் நொந்து போய்விட்டார் க்ரண். அமெரிக்காவின் புற நகர்கள் "பீதியடையச்செய்யும் வீதிகள்" நிறைந்ததாகயிருக்கிறதென்று வருனித்தார். ஒரு வகை தன்னுணர்வு தாக்குதலுக்கு ஆட்பட்டு தன்னுடைய சொந்த ஊரான வியன்னாவில் ஒரு கிராமப்புறத்தில் வீடு கட்டிக்கொண்டு போய்விட்டார். ஆனால் அங்கு என்ன நடந்தது? வியன்னாவின் புறநகரில் பெரிதாக மால் அமைக்கும் பணி துவங்கியது. "ராட்சச ஷாப்பிங் இயந்திரம்" என க்ரண் வருணிக்கும் இது தன் வியன்னாவின் சிறிய கடைக்காரர்களையும் நகரத்தின் உயிரையுமே நசுக்கிக்கொண்டிருந்தது. இது க்ரண்னை மிகவும் அதிச்சிக்குள்ளாக்கியது. விக்டர் க்ரண் அமெரிக்காவை வியன்னா போலாக்க "மாலை" கண்டுபிடித்தார். ஆனால் நடந்ததென்னவோ வியன்னா அமெரிக்காவாகிக்கொண்டிருக்கிறது. இது இந்தியாவுக்கும் பொருந்தும்.

இதன் ஆங்கில மூலம் இங்கே The Terrazzo Jungle சுட்டவும்.

7 comments:

jeevagv said...

நல்ல பதிவு சுரேஷ்!

Anonymous said...

நல்ல பதிவு சுரேஷ்!!!

துளசி கோபால் said...

நல்ல பதிவு சுரேஷ்!!!

போன அன்னனிமஸ் நாந்தான்!!!

இராதாகிருஷ்ணன் said...

நல்ல பதிவு!

கிவியன் said...

ஜீவா, துளசி, இராதாகிருஷ்ணன்,

வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும் நன்றி

Anonymous said...

நியூசிலாந்தில் இருந்து இன்னொரு சிங்கமா? கலக்குறீங்க சுரேஷ்!

Anonymous said...

நன்றி மூர்த்தி, சிங்கமெல்லாம் இல்லை. அப்புறம் யாரும் பயந்துக்கினு வரமேயே போய்டுவாங்க.

சுரேஷ்