சிறுகதை - கானல்நீர்

இது முகமூடியின் சிறுகதை போட்டிகின்னே எழுதினது.
2000 வார்தைக்கு மேலயிருந்தா எதோ பாத்து போட்டு குடு முகமூடியண்ணா!
***********************************************************************


வளைவு நெளிவுடன் செதுக்கிய 'டீப்பாயின்' ஒரு காலை மூலையில் சாத்திவைத்துவிட்டு தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து துடைத்துக்கொண்டே மச்சகாளை ஆசாரி மூன்றாவது முறையாக வீட்டு வாசலுக்கு வந்து நீண்டு கிடக்கும் தெருவை பார்த்துக்கொண்டிருந்தார். தெருக்கோடியிலிருக்கும் மூப்பாத்தம்மன் கோவிலை ஒட்டி வலது புறமாக திரும்பும் தெருமுக்கையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். இந்த போஸ்ட்மேனை இன்னுங்காணோம். யார் வீட்டிலாவது, நீர் மோர் அல்லது பழஞ்சோத்து தண்ணி வாங்கி குடிச்சுட்டு அரட்டை அடிச்சிட்டிருப்பான். மச்சகாளை பேருக்கு ஒரு மண்ணும் வரலேன்னானும் இவரு வீட்டுக்கு எத்தனையோ முறை வந்து திண்ணையில் உட்கார்ந்து கொண்டு ஊர்கதையெல்லாம் அலசிப்புட்டு அவங்கிளம்பரேன்னாலும் இவரு வம்படியா பேசிட்டிருப்பாரு. அனா இப்போ இவருக்கு பயங்கர கோவமா வருது போஸ்ட்மேன் மீது. வெட்டிப்பய, இழவெடுத்தவன்னு என்னென்னவோ முனுமுனுன்னு திட்டிட்டே திண்ணேல உட்கார்ந்து புகையிலை பொட்டலத்தை பிரித்தார். அவரது நெற்றியில் விழுந்த கோடுகள் சொல்லியது அவரது சிந்தனை தங்க்ச்சாமியை பற்றியது என்று.

தவமிருந்து பதிமூன்று வருடங்களுக்கு பின்பு பிறந்தவன். படிப்பு வராததுல இவரு மனசு ஒடஞ்சுபோய்ட்டாரு. நாலங்கிளாஸ் முழுப்ப்ரிட்சை கூட எழுதவில்லை. ஸ்கூலுன்னு வார்த்தைய இன்னொருதரம் சொன்னீன்னா வீட்ட விட்டு ஓடிருவேன்னு சொன்னதால அந்த வார்த்தைய கூட மறந்துபோய்ட்டாரு. சரி தன்னோட குடும்ப தொழிலான தச்சு தொழில் இஷ்டமில்லேங்கரானேன்னு விவசாயம் பாருடான்னு கையிலிருந்த காசபோட்டு நிலம் வாங்கி அதையும் செஞ்சுபாத்தான். மச்சகாளைக்கு ரொம்ப பெருமையா இருந்துச்சு. ஆனா ரொம்ப நாள் நீடிக்கலே. தொடர்ந்து நாலு வருசம் மழை இல்லாம நிலத்தை அடகுக்கு வைத்ததுகூட அவருக்கு பெரிதாகப் படவில்லை. ஆனால் சகவாசத்தால் தானும் ஊரை விட்டு பட்ணத்துக்கு போகிறேன் என்று அவன் ஒற்றைக் காலில் நின்றபோது செய்வதறியாது நொந்துபோனார். தன் வயதில் எத்தனையோ பேர் ஊரை விட்டு சென்றாலும் பிறந்த மண்ணை விட்டு போவது பற்றிய எண்ணம் கூட அவருக்கு ஏனோ தோன்றவில்லை. இப்போது இவன் போகிறேன்னு சொல்றப்போ அவன இருக்க வெக்கறதுக்கான வழியும் தெரியாமல் தடுத்து நிறுத்தறதுக்கான காரணத்தை புரியவைக்க முடியாமல் கிட்டத்தட்ட பாதி செத்துவிட்டார் மச்சக்காளை. பிறகு அவனும் பிழைக்க வழிதேடி சென்னைக்கு வரும் அயிரத்தில் ஒருவனாகி, அங்கேயிங்கே என்று அலைந்து திரிந்து பிறகு எதோ ஒரு தனியார் மருத்துவமனையில் காக்கியுடை அணிந்து வார்டனானான். பின்னாடி, ஆளகீள பிடிச்சு தாசில்தார் ஆபீஸ்ல பியுனா ஒரு நிறந்தர வேலைய தேடிக்கிட்டதுல மச்சக்காளைக்கு ஒரு ஆறுதல் எங்கயோ கஷ்டப்படாம இருக்கானேன்னு. அதுக்கப்புறம் அவனுக்கு கல்யாணத்த பண்ணிவெச்சு பொண்ட்டாட்டியோட அவன் சென்னைக்கு போனதும் இததெல்லாமும் நடந்து கிட்டத்தட்ட பத்து வருஷமாச்சு. பிறந்த மண்ணை விட்டு போவதில்லை என்றிருந்தாலும் தன் மகன் கூப்பிடுவான் அவனுடன் போகலாமென்று நினத்தார். ஆனால் அது நிகழவேயில்லை. 'அப்பா கூப்டாலும் வரமாட்டார்னு அவன் நினைச்சிருப்பான்னு' இவரு மனச தேத்திக்கிட்டாரு.

எட்டு வருஷமாகியும் பேரக்குழந்தைய பாக்க முடிலியேன்னு தன்னோட குறை தன் மகனுக்கும் தொடருதேன்னு மனசுல போட்டு புழுங்கிட்டிருக்காரு. தினமணிலயோ, தினதந்திலயோ படிச்சதவச்சு இப்போ இருக்கற முன்னேற்றத்த கேள்விப்பட்டு சாமிக்கு மொட்ட போடரது நேந்துவிடரதுன்னு பண்ணிணாலும் கூடவே கட்டாயம் நல்ல டாக்டர்ட்ட போய் காட்டி குழந்த பெத்துக்றதுக்கான வழிய பாருன்னு விலாவாரியா லெட்டர் எழுதிபோட்டு ஒம்போது மாசமாச்சு. அவன் ஊருக்கு வந்தே நாலு வருஷமாகிப்போச்சு. தினமும் அவனிடமிருந்து கடிதத்தையோ இல்லை அவனே நேராக கிளம்பி வந்துவிடுவானோ என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்.

இன்றும் அதேதான். போஸ்ட்மேனை எதிர்பார்த்து புகையிலையை மென்றுகொண்டிருந்தார். ஆங்காங்கே வெளிரிப்போய் வியர்வையால் தொப்பலாக நனைந்துபோன பழுப்பு யுனிபார்மில் முன்னால் சக்கரத்தில் இரண்டும், பின் சக்கரத்தில் ஒரு கம்பியும் காணமல் போன ஒரு சைக்கிளில் கீக்-கீக் என்று ஒரு தாள லயத்தோடு வாயெல்லாம் பல்லாக போஸ்ட்மேன் வந்து சேர்ந்தான்.

"என்னப்பு கடுகடுன்னு உக்க்காந்திருக்கீக, ஒங்கக்கா இன்னக்கியும் காசு கேட்டு தகராரு பண்ணுச்சாக்கும்?" என்று வந்து திண்ணையில் உட்கார்ந்தான்.

புருவத்தை சுருக்கி அவனையே முறைத்துக்கொண்டிருந்தார்.

"ஒரு சொம்பு தண்ணீ கொடுப்பு சரியான வெய்யிலு" என்றான்.
வீட்டுடனிருந்த அக்காவின் மகள் கொடுத்த தண்ணீரை வாங்கி குடித்துவிட்டு, தான் கொண்டுவந்த பையில் தேடிக்கொண்டே
"இன்னக்கி நரி முகத்துல முளிச்சியோ ஒம்புள்ளேட்டருந்து மணியாடரு
வந்துருக்கு" என்று அவன் சொல்லி வாய் மூடவில்லை மச்சக்காளை மிகவும் பரவசமடைந்து சட்டென்று எழுந்துபோய் வேலியோரமாக அப்போதுதான் போட்ட புகையிலையை துப்பிவிட்ட்டு ஒட்டமும் நடையுமாக வந்தார்.

"இங்க பாருடா கிழவன் துள்ளிக்கிட்டு வாரத" என்று கிண்டல் அடித்ததையும் பொருட்படுத்தாது "லெட்டர் எதாச்சும் எழுதியிருக்கானா ?" என்று கேட்டார்.

"லெட்டர் என்னாத்துக்கு ஒனக்கு. சொளயா ஐநூறு ரூபா அனுப்பியிருக்கான் தீவாளிக்கு அதுபோதாதா ? என்றவாரே ஒரு ரூபாயை கமிசனாக எடுத்துக்கொண்டு அவரிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு மணியாடரின் கீழ் பாகத்தை கிழித்து கொடுத்துவிட்டு
"தீவாளி நேரமில்ல நிறையா மணியாடரு இருக்கு அதான் லேட்டு, நா வரேன்" னு கிளம்பிச்சென்றான். எதாவது எழுதியிருப்பான்னு அந்த மணியாடர் துண்டை திருப்பிப்பார்த்தார் மச்சக்காளை.

"இந்த தீபாவளிக்கும் என்னால வர முடியாது. இத்துடன் ரூபா ஐநூறு அனுப்பியுள்ளேன் - தங்கச்சாமி" என்றிருந்தது. மச்சக்காளயின் முகத்தில் ஏமாற்றம் மேகத்தின் நிழல் மண்ணில் படர்வதுபோல தழுவி நின்றது. நீண்டநேரம் திண்ணையிலேயே மெளனமாக உட்கார்ந்திருந்தார்.

10 comments:

துளசி கோபால் said...

பரிசு கிடைச்சதா?

கிவியன் said...

கள்ளவோட்டுக்கு ஏற்பாடு பண்ணி பரிச வாங்க்கிப்பிடலம்னு தா பாக்கேன். ஆன முடிவ மூடியே சொல்லீருவேன்ங்றதால வேற ஏதாச்சும் பண்ணனும். Aug 21 வர கிடக்கே. பாப்பம்.

முகமூடி said...

// 'அப்பா கூப்டாலும் வரமாட்டார்னு அவன் நினைச்சிருப்பான்னு' // நிறைய எடத்துல இந்த ப்ரச்னைதான். மனசு விட்டு பேசாம நினைப்புலயே தப்பு பண்ணிடுவாங்க...

// முடிவ மூடியே சொல்லீருவேன்ங்றதால // நான் இல்லீங்கோ.. நடுவர்... யாரும் நடுவர் கிடைக்கலையின்னு வையுங்க... அப்புறம் ஓட்டுதான்.. அதுல பாத்துக்கலாம் விடுங்க

ஏஜண்ட் NJ said...

பதில் மரியாதை செய்ய வந்துள்ளேன் :-)

இஃது,

மண்வாசனை வீசும் நல்லதொரு கிராமத்துக் கதை !!

பாரதிராஜாவை அப்படியே நம் கண்முன்னே கொண்டுவந்து, கதையை படம் பிடித்துக்காட்டியது போன்றதொரு எழுத்து நடை !!!

ஆஹா... பாராட்டுக்கள்.

பரிசு.... cat on the wall!

Kangs(கங்கா) - Kangeyan Passoubady said...

சுரேஷ் முயற்சியே வெற்றிக்கு அறிகுறி...
வெற்றி பெற வாழ்த்துக்கள்

கிவியன் said...

ஞானத்துக்கும் கங்காவுக்கும் என் நன்றி.

கிவியன் said...
This comment has been removed by a blog administrator.
தருமி said...

எங்க ஊரு ஆசாரி ஒருத்தரு ஞாபகம் வந்திச்சு; ஊர்வாடை வந்திருக்கு.

முயற்சிக்கு வாழ்த்துக்கள்; வெற்றிக்கும் தான்.

கிவியன் said...

வருகை தந்து, படித்து, பின்னூட்டமும் இட்டதற்கு நன்றி தருமி.

அதென்னவோ நம்ம வலைபதிவு மாத்திரம் "மறுமொழியப்பட்ட முந்தைய நாள் ஆக்கங்கள்"ளயோ "
இல்ல "கடந்த 7 நாட்களில் எழுதப்பட்டவற்றில் சிறந்த 25 - வாசகர் பரிந்துரை"லயோ (இதுலா கொஞ்சம் ஓவரா தெரிலன்னு யாரோ முனுமுனுக்கறது கேக்குதுதான்) வரவே மாட்டேங்குது. யாராவது நம்ம template-அ view sourceல் பார்த்து என்னான்னு சொன்னா அவுங்க பேர்ல ஒரு கலம்பம் பாடலாம்னு இருக்கேன்.

tamil said...

அருமை! வாழ்த்துக்கள்.