நியுஸி மாநாடு - இறுதி பகுதி

அந்தா இந்தான்னு ஒரு வழியா நல்லபடியா மாநாட்ட நடத்தி முடிச்சுட்டோம். ஏகப்பட்ட விஷயங்கள் இருந்ததால, மக்களெல்லாம் அங்க இங்கன்னு இருந்ததால அக்டோபர் (நன்றி ஷ்ரேயா) செப்டம்பர் 30 இரவு 8 மணிவாக்குல கூட்டம் நடந்தேறியது. என்ன நடந்ததுன்னு ஏற்கனவே விலாவாரியா துளசி சொல்லிட்டதால விட்டுபோன மிச்சசொச்சம் இப்பதிவு.

எப்படிரா இப்டி இவுங்களால எழுத முடியுதுன்னு உங்கள்ள நிறைய பேருக்கு தோணியிருக்கும். நேர்ல பாத்தப்பதான் புரிஞ்சுது. பேசுறதே அப்படித்தான். split-second ன்னு சொல்வாங்களே அது மாதிரி எத பத்தியும் ஜோக்தான். மிக அபிரிதமான் நகைச்சுவை உணர்வுள்ளதுனாலதான் இவுங்களால இப்டி எழுத முடியுது என்பதை புரிந்துகொண்டேன். மிக ரசனையுடன் சமீபத்தில் கட்டிய (யானைகளும் அதன் முகமுடைய தெய்வமும் நிறைந்த) வீட்டை சுற்றி காட்டினார். உஞ்சல் (நம்ம தமிழ்நாடு ஸ்டைல்ல) போட்ட ஒரே வீடு நியுஸியிலேயே அநேகமாக துளசி வீடாகத்தான் இருக்கும்.

எதோ புராதான புகைபட டப்பாவை (சலங்கை ஓலி மாதிரி) வைத்து அவங்க இருட்டடிப்பு செஞ்சு படம் போட்டாங்க. அதுனால இங்க 'கப்பு' துளசியுடன் இருக்கும் தெளிவான படம்.




கப்புவுடன் துளசி

copyright NZ-blog conference 2005

12 comments:

கிவியன் said...

நண்பர்களே,

இந்த பதிவ போட்ட பின்னாடி துளசியிடமிருந்து அஞ்சல் வந்தது. கப்பு மிகவும் கவலைக்கிடம்மாக இருப்பதாகவும் எந்த நேரமும் உயிர் பிரிய்க்கூடும் என எழுதியிருந்தார். நான் எதார்த்தமாக கப்புவுடன் துளசி என படத்துக்கு குறிப்பிட்டது மிக தற்செயலானது, அனால் அது கப்புவுக்கு இறுதியானது என நினைக்கும்போது வருத்மாக உள்ளது.

கிவியன் said...

நாளை கப்பு இருப்பது அரிதென்பதால் இப்பதிவு கப்புவுக்காக...

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

//அக்டோபர் 31 இரவு 8 மணிவாக்குல கூட்டம் நடந்தேறியது. //

நியூஸி வலைப்பதிவர் மாநாட்டுக்கு "உத்தியோகபூர்வ குழப்பம்" என்று ஒன்று வைச்சிருக்கிறீங்க போலிருக்கு!!! LOL!!

இனிமேத்தானே ஒக்டோபர் 31 வரணும். துளசி செப்டெம்பருக்கே 31 போட்டாங்க. நீங்க எதிர்காலத்துலே மாநாட்டை நடத்து முடிச்சிருக்கீங்க! maybe kiwis are back from the future!! ;O)

கிவியன் said...

//அக்டோபர் 31 இரவு 8 மணிவாக்குல கூட்டம் நடந்தேறியது.//

ஒழுங்கா வாசிக்றீங்களான்னு பாக்க போட்ட தூண்டில்தான் அதுன்னு சொல்லி சைடுவாங்கலாம்னு நெனச்சேன், சரி போகட்டும் ஆஸி-வாசிதானேன்னு நம்ம பிழைய ஒத்துக்கறேங்க. சரி செய்துவிட்டேன்.

நன்றி ஷ்ரேயா.

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

:O)
வாழ்க கிவிப்பொறை!! (இரும்பொறை மாதிரி ஒரு பெயர்தான் சுரேஷ்.. கெட்ட வார்த்தை இல்லை!!;O)

{"பட்டம் குடுக்கும்போது கூட disclaimer போட வேண்டியிருக்கிறதே".. (நெற்றியில் கை வைத்து, நாடக பாணீயில்) ஐயகோ!! } ;OD

துளசி கோபால் said...

போச்சுரா......

சுரேஷூ,

செப்டெம்பருக்கு 31 ஏதுப்பா?

கிவியன் said...

கிவிப்பொறை செவிப்பொறைல தேன் மாதிரிதா இருக்கு ஆனா பட்டமெல்லாம் குட்டுக்றத பாத்தா விவகாரமா தெரியுது.

கிவியன் said...

இல்லியே 30ன்னு தான் இருக்கு பாருங்க துளசி (சத்தமில்லாம மாத்திட்டேன், நன்றி துளசி)
100023வது தடைவயாக கற்றுக்கொண்ட பாடம்: hurry never gives more...

[ஆகா பின்னூட்டத்த அதிகரிக்க இன்னொரு டெக்னிக்க சத்தமில்லாம செட்டப்பு செஞ்சுட்டேன்ல. (சின்னவா, முகத்த மூடிக்ரவால்லாம் இத கத்துக்கனும் இல்ல இதயும் சேத்துக்கனும்]

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

//இல்லியே 30ன்னு தான் இருக்கு பாருங்க துளசி //

ஆ!!!
(திறந்த வாய் மூட மறந்து... ;O) )

b said...

கப்பு நலம்பெற ஆண்டவனை வேண்டுகிறேன்!

வலைப்பதிவர் சந்திப்பு இனிதே நடந்திருக்கும் என நம்புகிறேன்.

முதன்முதலில் வலைப்பூவர்கள் சந்தித்துப் பேசினால் நிறைய பயன்கள் கிடைக்கலாம் என ஆலோசனை சொல்லி அதன்பின்னர் நானே முன்னின்று ஏற்பாடும் செய்து சந்தித்தும் பேசி கடைசியில் ஜாதிப் பிரச்னையால் ஒதுங்கி இருக்கிறேன்.

கிவியன் said...

வலைபதியும் போது ஒருவர் தனித்திருப்பதால் கொஞ்சமேனும் விழித்திருப்பார். அதுவே நாலு பேரு சேரும்போது 'நான்' ஆட்டிப்படைக்கும். அப்புறம் பேஜாருதான். ஜாதிப் பிரச்சினையால் ஒதுங்கியிருக்கிறேன் என்று நீங்கள் கூறுவது மாற விவேக் ஸ்டைலில் (இப்ப அவரே 3 கோடிக்கு கொடி பிடிக்கிறார்) "எத்தனை ஆயிரம் பேர் வரனுமோ?"

G.Ragavan said...

என்ன சுரேஷ். துளசியம்மாவை பார்க்க வைத்ததற்காக நன்றி சொல்லலாம் என்று வந்தால் சோகச் செய்தி சொல்கின்றீர்கள்.