அபு சலீம் என்னும் மஹா-புருசரின் காவியம்

"ஷ"ன்னுதான் போடலாம்னு இருந்தேன் ஆனா செம்மொழியாப் போச்சேன்னு "ச". சரி விசயத்துக்கு வருவோம்.

கிட்டத்தட்ட காட் ஃபாதர்ல தொடங்கிச்சு இந்த மோகம். அதாவது அடிஉலகத்து (underworld) அண்ணல்கள் பத்தி படமெடுக்கறேன்னு மணி நாயகன் எடுத்தார். அது ஒடின ஓட்டத்துல அதே லைன புடிச்சு தளபதி எடுத்தாரு. அத தொடர்ந்து நானும் எடுக்கறேன்னு, 'ஆறா' ஒடுது இத மாதிரி படங்கள். இப்ப உச்சகட்டமா அபு சலீம் தன்னோட வாழ்கை சரிதத்த திரைகாவியமா படைக்கனும்னு ஆசை படுறாராம். அத இவரோட வக்கீலே தயாரிக்கறாரு. மூணு 'கான்ல' யாராவது ஒரு கான் சரியா இருக்கும்னுனாலும் சல்மான்தான் மிகச்சரியாக இருக்கும்னு சலீம் ப்ரியப்படறாரு (நிஜ வாழ்கைலயும் கிட்டதட்ட இவர மாதிரியே இருக்காராம்). அஹா நம்ம நாட்டு தனி மனித சுதந்திரத்தில் இது ஒரு புது சகாப்தம். பாக்குறதுக்கு ஆட்கள் இருக்கவே இருக்காங்க.

ஆனா ஒண்னு விளங்க மாட்டேங்குது. பெருந்தலைவர பத்தி படமெடுக்க என் நண்பன் பாலா 7 வருஷமா நாயா பேயா அலஞ்சு ஒரு வழியா படம வந்து, எதோ போனா போகட்டும்னு தமிழக அரசு ஏதோ ஒரு பரிசும் குடுத்து ஒடப்புல போட்டாச்சு. (சரியான பண முதலீடு இருந்திருந்தால் அந்தப்பட மிக பிரம்மாண்டமாக வந்திருக்கும்).

சமூகத்துல் எதனால இந்த மாதிரி குற்றவாளிகளின் குணாதிசயங்கள் மிகவும் விரும்பிப் பார்கக்ப்படுகிறது? இப்ப சலீம் சுய சரிதம் தேவையா? ஆனால் இந்த படம் வர வேண்டும். எந்த விதமான தடைகளும் போடக்கூடாது. அது சுதந்திரத்தை பாதிக்கும். வந்த சுவடு தெரியாமல் அதனை பெட்டியில் திரும்ப அனுப்பினால் ஒருவேளை கொஞ்ச நாள் இத மாதிரி படமெடுக்க யோசிப்பார்கள்.

ஆனா மக்களே கேள்வி நிக்குது. அதாவது "இந்த படம் எடுத்து வெளிவருவது சரியா தவறா"?




பிகு: நான் இன்னும் என் டெம்ப்ளேட்டை சரி செய்யவில்லை (என்னமோ அதுக்கு நேரம் கிடைக்க மாட்டேங்குது) அதனால உங்களால பின்னூட்டம் இட முடியாமப்போகலாம். தனி மடலில் போட்டால் அதனை தனிப்பதிவா போட்டுவிடலாம்னு எண்ணம்.

5 comments:

துளசி கோபால் said...

என்னாப்பா சுரே (ஷூ)சு,

ஒரு வழியா மெளனம் கலைஞ்சதா?

அதும் எப்பேர்ப்பட்ட எபிசோடு? அதைப் படமாக்க வேணாமா?

வரட்டும். பார்க்கலாம்.

கிவியன் said...

நீண்டுத்தான் போச்சு...

\\வரட்டும். பார்க்கலாம்\\ ஆக பாக்குரதுக்கு ஒரு ஆள் இப்பவே ரெடி. சரோகிகிட்ட சொல்லிர்ரேன்.

Unknown said...

மோனிகா பேடியாக நடிப்பது யார்?தகவல் தெரியுமா?தமிழுலும் வருகிறதா?கமல் நடித்தால் மும்மொழியிலும் கலக்கலாம்.

கிவியன் said...

செல்வன், மும்மொழின்னா ஆங்கிலமுமா?

என்ன கேட்டா புதுமுகமா பார் நடன நங்கை, கிரிகெட் வீரர்களின் ஆசை நாயகியான தாரன்னம் சரியாக இருக்கும், ஆனா இவங்க கதையையே தனிய யாரோ படமெடுக்க திட்டமிட்டுள்ளதால் வேரயாராவதுதான் நடிக்கனும்

Unknown said...

மும்மொழின்னா தெல்ங்கு,தமிழ்,இந்திங்க.

தரன்னம் கான் பார் மங்கை கிடையாது.அப்படி ஒரு ரூமர் கிளம்பியது உண்மைதான்.தரன்னமோட அப்பா கேஸ்போடுவேன்னு மிரட்டிட்டார்.ரூமரை கிளப்பின வெப்சைட்டுங்க கமுக்கமா அடங்கிட்டாங்க.(பாத்து.உங்க பிளாக் மேல கேஸ் போட்டுட போறார்:-)