ஆய்வுப் பதிவு

மதுமிதாவுக்கு ஆய்வூட்டம் (பின்னூட்டம் மாதிரி)

வலைப்பதிவர் பெயர்:முன்னாள் சுரேஷ்(கிவி) இன்னாள் கிவியன்

வலைப்பூ பெயர் : மெளனம்

சுட்டி(url) : http://mounam.blogpsot.com/
(எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)

ஊர்: வெலிங்டன்

நாடு: நியுஸிலாந்து

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: சுயம்

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : ஜனவரி 26, 2004 (அந்நாள் இந்திய குடியரசு தினம் என்பது எதிர்பாராமல் நடந்ததே)

இது எத்தனையாவது பதிவு: 34 ன்னு நிணைக்கிறேன்


இப்பதிவின் சுட்டி(url):http://mounam.blogspot.com/2006/06/blog-post.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: ஒரு வேலயும் கிடைச்சு, வசதியா துரித அகலபட்டை இணைப்போட கணிப்பொறியும் குடுத்து, லன்ச்சுல் டைமும் இருந்து , கொஞ்சம் தமிழும் தெரிந்ததால

சந்தித்த அனுபவங்கள்: பல,

பெற்ற நண்பர்கள்: பலர்

கற்றவை: தமிழில் கணிப்பொறியில் எழுத, இன்னும் பல

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: அது சுதந்திரம் என்பதை உணர்ந்ததால், தாந்தோன்றித்தனமாக எழுதாமல் இருப்பது

இனி செய்ய நினைப்பவை: அடுத்த கணம் என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்?

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: என்னைப் பற்றி நானே சொல்லிக்ரதிலிங்க..

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: அதாவது...நா என்ன சொல்றேன்னா ...(அட கேக்க யாருமே இல்லயா)

5 comments:

துளசி கோபால் said...

சுரேஷூ,

எல்லாருக்கும் ஒரு வழின்னா இடும்பனுக்கு வேற வழியாமே. இது தெரிஞ்சுருச்சா?

ஆமாம். ஜூன் மாசம் 10தேதி கடைசின்னு மது சொல்லி இருக்காங்க. இப்ப ஆஆஆஆஆஆஆஆஆஆற அமர பதிவு போட்டா இன்னான்னு சொல்றது? க்கும்....

சரி. லேட் ஃபீ இங்கே கிறைஸ்ட்சர்ச்சுக்கு அனுப்புங்க.

இலவசக்கொத்தனார் said...

அட நீங்களும் கிவிலாந்துதானா? எங்க வரலாற்று டீச்சர் துளசியைத் தெரியும்தானே? அந்த பதிவிலெல்லாம் நீங்க வரதே இல்லையே?

கிவியன் said...

10m தேதி கடைசின்னு தெரியாம போச்சு, என்ன இருந்தாலும் நியுசி உலகக் கோடில இருக்கு பாருங்க (அப்ப துளசிக்க்கு மட்டும் எப்படி தெரிஞ்சதுன்னா அது ஏதோ சதின்னு நெனக்கிறேன்)...
நுனிப்புல் மேஞ்சா இப்படிதான் ஆகும்னு தெரிஞ்சு போச்சு, நன்றி துளசி.

இ.கொ. நாங்க வருவோம்ல..துளசிக்கு நல்லாவே தெரியும். அட நம்ம பதிவு தலப்ப பாருங்க புரிஞ்சிரும்.

பொன்ஸ்~~Poorna said...

//எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: அது சுதந்திரம் என்பதை உணர்ந்ததால், தாந்தோன்றித்தனமாக எழுதாமல் இருப்பது//

பரவாயில்லைங்க.. மௌனமா இருக்க நச்சுன்னு ஒரு காரணம் சொல்லி இருக்கீங்க..

இந்த கிவி என்பது பறக்காத ஒரு பறவை தானே? அப்புறம் ஏன் பூனையை வச்சிருக்கீங்க ப்ரொபைல்ல?

கிவியன் said...

பொன்ஸ் அது பூனை மாதிரி தெரியுதா? அது மெளன-நரிங்கோ, நல்லா பாருங்க அது உட்கார்ந்திருக்குர ஷ்டைல, கிவிங்கரது இருப்பிடம் உணர்த்தும், மெளனம் என்பது நான் பேசும் மொழியை குறிக்கும்....சரியா?