கிரிகெட் என்னும் "வாம்பையர்"

இன்று ஒரு செய்தி தினமணி வெப்சைட்டில். டேவிட் பெக்கம் இங்கிலாந்து கிரிகெட் அணி தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா....

சரி இது ஏதோ தமாசுன்னு நினைத்து உள்ள போய் பாத்தா ரொம்ப சீரியஸாவே செய்தியா போட்டிருக்காங்க. செய்தி சுடச்சுட தருவதுன்னு இப்படி அடி சறுக்கர மாதிரி செய்தி வெளியிடுவது தினமணிக்கு அழகா? எல்லாம் தினகரன் எஃபக்டுன்னு தோணுது. ஆனாலும் இந்தியாவில் கிரிக்கெட் என்னும் பிசாசு மத்த விளைட்டுகளை எந்த அளவுக்கு பாதிக்கிரது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.


டிஸ்க்ளெய்மர்: யாராவது புண்ணியவான் தினமணிக்கு இத சொல்லி அத எடிட்டர் சரி பண்ணிட்டாருன்னா, இல்லியே நைனா நா போயி பாத்தப்ப சரியாதானே இருக்குனு என்ன பேஜார் பண்ணகூடாது சொல்லீட்டேன்.

7 comments:

வசந்தன்(Vasanthan) said...

இவர்களுக்கு எந்த விளையாட்டு என்றாலும் அது கிரிக்கெட் தானோ?

Muthu said...

//இப்படி அடி சறுக்கர மாதிரி செய்தி வெளியிடுவது தினமணிக்கு அழகா? எல்லாம் தினகரன் எஃபக்டுன்னு தோணுது//

NICE..Write more

கிவியன் said...

நன்றி வசந்தன், முத்து, அபிராமம். ஆங்கிலேயர்கள் விட்டுச்சென்ற எச்சத்தில் இதுவும் ஒன்று, ஒரு தேசத்தையே arm chair sportsmanகளாக மாற்றி வைத்திருக்கிரது. பக்கத்தில் இருக்கும் சீனாவுக்கு ஈடாக இந்தியா போட்டி போடுவது ஜனத்தொகையில் மட்டுமே என்றாகிவிட்டது.

பிகு: நான் நினைத்த மாதிரியே தினமணியில் சத்தம் போடாமல் அந்த செய்தியை நீக்கி விட்டனர். படம் பிடித்து போட்டிருக்க வேண்டும் அடுத்த முறை கவனமாக செய்கிறேன்.

துளசி கோபால் said...

சுரேஷூ,

இதுக்கெல்லாம் கவலைப்பட முடியுமா?

நானும்தான் ஆல்ப்ளாக் லே இருந்து முந்தாநாள் விலகிட்டேன்.

அதைபத்தி இதுவரையில் பேப்பரில் ஒரு 'நூஸ்' கூட வரலையேப்பா(-:

கிவியன் said...

ஆஹா, துளசி விலகிவிட்டாரா? இந்த மாதிரி செய்திய வெளியிடாத பத்திரிக்கை ஒரு பத்திரிக்கையே இல்லை. இதனை வண்மையாக கண்டிக்கிறேன்.

மஞ்சூர் ராசா said...

இந்த செய்தி எல்லா தொலைக்காட்சிகளிலும் வந்ததே! நீங்கள் பார்க்கவில்லையா?

கிவியன் said...

மஞ்சூர், நீங்கள் எதை குறிப்பிடுகிறீர்கள்? நான் சொல்ல வந்தது செய்தியை பற்றி அல்ல,தினமணி செய்திப் படி பெக்கம் எப்போது "கிரிகெட்" ஆடினார் என்பதை பற்றி. வருகைக்கு நன்றி.