1.25 வினாடிக்கு ஒரு குழந்தை பிறக்கிரது (ஆணகள் Vasectomy செய்துகொள்வது நலம்)
இந்தியாவின் ஜனத்தொகை ஆண்டுதோரும் சுமார் 15,300,000 ஆக கிட்டத்தட்ட சிலி நாட்டின் மொத்த ஜனத்தொகைக்கு ஈடாக கூடுகிரது (நல்ல முதலீடு)
சுமார் 2,400,000 மத பிரார்த்தனை இடங்கள் (கோவில், தர்க்கா, சர்ச், ...) இந்தியாவில் உள்ளன. (இன்னும் ராமர் கோவில் ஒண்ணுதான் பாக்கி)
1,019,916 பள்ளிகள் 2003-04 கணக்கு படி. 65% படிப்பறிவு (உண்மைதானா?)
லக்னோ நகர மாண்டிசோரி பள்ளி 2002 வருட கின்னஸ் உலக சாதனையில் இடம் பெற்றது, காரணம் பள்ளியின் மொத்த மாணவர் 26,312 (அப்பா சாமி இது பள்ளிக்கூடம்தானா? தல சுத்துது அப்போய்)
2005ம் வருடம் 1,350 டன்(மெட்ரிக்) ஓபியம் சட்டரீதியாக தயாரிக்கப்பட்டது. (ம்ம்ம் சரிதான் ராகுல் மாஹாஜன் ஏன் மாட்டிக்கிட்டாருன்னு புரியுது)
155,516 நிரந்தர தபாலாபீஸ்கள் இந்தியாவில் இதுவே சீனாவில் 63,555 தான்(ஹை!!).
சராசரியாக ஒரு மாதத்துக்கு 5,000,000 மொபைல் போன் தொடர்புகள் ஏற்படுத்தப்படுகின்றது.(பொதுவா ஒண்ணு, மத்ததுக்கு ஒண்ணுன்னு ஒரே ஆள் ஏகப்பட்டது வச்சுக்கிட்டா வராதா பின்ன?)
இந்தியன் ரயில்வே 1,400,000 மக்களை பணியிலிருத்தி உலகிலேயே மிக அதிகமான தொழிலாளர்களை கொண்ட நிறுவனமாக இருக்கிரது. (இதயும் டிஸ்-இன்வெஸ்மெண்டுன்னு வீட்டுக்கு அனுப்பிச்சுரப்போறாய்ங்க)
30,000,000 குழந்தை தொழிலாளர்களை கொண்டு மிக அதிகமான குழந்தைகளை தொழிலிலிருந்த்தும் நாடாகவும் இருக்கிரது. (1.25 செகணடுக்கு ஒண்ணு பிற்ந்தா என்னாதான் செய்யிரது?)
70,000,000 ஒரு பால்-இன சேர்க்கை (gays and lesbians) மற்றும் பாலின மாறுதல் செய்து கொண்டவர்கள் இருக்கிறார்கள்.(அட, சொல்லவே இல்ல)
ஏறத்தாழ 650,000,000 விவசாயிகள் உள்ளனர்.(மழை வருதான்னு வானத்த பாத்துக்கிட்டு ..)
Transparency International நிறுவன 2005ம் ஆய்வுப்படி 159 நாடுகளில் இந்தியா 92ம் இடத்தில உள்ளது. 0 - 10 என்னும் அளவு கோலில் இந்தியா பெறுவது 2.9. (எப்படி 2.9 வாங்கிச்சு, ஏதோ சம்திங் குடுத்து)
403 உறுப்பினர்கள் உள்ள உ.பி சட்டசபையில் பாதிக்கும் மேலானவர்கள் அதாவது 205 உறுப்பினர் மீது கிரிமினல் வழக்கு உள்ளது. (மீதி பேர் இப்பதான் எல்-போர்டு)
7 இந்தியர்கள் இதுவரை நோபல் பரிசு வென்றுள்ளனர்.(தப்பி பிறந்தவர்கள்)
13 பிரதம மந்திரிகளில் 8 பேர் உ.பி மாகாணத்தவரிகள்: ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி,இந்திரா காந்தி, சரண் சிங், ராஜீவ் காந்தி, வி.பி.சிங், சந்திர சேகர், வாஜ்பேயி (அடப்பாவிகளா வேற மாகாணமே இல்லயா இந்தியாவில்?)
4 comments:
புள்ளிவிவரம் எல்லாம் ஜோராத்தான் இருக்கு.
உண்மைக்குமே 1.25 வினாடியா? யம்மாடியோவ்.....
இங்கே நியூஸியிலே 19 நிமிஷத்துக்கு ஒண்ணாம்.
நெசமாவே 1.25 விநாடிதான் போட்டிருக்காங்க. அதாவது 69,120 குழந்தங்க ஒரு நாளைக்கு. அதுல எத்தன கள்ளிப்பாலு, நெல்லு, பாலு, அரசாங்க தொட்டிலுக்கு தப்புச்சு வாழுதோ?
19 நிமிஷத்துக்கா நாளுக்கா?
சுட்டிக்கு நன்றி துளசி. வேலல மூழ்கிட்டதால எப்பவோ போட்ட பின்னூட்டமெல்லாம் இப்பதான் வெளிச்சத்துக்கு வருது. லேட்டானாலும்...
//வேலல மூழ்கிட்டதால ......................//
இதுலே எந்த உள்குத்து, வெளிகுத்து, நடுக்குத்து இல்லை என்று நம்புகிறேன்.
Post a Comment