உதவி தேவை

மக்களே இசையமைப்பாளர் MB ஸ்ரீனிவாசனை (PBS என்று பலர் குழப்பிக் கொள்வார்கள்) பலருக்கு தெரிந்திருக்கும். தெரியாதவர்கள் இந்த தூளில் தெரிந்துகொள்ளலாம். நான் கேட்டக்க வந்தது mbs பாரதியாரின் பாடல்களை choir (சேர்ந்திசை?) முறையில் இசையமைத்து எழுபது, என்பதுகளில் வானொலியில் இளையபாரதம் என்னும் நிகழ்ச்சியில் காலையில் ஒலிபரப்புவார்கள். பாரதியின் பாட்டுக்குக்கு உணர்வு கொடுத்தது mbs தான் என்பது என் தனிப்பட்ட கருத்து. கேட்க்கும் போதெல்லாம் புல்லரிக்கும். கிட்டத்தட்ட பாரதியின் இருபது பாடல்களுக்கு மேல் இந்த முறையில் இசையமைத்துள்ளார். அவர் நிறுவிய madras youth choir (இன்றுமிருக்கிரது என நினைக்கிறேன்) மூலமாக இப்பாடகள் ஒலிபரப்பாகும். நான் கேட்க்க வந்தது இப்பாடல்கள் (choirs) அடங்கிய கேசட், அல்லது வேறு வடிவில் யாரிடமாவது அல்லது எங்காவது கிடைக்குமா? இப்பாடல்களை வணிகரீதியாக mbs வெளியிடவேயில்லை என நினைக்கிறேன். தெரிந்தால் தொடர்புகொள்ளவும். இங்குள்ள குழந்தைகளை இப்பாடல்களை பாடி பழக்க எண்ணம். (இதன் மூலமாக பாரதியின் பாடல்கள் அடுத்த தலைமுறைக்கு அறிமுகமாகும்).

நன்றி.

4 comments:

துளசி கோபால் said...

ஆஆஆ
ஆஆஆஆஆ
ஆஆஆஆ

ஆஆஆஆஆஆஆ

ஞாபகம் வருது இந்த கோரஸ் எல்லாம்:-))

'சேர்ந்திசை' இல்லையா?

பாலசந்தர் கணேசன். said...

நல்ல ஒரு பாயின்டர்,

ROSAVASANTH said...

இரா.முருகன் தூளில் ஒரு முறை எழுதியதாக ஞாபகம். அவரிடமும், தூள் ஃபோரமிலும் கேட்டீர்களா? தகவல் கிடைத்தால் எனக்கும் சொல்லவும். அதாவது உங்கள்பதிவில் இடவும். நன்றி

கிவியன் said...

வருகைக்கு நன்றி ரோசா. எனக்கு தெரிய வந்தால் நிச்சயம் பகிர்ந்துகொள்வேன்.