புனிதத்தையே புனிதமாக்கும் கோமாளிகள்

இன்று தினமணியில் இந்த செய்தியை படித்தால் சிரிப்புதான் வருகிறது. அரசியலவாதிகளில் ஆரம்பித்து, புசாரிகளும் இன்னும் பலரும் மக்களை இன்னும் பல வருடங்களுக்கு மடையர்களாக வைத்துக்கொள்ள இந்த மாதிரி ஏதாவது செய்துகொண்டுதானிருப்பார்கள் போலிருக்கிரது.

13 comments:

பொன்ஸ்~~Poorna said...

இதெல்லாம் ரொம்ப ஓவருங்க.. எங்க வீட்ல ஒரு வசனம் சொல்வாங்க.. தண்ணி எல்லாத்தையும் புனிதமாக்குதுன்னு.. (கங்கைல குளிச்சா மக்களின் பாவங்கள் கரையும்னு சொல்வது போல.. )

இப்போ வசனத்தை மாற்றணும்.. பணம் எல்லாத்தையும் புனிதமாக்குது.. அவ்வளவு தான்..

துளசி கோபால் said...

சுரேஷூ,

இப்பெல்லாம் 'தினமணி' ஹோல்சேலா? :-)))))

கிவியன் said...

அடுத்தடுத்து தினமணி சுட்டி வந்துட்டதால உடனே ஹோல்சேலா? முன்ன சொன்ன சுட்டி செய்தி-அளித்த-நிறுவன விமர்சனம். இப்ப சொல்லரது செய்தி விமர்சனம் இரண்டுக்கும் நிறைய வித்யாசம் இருக்குல்ல.

துளசி கோபால் said...

ஓஓ அப்படியா?

அப்பச் சரி :-))))

பொன்ஸ்~~Poorna said...

//முன்ன சொன்ன சுட்டி செய்தி-அளித்த-நிறுவன விமர்சனம். இப்ப சொல்லரது செய்தி விமர்சனம் இரண்டுக்கும் நிறைய வித்யாசம் இருக்குல்ல. //

அதே பேப்பர் தானே? தனித் தனியா வாங்கறீங்களா? :)

கிவியன் said...

வாங்க பொன்ஸ்,
//இரண்டு நாள் சுத்தி திரவிய கலச பூஜை// செஞ்சா எல்லாம் சரியா போயி கோவிலுக்கு பழைய புனிதம் வந்துடுமாம். மீரா ஜாஸ்மின் பிரபலம் அதனால் அவர் வந்தது தெரியும், நாலு தெரு தள்ளியிருக்கும் பிலோமினாவோ இல்ல லூர்துசாமியோ கோவிலுக்கு போய்ட்டு வந்தா யாருக்கு தெரியும்? கடவுளுக்கு மட்டுந்தாந் தெரியுங்கறாப்ல நம்ம ஆஃப்பாயில்டு அர்னால்டு.

முத்து(தமிழினி) said...

லட்சக்கணக்கானோர் மனதை புண்படுத்தாதீர்கள்.

கிவியன் said...

முத்து, நான் யாரையும் புண்படுத்தவில்லை என்றே நினைக்கிறேன். அப்படியிருந்தால் மன்னிப்பு கோருகிறேன்.
என்னுடைய முந்தய பின்னூட்டத்தை படியுங்கள். அப்படி நடந்திருந்தால் கோவில் நிர்வாகிகளின் நிலை என்ன? நம்முடைய சம்பிரதாயங்கள் ஒருபுறம் இருக்கட்டும். முத்து, வேற்று மதத்தவர் கோவிலுக்கு சென்று, அதனை மதித்து, பிரார்த்தனை செய்து, காணிக்கையும் செலுத்தினால் ஒத்துக்கொள்ளமாட்டேன் என சொல்கிறீர்களா? கடவுளுக்கும் மிருகத்துக்கும் இடைப்பட்ட பிறப்பு மனிதன். மனிதன் மிருகமாகவும் மாறலாம் கடவுளாகவும் மாறலாம். மனிதனுடை வளர்ச்சி எதனை நோக்கியிருக்க வேண்டும் என்பது உங்களுக்கு புரியும். இல்லை விடமாட்டேன், இதுவே நன்றாக இருக்கிறது என கீழ் நோக்கியே இருந்தால் இன்னும் நாம் முற்றிலும் நாகரீகமடையவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. காலம்தான் பதில் சொல்லும்.

பொன்ஸ்~~Poorna said...

//மனிதனுடை வளர்ச்சி எதனை நோக்கியிருக்க வேண்டும் என்பது உங்களுக்கு புரியும். இல்லை விடமாட்டேன், //
முத்து, அம்பயர் வேணுமா ? :))))))

முத்து(தமிழினி) said...

ஹிஹி..கிவியன் என் பதிவுகளை படிக்கவில்லை என்று நினைக்கிறேன்.

கிவியன் உங்களின் இந்த பதிவுக்கு என்னுடைய 200 சதவீத ஆதரவு உண்டு.

யாரேனும் புனித பிம்பங்கள் வந்து இதை சொல்லுமுன் நான் சொல்லிவிடலாம் என்றுதான் :))


பொன்ஸ் என்ன இங்க? டைம் என்ன?

கிவியன் said...

கையளவு நேரத்தில்
புவியளவு விஷயத்தை
படிப்பதென்பது
கிவியனுக் கென்ன
எல்லாம் வல்ல
பரமனுக்கே முடியாது

நான் படிக்கவில்லை ஐய்யா உமது பதிவுகளை, ஆகவே பொறுத்தருள்க

//200 சதவீகிதமா// வாழ்க.

முத்து(தமிழினி) said...

நன்றி கிவியன்...

துளசி கோபால் said...

இங்கேயும் சுரங்கம் தோண்டப்பட்டுள்ளதே!!!!

வாழ்த்து(க்)கள்.