காட்சிப் பிழை

குடும்பத்தோட ஊர் சுத்தி பாக்க போனா இந்த மாதிரி படமெடுக்ரதுக்குள்ள ஒரு வழி பண்ணிருவாய்ங்க. "இப்ப இந்த மட்டைய எதுக்காக படமெடுத்திட்டுருக்க, நேரமாகுது இன்னும் இரண்டு மணி நேரம்தான் இருக்கு அதுக்குள்ள அடுத்தயும் பாத்துட்டு கிளம்பணும்".. அநேககமாய் எல்லா குடும்ப சுற்று-உலாவில் இது நடக்கும். வந்த __ நாள்ல எவ்வளவு பாக்க முடியிமோ அம்புட்டையும் பாத்துட்டு கிளம்பிரனும். என்ன பார்த்தோம், என்ன அடைந்தோம்? இவிங்கள வெச்சுக்கிட்டு படமெடுக்ரதுக்குள்ள யப்பா சாமி..

காற்றும் கடல் நீரும், அலையும் இணைந்து உருவாக்கிய யானை...




முல்லையின் மன்னவனை நினைத்து நெய்தல் வடித்த சிலை...





இந்த மாதிரி என் வீட்டில் விரிக்க ஆசை...




பூதமெங்கே மற்றைப் புலனெங்கே பல்லுயிரின்
பேதமெங்கே அண்டமெனும் பேரெங்கே - நாதமெங்கே
மன்வடிவ மெங்கே மறையெங்கே வான்பொருணீ
பொன்வடிவம் கொள்ளாத போது


(திருவருட்பா மூன்றாம்; திருமுறை: வள்ளலார் ராமலிங்க அடிகளார்)

6 comments:

துளசி கோபால் said...

சுரேஷூ,

யானை பரவாயில்லை. ஆனா அடுத்தது சிங்கம்/புலி ??? நல்லாவே இருக்கு.
எந்த ஊருன்னு சொல்லி இருக்கலாமுல்லெ?

கிவியன் said...

கிழிஞ்சுது போங்க. இது உங்க தீவுதான். வெஸ்ட்போர்ட் தாண்டி க்ரெமெளத்துக்கு முன்னாடி புன்னகைக்கில (punakaiki, Pancake Rocks and bloholes) அலையும் காத்தும் புகுந்து உருவாக்கின உலக பிரசித்தி பெற்ற இடம். போகலன்னா இந்த winter முடிஞ்சதும் கட்டுசாதத்தோட கிளம்பிருங்க.

துளசி கோபால் said...

ஐய்யய்யோ,

நம்ம பூனாகைக்கியா? போயிட்டு வந்தோமே சில வருசங்களுக்கு முந்தி.

எல்லா பேன்கேக்கையும் படம் புடிச்சுக்கிட்டு வந்துட்டோம்.
ஒருவேளை அப்ப 'மிருகங்கள்' அங்கே இல்லையோ என்னவோ?:-)))

கிவியன் said...

யானையும் பூனையும் தெரியனும்னா //பல்லுயிரின் பேதமெங்கே //அதுக்கு ஒரு கலை'கண்' வேணும் இல்லன்னா வெறும் மண்னும் கல்லும்தான் தெரியும்.

பாலசந்தர் கணேசன். said...

புகைப்படங்கள் கண்களுக்கு விருந்து.

கிவியன் said...

//புகை படங்கள் கண்களுக்கு விருந்து// என்று பாலசந்தர் கணேசன் பின்னூட்டமிட்டிருந்தார் ஏனோ அது இங்க தெரியவில்லை. அதனால் இது.

நன்றி கணேசன்.