சஞ்சய் சுப்பிரமணியன்

சென்ற வார இறுதியில் சஞ்சயின் கச்சேரி விக்டோரியா யுனிவர்சிட்டியில் நடந்தது. தனக்கென ஒரு பாணியை வைந்துக்கொண்டிருக்கும் சஞ்சய் ரசிகர்களை ஏமாற்றவில்லை. சுமார் 40 பேர் வந்திருந்தனர். குளிர் காலத்தில் அதுவும் மாலை 7.30 மணிக்கு மேல கர்நாடக சங்கீதம் கேக்க போகறதுக்கு ரொம்ப ஆழமான தூண்டுதல் இருந்ததான் முடியும். நான் கடைசியாக பார்த்த சஞ்சய் (மும்பையில்) கிராப் வைத்துக்கொண்டு காலேஜ் படிக்கும் மாணவர் போலிருந்தார் ஆனா இப்ப நீண்ட முடி வளர்ட்து கலரடிச்சு பாக்க ஹெப்பாக (hep) இருந்தார். பாடும்போது எம்.டி ராமநாதன் மாதிரி முகபாவனைகள், கணிரென்ற சாரீரம் கிட்டதட்ட மாஹாரஜபுரம் போல். மிகமுக்கியமானது நிறைய தமிழ் பாடல்கள் பாடியது. அதுவும் ரசிகர் கேட்டதை பாடும் உன்னத கலைஞன். சிலவற்றை எனக்கு தெரியாது என்று எந்தவித ஒளிவுமறைவும் இல்லாமல் கூறும் நேர்மை. இதறகு முன் வந்த சில கலைஞர்கள் சீட்டு எழுதி அனுப்பியவற்றை வாங்கி பார்த்து ஓரமாக வைத்துவிட்டு, தாங்கள் 'ரிஹர்சல்' செய்து வந்ததை நாசூக்காக பாடிவிட்டுச் சென்றனர். "கர்நாடக சங்கீதம் பத்திரமானவரிடத்தில் இருக்கிரது" என்ற சுப்புடுவின் கணிப்புக்கு ஏற்ப இன்றைய வணிக ஆகர்ஷனங்களுக்கு விழுந்துவிடாமல் இருக்கிறார் சஞ்சய். வாழ்த்துக்கள்.நாகை முரளிதரனும் (வயலின்) மன்னார்குடி ஈஸ்வரனும் (மிருதங்கம்) மிக அருமையான பக்கவாத்தியமாக அமைந்தது சிறப்பு.


அன்று அவர் பாடிய பாடல்கள்:

1. சரசுதா-வர்ணம்- சாவேரி ரகத்தில்
2. மாகேலரா விசாரமு-தியாகராஜர்-ரவிசந்திரிகா
3. மரி வேரே கதி - சியாமா-ஆனந்த பைரவி
4. காலை தூக்கி-முத்தையாபிள்ளை-ரிதுகுலகாம்போதி
5. மனசுலோனி-இந்தோளம்
6. கமலாம்பா-தீக்க்ஷிதர்-கல்யாணி
7. கற்பூரம் நாறுமோ-நாச்சியார்-காமாஸ் (நான் கேட்ட பாடல்)
8. வெள்ளை தாமரை-பாரதி- ராகம் தாளம் பல்லவி
9. ஆடும் சிதம்பரமோ-கோபல கிருஷ்ன பாரதி-பிஹாக்
10. கண்டேன கோவிந்தன-புரந்தரதாசர்-சந்திரகாந்தா
11.காணி நிலம்-பாரதி-பிந்து மாலினி(?)
12. நந்தனா சாயது நந்தனா-பஜன்
13.பெற்றதாயை மறந்தாலும்
14.தில்லானா
15.கற்பகமே கண்பாராய்-பாபநாசம்-மத்யமாவதி

கொசுறு: இடைவெளியில் மேடையிலேயே அமர்ந்திருந்து, எல்லோருடனும் இயல்பாக பேசியது, ஆட்டோகிராப், போட்டோ (ஏனோ யாருமே கேட்கவில்லை!!) போஸ் கொடுப்பது, ஒரு மூட்டை நிறைய சிடிக்களை அள்ளிக்கொண்டுவந்து விற்றுத் தருமாரு நிகழ்ச்சி அமைப்பாளர்களை படுத்துவது, வீடியோ படமெடுக்க கூடாது என லொள்ளு பண்ணுவது இது எதையுமே செய்யாத "down to earth" கலைஞர் சஞ்சய்.

வெளிநாடுகளில் வந்து பாடும்போடுது அநேகமாக எல்லோருமே என்ன ராகம் என கூறிவிடுவதால் கொஞ்சமேனும் கர்நாடக சங்கீதம் புரிபடுகிரது. இதுவே உள்ளூர்னா சொல்ல மாட்டாங்க. பக்கத்துல இருக்ரவர பாத்தா தலைய ஆட்டி, தாளம் போட்டு ஒரே அலப்ர. என்ன ராகம்னே தெரியாம நாம கேட்டா ஒரு மர்ம புன்னகை விட்டு "இது தெரில?" அப்டீன்னு நம்மள திருப்பி கேட்டுட்டு இன்னும் ரெள்சு ஜாஸ்தியாயிடும். அப்புறம் கொஞ்சம் நேரம் கழிச்சு, பக்கத்துல இருக்கர நிசமாவே சங்கதி தெரிஞ்ச பெரிசுகிட்ட "இது ஆபோகிதானேன்னு" கேட்டு, இல்லப்பா இது சுத்த சாவேரின்னு பதில வரும், ஆனாலும் மீசலே மண்ணு ஒட்டலே கண்க்கா தன்னோட சர்க்கஸ பண்ணிட்டே இருக்கும் அனேகம்பேருட்ட மாட்டிட்டு முழிக்கிரதுவிட இன்னா ராகம்னு சொல்லீட்டு பாடுரது பெட்டர்.


எஸ்ட்ரா: ஆகஸ்ட் காலச்சுவாட்டில் சஞ்சயின் நேர்காணல் படித்து பார்க்கவும்.

5 comments:

துளசி கோபால் said...

ம்ம்ம்ம்ம்ம்ம்...........

கொஞ்சமே கொஞ்சம் புகையற வாசனை வந்துருக்குமே?

//இதறகு முன் வந்த சில கலைஞர்கள் சீட்டு எழுதி அனுப்பியவற்றை வாங்கி பார்த்து ஓரமாக வைத்துவிட்டு,...//

சத்தியம்.

கிவியன் said...

//கொஞ்சமே கொஞ்சம் புகையற வாசனை வந்துருக்குமே?//
ஆகா நல்லாவே வருது. பேசாம எல்லாரயும் கூட்டிக்கிட்டு இங்க வந்துருங்க அடுத்த கச்சேரிக்கு அது சீப்பா இருக்கும்.

மதி கந்தசாமி (Mathy) said...

இம்மாதக் காலச்சுவட்டில் சஞ்சய் சுப்ரமணியனின் நீண்ட பேட்டி வந்திருக்கிறது. அருமையான பேட்டி. காலச்சுவடு தளத்தில் இருக்கலாம்.

-

கிவியன் said...

மதி, ஏற்கனவேகடைசியில் தொடுப்பு கொடுத்திருக்கேனே. பார்க்கவும்.

நிர்மல் said...

சென்ற வெள்ளி அன்று மேரிலேண்ட் சிவா விஷ்ணு ஆலயத்துக்கு உன்னிகிருஷ்ணன் வந்திருந்தார். என் மாமாவும்,அத்தையும் சென்றிறுந்தார்கள். மிக அருமையாய் கச்சேரி இருந்ததாம். உன்னி கிருஷ்ணன் மிக குணமாக இருந்தாராம்.