மனதோடு மழைக்காலம்

என் வீட்டு சமையலறை ஜன்னலுக்கு அருகே இருக்கும் மரத்தில் வந்து அமர்ந்திருந்தது இந்த பட்டாம்பூச்சி நீண்ட நேரம். நான் போய் காமிராவை எடுத்து வருவது தெரிந்ததும் இன்னும் சற்று முன்னுக்கு வந்து போஸ் வேறு கொடுத்தது. மிக நிதானமாக எடுத்த படம்.




சரி வெறுமன படம் போட்டா, பாத்ததும் மனசுல ஓடினது எப்பவோ படிச்ச ஹைகூ :


மலரை பறிக்க போனேன்
பறந்து சென்றது
பட்டாம்பூச்சி

மேலும் இதன் பெயர் மொனார்க் (Monarch). இன்னும் விளாவாரியா சொல்லனும்னா Danaus plexippus, புரிஞ்சுதா?. வாழ்நாள் ஒன்பதே மாதங்கள், முட்டையிலிருந்து இறக்கும் வரை. புழுவாக இருக்கும் போது ஒருவகை milkweed என்னும் இலையை உன்பதால் இதறக்கு விஷத்தன்மை அதிகம்.இந்த விஷமே இதற்கு இத்தனை வண்ணத்தை கொடுக்கிரது. இதை சாப்பிடுபவருக்கு ஆப்பு. அதானால் பாதுகாப்பு. பறவகைள் இதன் கவர்ச்சிகரமான வண்ணத்தை வைத்து ஒதுங்கிப்போய்விடும். வட அமெரிக்கா, ஆஸ்த்ரேலியா மற்றும் நியுசியில் காணப்படும். இதுக்கு ஒரு பங்காளியும் உண்டு, அதன் பெயர் வைசிராய் (Viceroy) பாக்க இவரு மாதிரியே இருப்பாப்ல. அவுகளுக்கு ரெக்கேல எஸ்ட்ராவா கோடு இருக்கும்.

சரி பதிவு தலைப்புக்கும் இதுக்கும் என்னா சம்பந்தமனு ஒரே குடச்சலா இருந்தா அது வேர ஒண்ணுமில்ல, இத பாத்துட்டு "மனதோடு மழைக்காலத்துல" காதல் வந்ததாலே நெஞ்சில் பட்டர்ப்ளை ஓடுதே (கண்கள் தேடுதே: பாடியவர்கள், சாதனா, ஜெஸ்ஸி) என்ற பாடலை கேட்டா நிச்சயம் ஓடும். வாழ்க கார்த்திக் ராஜா.

தலப்பு சரிதானே?

5 comments:

துளசி கோபால் said...

சுரேஷூ,

'ராணியம்மா' இறந்துட்டாங்கன்னு இங்கே நான் துக்கம் கொண்டாடிக்கிட்டுப் பதிவு எழுதிக்கிட்டு இருக்கேன்.
அங்கெ என்னன்னா, கார்த்திக் ராஜா பாட்டுங்களா?

மோனார்க் ஏன் இப்படி செவப்படிச்சுக் கிடக்கு?

இங்கே ஸ்வான் ப்ளாண்ட்ன்னு ஒரு செடி இருக்கே. அதை வாங்கி நட்டுவச்சாப் போதும். நம்ம வீட்டுக்கு இதுங்க வந்துரும்.
அந்த ஒரு செடியிலேதான் இதுங்க முட்டைவச்சு, லார்வா, ப்யூப்பான்னு வளருமாம்.

கிவியன் said...

ஆனாலும் ராணி மறைவ வெச்சுகிட்டு இவிங்க லொள்ளு ரொம்ப ஜாஸ்தியா இருக்கு, இதுக்கு பேசாம நம்ம ஊரு மாதிரி ஒரு நாள் லீவு விட்டுட்டு எல்லாரும் "சந்தோசமா" இருங்கப்பான்னு வேலய பாக்க போகம..ம்.

கிவியன் said...

துளசியோட பின்னூட்டத்துல நுழைந்து செவப்படிச்சுகிடக்குங்கரத சிவப்படிச்சு பாத்தேன் வொர்க் பண்ணுது. அதாவது பின்னூட்டத்த எடிட் பண்ணும் புதிய கருவி உள்ளது. ஆனா எப்படி பண்ணினேன்னு எனக்கே புரியல. தெளிவானதும் விளக்கமா போருறேன்.

துளசி கோபால் said...

சீக்கிரம் சொல்லித்தாரும்.
கொஞ்சம் (உ)'தார்' பூசற வேலையெல்லாம் இருக்கு:-))))))

கிவியன் said...

இப்போதைக்கு இந்த வலைபதிவில் சென்று பார்க்கவும். "தார்" பூசலாம், வண்ணம் பூசலாம், தமிழையும் திருத்தலாம். பின்னூட்ட திருத்தம் என்பது இரண்டு பக்க கூர்மையுள்ள ஆயுதம். மிக கவனமாக பயன்படுத்த வேண்டும். ஏற்கனவே கோகுல் குமார் அவர் பதிவில் இதைப் பற்றி எழுதியுள்ளார்.