புளுட்டோ என்ற "கிரகம்" மறைந்த துக்க தினம்

நம் சூர்ய குடும்பத்திலிருந்து புளுட்டோவுக்கு இருந்த 'கிரகம்' என்ற அந்தஸ்த்தை நேற்று (24 Aug 2006) பரேகில் நடந்த ஒட்டெடுப்பில் ஒரு மனதாக நீக்கிவிட்டனர். அதனால இனி பாடபுத்தகங்களில் புளுட்டோவை நீக்க வேண்டும். இது ஏன் என்றால் பரவெளியில் உள்ள ஒரு பொருள் கிரகமாக கொள்ள வேண்டுமென்றால் கீழ் உள்ள மூன்று விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்:

1. அது சூரியனை சுற்றி வர வேண்டும்
2. கிட்டதட்ட ஒரு கோள வடிவு பெற்றதாக அதன் அளவு பெரிதாக இருக்க வேண்டும்
3.வேறு எந்த ஒரு கிரக, உப-கிரக பதையிலும் குறுக்கிடாமல் தனிப்பாதையில் பயனிக்க வேண்டும்.

நவீன தொலைநோக்கி மற்றும் செயற்கைகோள் ஆராய்ச்சி மூலம் பின் உள்ள இரண்டு விதிகளுக்கு புளுட்டோ உட்படவில்லை. அதனால் அது இனி இரு கிரமாக கொள்ள முடியாது. அதனால் இது இனி குள்ள-கிரகம் (dwarf planet) என்ற வகையில் சேர்ந்ததுவிட்டனர்.

இனி நமது சூர்ய அமைப்பு இப்படி இருக்கும்.


சீரஸ் புள்ட்டோ, சரான் மற்றும் 2003uB313 என்னும் குள்ளர்களோடு 8 கிரகங்கள்தான்.

அசல் தகவலுக்கு இங்கே சொடுக்கவும்.


பிகு: நம்ம இந்திய சோதிட முறைப்படி சூரியனை சேர்த்து ஒன்பதுதான் என்பது மிக வியப்பாக உள்ளது. இவர்கள் இத்தனை ஆண்டுகள ஆராச்சி செய்த பின் திருத்திக்கொண்டுள்ளனர். கிரகம் என்றால் என்ன என்பதில் நம் முன்னோர்கள கொண்ட விதிகள் தகர்க்கப்படாமல் உள்ளது.

2 comments:

Anu said...

oh no.
paavam pluto

கிவியன் said...

தமிழ்மணத்தில் இப்பதிவை இணைக்க இயலவில்லை. beta bloggerருக்கு மாறியபின் வந்த சோதனை.