பீட்டாவால் பாதிக்கப்பட்டவர்கள்...

இது ஏதோ சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் ரேஞ்சுக்கு இருக்கேன்னு நினைக்கப்படாது. நாங்கள்ளாம் எழுதலேன்னா அப்புறம் என்ன ஆகும் இந்த வலையுலகம்? ஆணிக்கு ஒருதரம் அம்மாவாசைக்கு ஒருதரம்னு எழுதினாலும், அதுக்கும் ஆப்பு வைக்கும் விதமாக பீட்டா வந்து சேர்ந்தது.

பிளாகர் பீட்டா, இதில் என்னத்த புதுச இருக்குன்னு இன்னும் விளங்கல. ஆனா ஆங்கிலம் தவிர்த்து பிற மொழி சேவை இன்னும் வரவில்லை. அதனால் அநேக தமிழ் மக்கள் பாதிகப்ப்பட்டனர். இதுல என்னா வேடிக்கைன்னா ஆளவுடு சாமி நான் பழைய பிளாகருக்கே போயிர்றேன்னா அதுவும் முடியாதாம். ஒன்வே மாதிரி. அதுனால புதுசா ஒரு வலைத்தளம் ஆரம்பிக்க வேண்டிதா போச்சு. ஒரு வலைல எழுதரதுக்கே நேரமில்ல (விஷயமும் இல்ல) இதுல இன்னுமொன்றான்னு ஆகிப்போச்சு. அந்த நேரத்துலதான் தமிழ்மண நிர்வாகிகளிடமிருந்து பீட்டாவுக்கான தற்காலிக நிரல் தூண்டி வந்தது. அதனை சோத்தித்து பார்கத்தான் இந்த பதிவு. ப்பு இதுதானா விஷயம்னு போயிராதீங்க ஒரு வார்த்தையாவது பின்னூட்டம் விடுங்க அதுவும் வேல செய்யுதுதான்னு பாக்கனும். இவ்வளவு தூரம் வாசிச்சதுக்கு நன்றி.

7 comments:

துளசி கோபால் said...

ஒரு வார்த்தை

துளசி கோபால் said...

அதென்ன ஆணிக்கு ஒருதரம்....அமாவாசைக்கு.....

ஓ இந்த ஆடிக்கு ஒருதரம் அமாவாசைக்கு..... அதா?
சரி. இப்படி வச்சுக்கலாம் ஆனிக்கு ஒருதரம்.....

"பழமொழி சொன்னா ரசிக்கணும். அதைவுட்டுட்டு ஆராயக்கூடாது"

( உபயம்: க்ரேஸி மோகன் PKS)

கிவியன் said...

ஆகா ரத்தின சுருக்கம். ஒரு விஷயம் மறந்து போயிகூட பீட்டாவுக்கு மாறிடாதீங்க.

கோவி.கண்ணன் [GK] said...

நாங்கெல்லாம் இருக்கொம்...!
ஏற்கனவே மாற்றிவிட்டு முழுச்சாச்சி...
இன்னும் தமிழ்மணம் நிரல் செலுத்தி சோதித்துப் பார்க்கவில்லை..!

உங்களது வெற்றி ஆகிவிட்டது !

கிவியன் said...

வாங்க கோவி. நிரல் வேல செய்யுது. முயற்சி பண்ணிப்பாருங்க.

வைசா said...

// ஒரு விஷயம் மறந்து போயிகூட பீட்டாவுக்கு மாறிடாதீங்க. //

அதான் இப்போ பீட்டா வேலை செய்யறதே. எதுக்குங்க வேணாங்கறிங்க?

வைசா

கிவியன் said...

வருக வைசா, அதாவது தெரியாத பிசாசவிட தெரிஞ்ச பேயே மேல்னு சொல்லுவாங்க் இல்லியா அந்த விதத்துல தான் பீட்டாவுக்கு மாறவேண்டாம் என்றது. பீட்டா முழுமையடையும் போது மாறினால் நல்லது, அதுவரை பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிவரும்.