தெற்காசிய தீவிரவாதம்

சமீபத்தில் மியுனிச் படம் பார்த்தேன். உண்மையில் நடந்த விஷயங்களை, கிடைத்த ஆதரங்களை கொண்டு மிக நேர்த்தியான திரைவடிவம் கொடுத்துள்ளார் ஸ்பீல்பெர்க். ஒரு புத்தகம் படிக்கும் போது எழுத்தாளரின் வர்னனைக்கேற்ப வாசிப்பவனின் கற்பனை விரியும்போது அந்த அனுபவம்தான் ஒரு படைப்பின் தரத்தை நிர்ணயிக்க உதவும். ஆனால் திரைப்படத்தில் இது சற்று கடினம். மியுனிச்சில் பார்வையாளனின் கணிப்புக்கு விட்டு மிக அழகாக காட்டியிருக்கிறார். மிக சில படங்களே இந்த அனுபவத்தை கொடுக்கும். சரி இதுக்கும் தெற்காசிய தீவிரவாதத்துக்கும் என்ன சம்பந்தம்?

கே.பி.எஸ் கில்லை தெரியாதவர்களுக்கு, பஞ்ஜாபில் காளிஸ்த்தான் தீவிரவாதத்தை அடியோடு ஒழித்து கட்டிய பெருமை இவருடையது.

இரை தேடும் பறவைகள் தெய்வத்தலங்களில் காணப்படும்
எனினும் உயிருள்ள ஜீவனையும் அவை உண்ணும்
வெண்மையான உடையுடுத்தியிருந்தாலும்
அவற்றின் மனம் தீங்கு நிறைந்தது

என்ற குரு க்ரந்த்தை எடுத்துக்காட்டி ஒரு புத்தகம் (The Knights of Falsehood) எழுதியிருக்கிறார். ஓய்வு பெற்ற இந்த முன்னாள் காவல் துறை டைரக்டர் ஜென்ரல் இப்போது Institute of Conflict Management, என்ற தனியார் கல்வி நிறுவனத்தின் தலைவராக இருக்கிரார். இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான்,நேபாள், மற்றும் இலங்கை என இந்த எல்லா தேசங்களிலும் நிகழும் தீவிரவாதங்களை கிட்டத்தட்ட வானிலை அறிக்கை அளவுக்கு தினமும் புள்ளிவிவரம் தருகிறார்கள் SATP என்ற வலைத்தளத்தில். எல்.டி.டியினால் இதுவரை 41 பிரபலமான, முக்கியமான் பதவிகளில் இருந்தவர்களை தற்கொலை தாக்குதல் மூலம் பரலோகம் அனுப்பியிருக்கிறார்கள் என்ற பட்டியலை பார்க்கும் போது தலை சுற்றுகிரது. இதில் இரண்டு ஜனாதிபதிகள், ஒரு பிரதம மந்திரி (ராஜீவேதான்)பன்னிரண்டுக்கும் அதிகமான எம்.பிக்கள், பிர விடுதலை இயக்கத் தலைவர்கள் என பார்த்து பார்த்து பறித்திரிக்கிறார்கள். இவர்களை எதற்காக சாகடித்தார்கள் என்பதற்கு நேரடியான விளக்கம் கடினம். புலிகளைப் பற்றி இது காட்டும் பிம்பம் என்ன? இத்தனை பேரை போட்டுத்தள்ளிய பின்பும் ஈழம் இன்னும் உதயமாகவில்லை என்பதுதான் நிதர்சனம். பாலஸ்தீனமும் தோன்றவில்லை. இன்னும் எத்தனை காலம் ஆகுமோ?

இந்த நிறுவனம் செய்யும் சேவைகள் சுவாரஸ்யமானது. Faultline என்னும் ஒரு பத்திரிக்கை நடத்துகிறார்கள், பாதுகாப்பு பயிற்சி அளிக்கிறார்கள், மிக முக்கியமானது தீவிரவாதம், தீவிரவாதிகள் குழுக்கள் பற்றிய புள்ளிவிவரங்கள் செய்திகளை உள்நாடு மற்றும் வெளிநாட்டு செய்தி நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்ளுதல்.

பாராட்டினார்கள், பதக்கம் குடுத்தார்கள் என்று குத்திக்கொண்டு, அக்கடாவென்று ஈஸி சேரில் படுத்து, பல்லிடுக்கில் மாட்டிக்கொண்டதை நோண்டிக்கொண்டிருக்காமல் இப்படி ஒரு கல்வி நிறுவனத்தை அமைத்து நடத்துவது பாராட்டத்தக்கது. எனினும் நிறுவனம் நடத்த நிதியெங்கே என்று தேடும்போது மியுனிச்சில் வரும் லுயியின் அப்பா செய்வது போல் கில்லும் செயதால் என்ற கற்பனை அச்சமூட்டுவதாக இருக்கிரது. இதுவே ஸ்பீல்பெர்கின் வெற்றி.

கொசுறு:

சந்தேகம் தெளிதல்:

இலக்கியம்னா என்ன? அறத்தை பத்திச் சொல்றது. நன்றி தே.தி.மு.க தலைவர்.

டயலாக்:

இனம் இனத்தோடுதான் சேரும். நன்றி கருணாநிதி

3 comments:

துளசி கோபால் said...

சுரேஷூ,

இது தீபாவளி ஸ்பெஷலா? நாம இங்கிலிபீஸு படம் வாங்கறதில்லைப்பா.
தமிழ்ப் படங்களை மட்டுமே பார்க்கறதுன்னு (அ)சத்தியம் செஞ்சுருக்கேன்.

புள்ளிவிவரத்தைப் பார்த்தா சத்தியத்தை மீறலாமுன்னு தோணுது:-)))))

நம்மூட்டுலே தீபாவளி ரிலீஸ், ச்சில்லுன்னு ஒரு காதல், எம்-மகன், கேடி, மனதோடு
மழைக்காலம் & இளவட்டம். இந்தப் படம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா......

பொன்ஸ்~~Poorna said...

சுட்டி பயனுள்ளதாக இருக்கிறது.. :)

கிவியன் said...

துளசி,

சில்லு இந்த ஞாயிறு தியேட்டர்ல போடறதால வெயிட்டிங். மனதோடு மழைக் காலம் மஹா பொருமை வேணும் பாக்குறதுக்கு.

நன்றி பொன்ஸ்.