தோல்வி என்றால் என்ன?

புது வருடத்தில் ஒன்றல்ல நான்கு கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி லந்து பண்ணி சிந்து பாடி நம்பிக்கையே இல்லாதவர்களை கூட கவனிக்க வைக்ககூடிய முன்னேற்றம். பெருமிதம் கொள்ள வேண்டும்.

ரைட் பிரதர்ஸ் தங்களின் விமான வடிவமைப்பு முயற்சிகளை மிக ரகசியமாக வைத்திருந்தனர். தங்கள் செய்வதறிந்தால் லொள்ளு பண்ணுவார்களோ என்று வெட்கம் வேறு. ஆனாலும் இதை எப்படியோ அறியவந்து ஜான் ட்ரோபிரிட்ஜ் 1869ல் இவர்கள் செய்வதி கிண்டலடித்து எழுதிய கவிதை ஆங்கிலத்தில் இங்கே படிக்கலாம். இதனை தன்னுடைய அக்னிச் சிற்குகள் சுயசரிதையில் கலாம் தமிழில் சிறிது மொழி பெயர்த்துள்ளார் :

...ஊசி, நூலுடன்
மெழுகு, சுத்தி
இடுப்புக் கச்சை 'பக்கிள்' திருகாணி-
இப்படிப்பட்ட பொருள்களையே
மேதைகள் பயன்படுத்துகிறார்கள்...
வடிவத்திற்கு இரண்டு வெளவால்கள்
அதிசயமான மனிதர்கள்
ஒரு கரிச்சட்டி, இரண்டு துருத்திகள்!

என்னா லொள்ளுப்பா? ஆனா இதெல்லாம் கண்டுக்காம பறந்து சாதிச்சு காட்டினாய்ங்க.

அதுக்காக இந்தியா இப்ப நிலாவுக்கு கோடி கோடியா செலவழிச்சு ராகெட் அனுப்பிச்சுதான் ஆகனுமா?

வெற்றி பெற்றால்தான் தோல்வி என்றால் என்னவென்று புரியும்.

0 comments: