நடந்தவை நடப்பவை

நேற்று தொலைக்காட்சியில் பார்த்தது இரண்டு.

ஒன்று 2007ம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருது. இரண்டாவது சேனல் சர்ஃபிங்க்ன் போது (அப்படி ஒண்ணும் நூத்து கணக்கா சேனல் இல்ல இந்த ஊர்ல, ஃப்ரீயா வருவது 6 தான்!!) அல்ஜசீராவில People Power என்ற நிகழ்கால செய்தி தொகுப்பில் உலகத்தின் மூலை முக்கில நடக்கும் மனித சுதந்திர மீறல், அடக்குமுறைகள் பற்றி செய்திகள் வழங்குகிறார்கள். ஷரீன் எல் ஃபெகீ மற்றும் ஜுலியானா ருஃபுஸ் என்று இரண்டு தொகுப்பாளினிகள்.

நேற்று காட்டியது இலங்கையில் LTTEயின் மறுப்பக்கம் பற்றி. வேறு வழியின்றி இலங்கையில் வாழும் மற்றும் புலம் பெயர்ந்த தமிழ்ர்கள் LTTEயிக்கு ஆதரவளிக்க வேண்டிய கட்டாயத்தினை பற்றி அதில் காட்டினார்கள். லண்டனில் வாழும் தமிழருக்கு LTTEக்கு எதிராக கருத்து கூறினால் பாதுகாப்பில்லை என்றால் எந்த அளவுக்கு LTTEயின் ஆதிக்கம் உள்ளது என்பது மறைமுகம். இருபது வருடங்களாக நடக்கும் போராட்டம். ஏராளமான உயிரிழப்பு. இதில் பிற இயக்கத் தலைவர்கள் மற்றும் பல முக்கிய தலைவர்கள் என புலிகள் போட்டுத்தள்ளியது ஒரு நீண்ட பட்டியல். அதை இங்கே பார்க்கலாம். LTTEக்கு மாற்று தேவை என்பது இந்த மக்களின் மெளனமான எதிர்பார்ப்பு என்கிறது. உண்மைதானோ?

ஆஸ்கார் விருது:

An Inconvinient Truth
ஆவண படத்துக்கு அல் கோர் விருதுவாங்கி, 'Fellow Americans' என பழக்க தோஷத்தில்அவர் பேச தொடங்க, அவர் உடனிருந்தவர் இட்டுப்பில் குத்த, அல் உடனே சுதாரித்தது வேடிக்கையாக இருந்தது. ப்ரெசிடெண்டாதான் ஆக்கல போனா போகட்டும்னு ஆஸ்கார் குடுத்துட்டாங்களோ? எனினும் இந்த வருடத்திலிருந்து ஆஸ்கார் விருது வழங்கும் விழா ஏற்பாட்டில் இயற்கைக்கு மாசு ஏற்படாதவாரு அமைக்கப்படுமாம். ஒரு பிலியன் மக்கள் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியினூடாக அல் கோர் தனது பூகோள வெப்ப அதிகரிப்பை பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்கு பாராட்டலாம்.


உள்ளூர் செய்தி:

குழந்தையை அடிச்சு வளக்கலாமா? நாம அத பத்தியெல்லாம் கவலையா பட்டோம்? ஆனா இங்க எவ்வளவு அடிக்கலாம், எப்படி அடக்கலாம்னு போன வாரம் இங்க பாராளுமன்றதுல தலைய பிச்சுக்கிட்டு விவாதம் பண்ணி ஒருவழியா அத சட்டமாக்க ஓட்டு போட்டுட்டாங்க. ஆனா வேடிக்க என்னன்னா இந்த சட்டம் நிறை வேர தீவிரமா முயற்சி செஞ்ச அமைச்சருக்கு கொலை மிரட்டல் வர அளவுக்கு போயிடிச்சு. குழந்தைய அடிக்கவே இந்த நாட்டுல இவ்வளவு யோசிக்கிறாய்ங்க, நம்ம ஊர்லன்னா வேலைக்கு வெக்கிறத பத்தி கூட கண்டுக்றதில்ல..ம்ம்ம்..நாமும் ஒரு நாள் முன்னேருவோம் இந்த நிலைக்கு.

2 comments:

துளசி கோபால் said...

நேத்து இவ்வளோ விஷயம் நடந்துருக்கா? அடடா............

இங்கே நேத்து சூடுன்னா அப்படி ஒரு சூடு. 30க்கு போயிருச்சு. வீடு
தங்க முடியாம சாயந்திரம் சம்னர் போயிட்டேன், கட்டுச்சோறு மூட்டையோடு.
( எ. சாதம்)

கிவியன் said...

இப்படி நாட்டு நடப்ப க்ண்டுக்காம் வெய்யிலடிக்குனுன்னு போய்ட்டா எப்படி?