இலக்கு ஒன்றுதான்
எல்லா மதமும் கூவுகிறது;
பாதை காவலர்கள்
உங்களை நெகிழ்விக்க
மாயங்கள் வித்தைகள் ஆச்சர்யங்கள்
கதைகள் பல கூறுவார்கள்
அன்பாய் மிரட்டவும் செய்வார்கள்;
எல்லாம் வல்ல மாயை
என்று நடுப்பாதை போடும்
நவீன புனிதர்கள்;
உண்மை எதுவென்றறியாது
சீனத்துக்காரனின் சிந்தனையில் சிவனோ
ஹங்கேரியன் கனவில் ஹரியோ
தோன்றியதாக தெரிந்தால்
ஒரு வழி கிடைக்கலாம் என்ற
பகுத்தாயும் மனத்தை அடக்கி
பக்தியில் பாய்ந்துவிட்டால் மோட்சம்
இல்லை இங்கும் அங்குமாய் வேஷம்;
சுடர்விடும் அறிவிங்கு இடரே
நிச்சயமற்ற கோட்பாட்டுக்கிணங்க
உணர்ந்தால் விளக்க இயலாது
விளங்கினால் உணர முடியாது.
2 comments:
கிறிஸ்மஸ் பார்ட்டிகள் கூடிப்போச்சா? ;-))))
வாங்க துளசி. பார்டியோ பார்ட்டிதான். இரண்டு வாரம் முன்னாடி நிலாவில முகமெல்லாம் தெரிய ஆரம்பிச்சு அத ஒட்டி விவாத மெல்லாம் நடந்து அப்படியே சிந்தனைல ஓடிக்கிட்டே இருந்தத கவிதயா ஏன் எழுதினேன்னா அப்பதான் சில பேருக்கு என்ன சொல்ல வரேன்னு புரியாது. புரிஞ்சுதா?
Post a Comment