அப்படி ஒன்று இந்த செமி கோலன் தேசத்தில் நடந்ததால் நான் மீண்டும் பெட்டியை கட்டி மறுபடி ஒரு குடி பெயர்தல்...விருப்பு வெறுப்பு எதுவுமின்றி நிகழ்கிறது..
மீண்டும் பயணம், என் நினைவுகளுடன், நம்பிக்கைகளுடன், எதிர்பார்புகளுடன்...
மனிதர்கள் பல வகை, பல நல்ல, சில கெட்ட, சில அருவருக்கத்தக்க அனுபங்கள் எனினும் வழ்கைக்கு அனுபவமே அஸ்திவாரம்..
இந்த உலகம் பெரிது வாழும் நாட்கள் சிறிது இயற்கை அற்புதமானது அனுபவிக்க கிடைக்கும் வாய்புகளை சில சொந்த காரணங்களுக்காக பல சமயம் தள்ளி வைத்துவிடுகிறோம்..
சரி கிளம்புவதற்கு முன் ஒரு நடப்பவை நடந்தவை ...
நியுஸி நாட்டு நடப்புகள்:
இந்த வருடம் தேர்தல். அதனால் மக்களை கவர ஆளாளுக்கு அள்ளி விடுகின்றனர். வருமான வரி குறைப்பு, மாணவர்களுக்கு படிப்பு சலுகை என்று..
இந்த ஊரிலும் விமானத்தை கடத்துகிறார்கள் காரணமேயின்றி..ஏதோ கல்லும் நாயும் கிடைத்து போல்...ஆக மொத்தம் அப்பாவி பயணிகளுக்கு ஆப்பு வைக்கப்பட்டதுதான் மிச்சம். ப்லேன்ஹிம் விமான நிலையத்தில் இதுவரை கோயம்பேடு பஸ்டான்ட் போல் செக்யூரிடி செக் எதுவுமின்றி பயணம் செய்ததை மாற்றி இனி சோதிக்கப் படுவார்கள் என மாற்றி விட்டர்கள்.
வீட்டுக் கடன் வட்டி கிட்டத்தட்ட 10% தொட்டுவிட்டதால் வீடு விற்பனை கடினமாகி விட்டது. இது 2010ல் 12% வரை ஆகலாம் என நிபுணர்கள் ஆரூடம் வேறு சொல்லியிருக்கிறார்கள். நியுஸி பொருளாதாரம் மிகவும் திறந்தன்மையானது (exposed). பக்கத்து ஆஸி எதாவது காலையில் மாற்றம் செய்தால் இங்க அதன் எபஃக்டு இங்க மாலையில் தெரியும் ..
இந்த வருடம் கோடை ஆசிய வெப்ப்பமண்டலம் போல இருந்ததால் ஆங்காங்கே தண்ணீர் இன்றி புல் முளைக்காம போனதால் ஆடு மாடு எல்லாம் உணவின்றி போனது. அதனால் பல விவசாயிகள் ஆட்டு பண்ணைகளை விற்கும் நிலைமை. 10 லிட்டர் கறந்த மாடு 4 லிட்டர் கொடுப்பதால் பால் உற்பத்தி குறைந்து மாட்டுப்பண்ணை வைத்திருப்போருக்கும் பாதிப்பு. ஆக இன்வர்கார்கில்லில் 5 ஏக்கர் நிலத்தை கடன் இல்லாமலேயே வாங்குமளவுக்கு வீழ்ந்து இருக்கிறது..
இங்கே தெற்கு தீவில் மின் உற்பத்தி வடக்கு தீவை விட அதிகம். தெற்கிலிருந்து கடலுக்கடியில் கேபிள் போட்டு சப்ளை செய்கிறார்கள். மழை குறைந்ததால் மின் உற்பத்தி பாதிப்பு. இதுல அந்த கேபிள்ல வேர ஏதோ கோளாறாம் அதயும் மாத்தனுமாம். அதனால் மின் வெட்டுக்கு ரெடியாயிரு நைனா என எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
ஆக இதனாலெ எல்லாம் இந்த நாட்ட விட்டு போகலீங்கோ..ரொமப நிபுணத்துவம் உள்ளவரா (specialize) இருந்து வேலை பூடுச்சுன்னா உங்க ஈகோவ ஓரம் கட்டிட்டு ஒன்னு சூப்பர் மார்கெட்டுல செக்கவுட் ஆபரேட்டராகிவிடலாம் இல்லேன்னா அப்டீக்கா டோல்ன்னு அரசாங்கம் தர்ரத கூச்சப்படாம வாங்கிட்டு ஸ்கை டிவில ரஃக்பி, க்ரிக்கெட், shortland street என்று இன்னபிர வற்றை பார்த்து காலம் கடத்தலாம்.. இது எதுவும் உங்களுக்கு ஒத்து வரலேன்னா அப்பால எங்கயாச்சும் (அப்டீன்னா ஆஸி), வேல கிடச்சா போய் சேந்துகலாம்...
கடந்த வருடம் மட்டும் 42,000 பேர் நிரந்தரமாக ஆஸிக்கு குடிபெயர்ந்துள்ளனர். கடந்த பதிநைந்து வருடங்களில் மிக அதிகம் என புள்ளிவிவரம் கூறுகிறது..இந்த தேர்தலில இதை வைத்தும் கட்சிகள் கும்மியடிக்கின்றன.
ஒரு காலத்தில் அப்பாக்கள் அதே காலை எட்டரைக்கு கிளம்பி அதே 5ம் நம்பர் சென்டரல் பஸ் பிடித்து அதே அலுவலகத்தில் அதே மேசையில் கிட்டத்தட்ட முப்பது வருடங்களை கழித்து மாலை ஆறு மணிக்கு மேல் ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வந்து பி.எஃப் லோனை அடைக்க சனி ஞாயிரானாலும் எஸ்ட்ரா வேலை செய்து....நினைத்துப்பார்க்கவே கடினமாக இருக்கிறது, வாழனும் என்றால்?...
ஆனால் இன்று மாறுதல் என்பது மிக மிக இயல்பான ஒன்று.....என்ன ஒரு வித்யாசம் என்றால் ஒரு மாறுதலுக்கும் மற்றொரு மாறுதலுக்குமான இடைவெளி மிக குறுகிக்கொண்டு வருகிறது.....
மாறிய பின் மீண்டும் தொடரும் பதிவுகள் புதிய இடம் புதிய மனிதர்கள் புது அனுபவங்கள் சார்ந்து....
4 comments:
இப்படி 'மொட்டையா' பதிவு போட்டா எப்படி?
குடி எங்கே பெயருதுன்னு சொல்லலையே........
நாமும் அதே ஆஸிதானோன்னு நினைக்க வேண்டி இருக்கேப்பா சுரேஷு.
பதிவுகளைப் பொறுத்தவரை எங்கிருந்தாலும் போட்டுக்கலாம்.
அந்த டாக்ஸ் கட் எல்லாம் நமக்கில்லை தீர்மானிச்சுத் தண்ணி( அட வெறுந்தண்ணிப்பா) குடிச்சாச்சு.
இப்ப அம்மா எல்லாருக்கும் வீடு பேறு தரப்போகுது போல.
பொறுத்திருந்து பார்க்க நேரம் இல்லைன்னா நான் அப்பப்ப நியூஸ் கொடுத்து அனுப்பிருவேன்.
என்ன பாட்டு பாடலாமுன்னு யோசிச்சா ஒண்ணே ஒண்ணுதான் ஞாபகம் வருது.
'எங்கிருந்தாலும் வாழ்க'
(க்ரக் க்ரக் க்ரக்...அது தவளையின் சப்தம்)
இடம் பெயரும்போது கிவியன்ங்கற பேரை மாத்திக்கப்போறீங்களா என்ன??
போற இடத்துல வெற்றியும் மகிழ்ச்சியும் தொடர வாழ்த்துக்கள்!!!
வாங்க துளசி,
செல்லுமிடம் சஸ்பென்சு. சென்ற பின் நிச்சயம் பதிவு எழுதுவேன் அதில கண்டுகொள்ளலாம். ஆனா ஆஸி இல்லே. கிவி இனி கூவும் வேரிடத்திலிருந்து...
நன்றி சின்ன் அம்மிணி,
குடிய்ரிமைபடி நான் இப்ப கிவியன் அதானால் எங்கும் இதே பெயரில் தொடர உத்தேசம். சேஷப்ப ஐயர் சே சேக்ஸ்பியர் சொன்ன மாதிரி "what's in a name"..
Post a Comment