எடின்பரோ நகர்வலம்

இந்த ஊரை சேர்ந்த தற்கால எழுத்தாளர் ஜே. கே ரெளலிங்கை பற்றி எழுதாவிட்டால் ஹாரி பாட்டர் ஏதாவது மந்திரம் போட்டு அப்புறம் நான் பதிவே எழுத முடியாம போயிடகூடும் இல்ல வலைபதிவவெல்லாம் படிச்சு மனநோய் வந்துடும்.

எந்த ஒரு எழுத்தாளரும் இவர் அளவுக்கு தன் எழுத்து மூலம் சம்பாதித்ததில்லை. ஒரு 13 வருடம் பின்னால் சென்று பார்ப்போம். வாரம் £70 பவுண்டு அரசாங்கம் குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு கொடுக்கும் உதவித்தொகையில், எடின்பரோவில் உள்ள காப்பி கடையில் ஆறிப்போன காப்பி குடித்துக்கொண்டு, பக்கத்தில் ப்ராமில் மகள் ஜெஸ்ஸிகாவை வைத்துக்கொண்டு எழுதியிருக்கிறார்.

யோசித்துப்பாருங்கள் உங்களில் எத்தனை பேருக்கு ஒரு காப்பி கடையில் உட்கார்ந்து எழுத முடியும்? சரி, காப்பி கடையில் ஏன்? இவருடைய குழந்தை ப்ராமில் வைத்து தள்ளிக்கொண்டே சென்றால்தான் தூங்குமாம். அப்படியே ஒரு காப்பி கடையில் நுழைந்து அங்கு உட்கார்ந்து எழுதுவது பழக்கமாகிவிட்டது. அது தவிர எழுதும் போது பாதியில் எழுந்து சமையலறைக்கு சென்று காப்பி போடவேண்டாம் பாருங்கள்.

முதல் திருமணம் முறிந்த பின் மனச்சோர்வுக்கு ஆட்பட்டு தற்கொலை முயற்சி எல்லாம் செய்திருக்கிறார். அந்த மனநிலையில் தோன்றிய ஒரு கருதான் டெமென்டார்ஸ் என்ற ஆத்மா இல்லாத ஒருவித ஆவிகள்.

40 வயதிற்குள் பில்லியனர் ஆன ஒரே (பெண்) எழுத்தாளர். ராபர்ட் ப்ரூஸ் மாதிரி 12 பதிப்பகங்கள் திருப்பி அனுப்பியும் விடாது 13ம் முறையாக ப்ளும்ஸ்பெரி பதிப்பகத்துக்கு அனுப்பி வைத்தார். முதன் முதலில் இவர் அனுப்பி வைத்த கதையை படித்து அலைஸ் நியூடன் என்ற பத்து வயது ப்ளும்ஸ்பெரி பதிப்பகத்தின் சொந்தக்காரரின் மகள் தன் அப்பாவிடம் சுவாரசிமாக இருப்பதாக சொன்னதால் சரி இதை பதிப்பித்துதான் பார்ப்போம் என அவர் £1500 பவுண்டு சன்மானம் கொடுத்து முதல் பாட்டர் கதையை ஏற்றுக்கொண்டார்.
ரெளலிங்கின் இன்றய எல்லா புகழுக்கும் காரணமானவள் இந்த அலைஸ்.


எடின்பரோவில் மனிதர்களுக்கு மட்டுமல்ல மிருகங்களுக்கு கூட சிலை இருக்கிறது. Greyfriars Bobby என்கிற நாய்க்கு. இவுக கிட்டதட்ட இவரு சகா HMV நாய் மாதிரிதான். தன் எசமானர் கிட்ட அவ்வளவு விசுவாசம். எப்படின்னா எசமானர் இறந்து 14 வருஷம் வரைக்கும் அவருடைய சமாதியை விட்டு போகவேயில்லை. எசமானர் இல்லாத இந்த நாய விட்டு வெக்கிரது நல்லதில்ல போட்டு தள்ளிரனும்னு(!!) சிலர் சொல்லியிருக்காங்க. ஆனா ஒரு சில நல்ல மனிதர்கள் தலையிட்டு அதோட லைசென்சுக்கு நாங்க பணம் தரோம் ஆனா நாய் எடின்பரோ நகர மன்றத்தின் பொறுப்பு என முடிவு செய்தனர். அப்புறம் 1872ல் இவரு இறந்த உடனே அவரோட எசமானரின் சமாதிக்கு அருகேயே அடக்கம் செய்திருக்கிறார்கள். இவர வெச்சு புத்தகங்கள் இரண்டு திரைப்படங்கள் எல்லாம் வந்திருக்கு.




ஸ்காட்லேண்டில் கண்டுபிடிக்கப்பட்ட சில சமாச்சாரங்களையும் பார்ப்போம்:

ஜேம்ஸ் ஸ்காட்: நீராவி இன்ஜின்.

அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங் : பென்சிலின்

சார்லஸ் மக்கிண்டோஸ்: ரெயின்கோட்

ஜேம்ஸ் யங்: பாரஃபின் ஆயில்

கிர்க்பாட்ரிக் மெக்மிலன்: இரு சக்கர சைக்கிள்

லார்ட் கெல்வின்: கெல்வின் அளவு, thermodynamics

ஜான் பாய்ட் டன்லப்: நவீன டயர்

அலெக்ஸாந்தர் க்ராஹாம் பெல்: தொலபேசி

ஜான் லொகி பாய்ட்: தொலகாட்சி சாதனம்

இது தவிர ஃபாக்ஸ் மெஷின், தெர்மாஸ் ப்ளாஸ்க், ராடார், இன்சுலின், தபால் முத்திரை, கோல்ஃப், மருதுவ ஊசி, கணித மடக்கை (logirthm), தசம புள்ளி (decimal point), சேமிப்பு வங்கி முறை, மோட்டார் வாகன காப்புறுதி..

இது எல்லாம் இல்லாத உலகம் எப்படி இருக்கும்? இவர்கள் உலகுக்கு அளித்துள்ளது மிக நீண்டது...



மொக்கை:

நாம் இந்த பதிவுல நன்றியுள்ள நாய்கள பத்தி பாத்தோம். ஆனா இந்த BMW கார் கம்பெனிக்கு நாய்ங்க அப்டீக்கா காருமேல உச்சா போரது சுத்தமா புடிக்கவே இல்ல. அதுனால புதுசா ஒரு டெக்னாலஜி கண்டுபிடிச்சிருக்காங்க. அது என்னன்னா நாய் இந்த புது டெக்னாலஜி பொருத்திய கார் மேல உச்சா போச்சுன்னா அந்த உச்சா வழியா நாய்க்கு ஒரு ஷாக் அடிக்கும். இரண்டு தடவ இப்படி அனுபவ பட்டுச்சுன்னா அப்புறம் தென்னாலிராமன் பூன மாதிரி கார பாத்தாலே வால இடுக்கிட்டு ஓரமா ஓடிரும்னு இந்த கம்பெனி சொல்லுது.

எனக்கென்னவோ இந்த டெக்னாலஜி நம்ம ஊர்ல ஆசாமிங்களுக்கு தேவை. நம்ம முக்கிய நகரங்கள்ள குப்பைதொட்டி பக்கம், ட்ரான்ஸ்ஃபார்மர் பின்னாடி, இண்டு, இடுக்கு இங்கெல்லாம் இந்த சாதனத்த பொருத்தி உச்சா போனா ஜிக்கு ஷாக் அடிக்றா மாதிரி செஞ்சா கொஞ்சம் பொது இடத்துல சூச்சூ போரது குறையும்னு நினைக்கிறேன்.

3 comments:

கிவியன் said...

பிகு:இன்னிக்கு நெசமாவே மொக்கை மொக்கைதான். பாக்கலாம் யாரு கண்டுபிடிக்கிறாங்கன்னு.

துளசி கோபால் said...

Greyfriars Bobby படம் போட்டதைப் பார்த்தபிறகுதான் மனசு நிம்மதியா ஆச்சு.

இன்னும் கோட்டைக்குளே வலம்வந்து எழுதுங்க. நான் குண்டு போட்ட(??) நேரத்தைத் தப்ப விட்டுட்டேன்:-)

கிவியன் said...

கோட்டை வலம் எழுதிட்டா போச்சு, ஆனா ஸ்காட்லேண்டில் கோடையோ கோட்டைதான். இது வரை நான்கு பர்த்தாயிற்று, Edinburgh, stirling, Dunnottar (Aberdeen பக்கம்), Kilchurn.

\\நான் குண்டு போட்ட(??) நேரத்தைத் \\ நாங்கல்லாம் பொழுதன்னைக்கும் வெயிட் போட்டுட்டே இருக்கோம், அது எப்படி நீங்க நேரங்காலமெல்லா பாத்து குண்டு போட்டீங்க?