நடந்தவை நடப்பவை-9

இந்த வருடம் விம்பில்டனில் உள்ளூர் ஆண்டியை வெளியூர் ஆண்டி தோற்கடித்ததில் பிரித்தானிய மாக்களுக்கு சற்று வருத்தம். ஸ்காட்லாந்துகாரரானாலும் சரி யுகே பிராந்தியவாசி என போனால் போகட்டும் 1936ல் ஜெயித்த ஃப்ரெட் பெர்ரிக்கு பிறகு ஆண்டி மர்ரியாவது ஜெயிப்பார் என எதிரிபார்த்தார்கள். அது நடக்கவில்லை.

பல்வலி என பல் மருத்துவரிடம் போனதில் வேர்கால்வாய் பழுதுபட்டிருப்பதால் ஐந்து நாட்களுக்கு ஆமாக்ஸிலின் சாப்பிட்டுவிட்டு வா அதை சரி செய்யலாம் என கூறினார். புல்லட் மாதிரி இருக்கும் அந்த மாத்திரையை சாப்பிடும் போது என் பெரியம்மா ஞாபகம் வந்தது. தினமும் காலை ஒரு மூடி நிறைய மாத்திரைகள், ரத்த அழுத்தத்துக்கு ஒன்று, கொழுப்பை குறைக எதாவது ஒரு ஸ்டாடின், இதயத்தில் அடைப்பு ஏற்படாமல் இருக்க ஆஸ்பிரின், ஃபோலிக் ஆஸிடுக்கு ஒன்று, மேலும் இதனுடன் ரத்த சக்கரை அளவை கட்டுப்படுத்த ஒன்று என ஒன்றன் பின் ஒன்றாக காலை ப்ரேக் ஃபாஸ்ட் போல சாப்பிடுவார். இது சிலருக்கு அவரவர் உடல நிலை பொருத்து மூன்று வேளையும் சாப்பிடும் நிலை இருக்கலாம். என்ன கொடும சார்? இப்படி பல மாத்திரைக்கு பதிலாக இவை எல்லாவற்றயும் கலந்து ஒரு கலவையாக செய்தால் என யோசித்து 2002ல் Polypill என ஒரு யோசனைய முன் வைத்து செய்த ஆராய்ச்சி பலன் தருவதாக இருக்கிறது.

இந்த பல்குளிகையில், ரத்த அழுத்தம், குழாய் அடைப்பு, கொழுப்பை குறைக்க, என எல்லாவற்றையும் ஒரே மாத்திரையில் கலந்து கொடுப்பதால் தனித்தனியே சாப்பிடும் தொந்திரவு இல்லை. இந்தியாவில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் இதற்கான சோதனைகளை நடத்தியுள்ளார்கள். சமீத்ததில் இதன் முடிவுகளை வெளியிட்டுள்ளார்கள். இந்த வகை மாத்திரகைள் இப்போது இந்தியாவில் பொதுவில் அனுமத்தித்து இருக்கிறர்ர்கள். விரைவில் உலகளவில் எல்லோருக்கும் கிடைக்கக் கூடும். ஆனால் பாவம் மிக நொந்து கொண்டே பல மாத்திரைகள் சாப்பிட்ட என் பெரியம்மா இந்த வசதியை பெற முடியாமலே போய் சேர்ந்துவிட்டார். Pollypill பல மாத்திரைகளை விழுங்கவேண்டிய துர்பாக்கிய நிலையிலிருப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.


ஆண்கள் இல்லா உலகம்

மற்றுமொரு சமீபத்திய மருத்துவ கண்டுபிடிப்பு, நியுகாஸில் பலகலை கழக நயர்னியா (Nayernia) மற்றும் North East England Stem Cell Institute (Nesci)ம் இணைந்து சோதனைசாலையில் மனித விந்தணுவை தயாரித்து காட்டியுள்ளார்கள். இதனால் பல நன்மைகள் என இதனை கண்டுபிடித்தவர்கள் பட்டியலிட்டாலும், இது சரியில்லை என அதற்குள்ளாக பல எதிர்ப்புகள் குவிந்துள்ளது.

இதன் தொடர்பாக உலக அளவில் ஆண்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருவதாக ஒரு தகவல் எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது. இந்த மாதிரி செயற்கையாக தயாரித்த விந்தணு மூலம் செயற்கையாக ஒரு பெண் கருத்தரிக்க இயலும். பின்பு ஆண் என்பது தேவையில்லாது போகும். இப்படியே தொடர்ந்தால், ஆண்களே இல்லத உலகமாக மாறும் வாய்பிருக்கிறது.

இந்த வியுகத்திற்கு ஆதரவாக ஆறு வருடங்களுக்கு முன்பு வந்த ப்ரெய்ன் சைக்ஸ் (Bryan Sykes) என்பவர் எழுதிய Adam's Curse என்கிற புத்தகத்தில் ஆண்கள் இல்லாத உலகம் என்கிற ஒரு கோட்பாடை முன் வைத்து எழுதியிருக்கிறார். மனித செல்லில் 23 ஜோடி க்ரோமொசோம்கள் உள்ளது. இதில் 22 ஜோடிகள ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே மாதிரியானவை. இந்த 23வது ஜோடியில்தான் ஆணுக்கு XY க்ரோமொசோம் பெண்ணுக்கு XX க்ரோமொசோம். இந்த Y க்ரோமொசோம் என்பதுதான் ஆணின் விந்தனு உற்பத்தி செய்யும் தன்மையை கொடுக்கிறது.

ஒவ்வொரு முறையும் செல் பிரியும் போது இந்த க்ரோமொசோமில் எதாவது கோகளாறு எற்பட்டால் சரி ஜோடி க்ரோமொசோம்களில் இந்த கோளாறு சரிசெய்ய பட்டுவிடும். ஆனால் இந்த் XY ஜோடியில் Y க்ரோமொசோமில் ஏற்படும் கோளாறுகள் சரிசெய்ய ஜோடியில்லாது போவதால் கோளாறுகள் தொடரும். ஒவ்வொரு தலைமுறை ஆண்களுக்கு இந்த Y க்ரோமொசோம் மரபணு மாறுந்தன்மையால் 10 சதவிகிதம் இனபெருக்கம் செய்ய இயலாது போகும். இப்படியே தொடர்ந்து 125000 வருடங்களுக்கு பின்பு இந்த Y க்ரோமொசோம் முற்றிலுமாக செயலிழந்து அல்லது அழிந்தே போகக கூடும் என்று கூறுகிறார். ஆனால் பெண் இனம் single sex reproduction or Asexual முறைப்படி கருத்தரிக்க இயலும். ஆக ஆண்கள் இல்லாத உலகம் இன்னும் 125000 வருடத்தில் சாத்தியமே. அந்த உலகம் எப்படி இருக்கும்? அவரவர் கற்பனைக்கு...

6 comments:

துளசி கோபால் said...

இப்போ 3 மாத்திரையில் இருக்கோம். ஆனா இந்த பாலி பில் வசதியில் அவுங்கவுங்களுக்க மருந்துகளின் அளவை எப்படி சேர்ப்பாங்க?

கிவியன் said...

அட கஷ்டமே 3னோட இருக்கட்டும். pollypill பத்தி அடுத்த முறை உங்க மருத்துவர பாக்கறப்போ கேளுங்க.
(எனக்கே இந்த கேள்வி, எழுந்தது நீங்க கேட்டுபிட்டீஙக).

இந்த வித மாத்திரைகளில் பல வேறுபாடுகள் சாத்தியம் அதனால் வியாபார ரீதியாக பெரும் லாபமூட்டும் சாத்திய்ம் உள்ளது. இது தவிர இன்ஷுரன் கம்பெனிகளும் இதில் கவனம் கொண்டுள்ளன. அட நீங்க கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்ல வரனேன்னா அது பத்தி எனக்கு தெரியாது.

ஜெகநாதன் said...

ஆஹா, சுவாரஸியமான அறிவியல் தகவல்கள்!!! உங்கள் எளிய நடைக்கு பாராட்டுகள்! நிறைய எழுதுக.

கிவியன் said...

வாங்க ஜெகா, பி.ஊக்கு நன்றி.

சின்ன அம்மிணி said...

//வேர்கால்வாய்//

நல்லாத்தான் மொழியாக்கம் பண்ணீருக்கீங்க. எத்தன பணம் செலவுன்னு சொல்லுங்க.

கிவியன் said...

நன்றி சி.அ, Polypill - பல்குளிகை, இதுவும் சரிதானே?

யுக்கேயில் NHS மூலம் பதிவு செய்து வைத்துக்கொண்டால் பல் மருத்துவர் சொத்தை எழுதி வாங்குவதில்லை (சொத்தை பல்லை வேண்டுமானால் எடுத்து விடுவார் :-))). 90 பவுண்டுகளில் முடித்துவிடலாம் ராசா என்று சொல்லியிருக்கிறார், மீதி NHS தருகிறது.