மழையில் நடப்பது என்பது எனக்கு பிடித்தமான ஒன்று. சமீபத்தில் இடியோசையுடன் கூடி மழை சென்றவாரம். எடின்பரோவில் அவ்வளவாக மின்னலோ இடியுடன் கூடிய மழையோ கிடையாது. பலருக்கு மின்னலை பார்க்கவே முடியவில்லையே என்ற வருத்தமும் கூட. வழக்கத்தைவிட இந்த வருட வசந்த காலத்தில் (மார்ச்-மே) மழை கம்மி. பனிக்காலம் முடிந்தவுடன் இங்குள்ள செர்ரி ப்ளாசம் (Cherry Blossom) மரங்கள் இலையே இல்லாமல் பூத்து தள்ளிவிடும் பார்க்கவே மிக ரம்மியமாக இருக்கும். செர்ரி பழத்துக்கும் இந்த செர்ரி ப்ளாசம் மரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது வேறு வகை மரம் இது வேறு.
பல்கலைகழகத்துக்கு நடந்து செல்லும் வழியெங்கும் இந்த மரங்கள், வித விதமான வர்ணங்களில்..



நடந்துகொண்டே செல் காமிராவில் பிடித்ததால் அவ்வளவு சிறப்பாக வரவில்லை ஆயினும் அந்த அழகு காட்சியில் புரிபடும் என்று நினைக்கிறேன். வழக்கமாக பெஃபரவரி இறுதியில் பூத்துவிடும் இந்த மரங்கள் மார்ச் இறுதி தொடங்கி ஏப்ரலில்தான் பூக்கத் தொடங்கின. இப்படி பூக்கும் மரங்கள் கடந்து போன பனிக்காலம் எப்படி இருந்தது என்பதையோ அல்லது வர இருக்கும் கோடை எப்படி இருக்கக்கூடும் என்பதையோ எடுத்து கூறுவது போல் இருக்கிறது. அதனால்தான் இங்குள்ள மக்கள், இப்படி நடந்தால் அந்த வருடம் கோடை மிகவும் நன்றாக இருக்கும் என்ற ஒரு பழைய நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அது மிகச் சரி என்பது போல கோலாகலமாக மழையே இல்லாத வெய்யிலோ வெய்யில் காயும் கோடை தொடங்கியுள்ளது.
நியுசியிலும் பனிக்காலம் முடிந்த பின் வச்ந்த காலத்தில் பூக்கும் பொஹுட்டுக்காவா மரங்களும் பார்க்க அழகாக இருக்கும்.
2007ல் நம்ம ஊருக்கு(தில்லி தொடங்கி, மதுரை வரை) போனபோது மரங்கள் இல்லாத பட்டினம் எங்கும், மக்கள், கட்டிடங்கள், கட்டிடங்கள், பின்பு மரங்களே இல்லாத வெளிகள். முன்பெல்லாம் நம்ம ஊரிலும் பூ பூக்கும் மரங்கள் இருந்தது. உதாரணத்துக்கு Flame or Fire of the forest என்று சொல்லப்படும் சிகப்பு வர்ணத்தில் பூக்கும் மரங்கள் இந்த செர்ரி மற்றும் பொஹுட்டுக்கு இணையான அழகு உண்டு.7% GDPயை நோக்கிய அசுர வளர்ச்சியில் இந்த மரங்கள் எல்லாம் காணமலே போய்விட்டன.
2 comments:
வசந்தத்தை வரவேற்கும் மரங்களாச்சே இவை .
சென்னையில் சில பகுதிகளில் குறிப்பாக அடையார், பெஸண்ட் நகர் பகுதிகளில் இந்த ஃப்ளேம் ஆஃப் த ஃபாரஸ்ட் இருக்கு.
முன்னே இருந்ததுக்கு இப்போ கொஞ்சம் மரங்கள் கூடி இருக்கு.
சென்னையில் இருந்து துளசி கோபால்
என்ன காதலர் தினத்தில் தொடங்கின பயனம் இன்னும் முடியவே இல்லயா? எப்ப ஊர் திரும்பறீங்க?
காமிரா கைக்கு வந்தப்புறம் உங்க பதிவெல்லாமே படங்களோட மிக வர்ணமயமாக இருக்கிறது. (ஏண்டாப்பா இதை துளசிதளத்தில வந்து சொல்லப்படாதோன்னு கேக்க கூடாது)
சென்னையில் பலங்கள்தான் கூடியிருக்குன்னு நெனச்சேன், பரவாயில்லை மரங்களும் கூடியிருக்குனு கேள்விப்படறப்போ ஆறுதலா இருக்கு.
Post a Comment