இந்த வாரம் முழுவதும் பனி பொழிந்து கொண்டே இருக்கிறது,
காரை கிளப்புவதற்கு ஒரு கால்மணிநேரம் செலவிட வேண்டியிருக்கிறது,
சாலை வழுக்குகிறது, கவுன்சிலிலிருந்து சாலையில் போடுவதற்கு உப்பு கொண்டுவந்து மஞ்சள் பெட்டியில் ரொப்பி வைக்கிறார்கள்,
போக்குவரத்து ஆங்காங்கே ஸ்தம்பித்துவிட்டது, ரயிலும், விமானங்களூம் தாமதமாகிறது,
கிருஸ்துமஸ் விடுமுறை பிரயானம் இதனால் இந்த வருடம் மிகவும் பாதிக்கப்பட்ட்டுள்ளது.
எதற்கு ஸ்கீ ரெசார்ட்டை தேடி போக வேண்டும், சறுக்கி விளையாடு ராசா என்று வீட்டு வாசாலில் கொண்டு கொட்டி வைத்திருக்கிறது
சாதரண கம்பி கேட்டுதான் ஆனால் இந்த பனியின் பின்னனியில் அழகான கோட்டு ஓவியம்.
கடந்த பத்து வருடங்களில் இந்த வருடம் பனி சற்று அதிகம் என்று வானிலை வல்லுனர்கள் புள்ளிவிவரம் சொல்லுகிறார்கள். கோப்பன்ஹேகனில் எப்படியாவது கிருஸ்துமஸ்சுக்கு ஊர் போய் சேர வேண்டும் என்று எந்தவிதத்திலும் அதிகாரமில்லாத ஒரு சப்பை தீர்மானத்தை நிறைவேற்றி விட்டார்கள். இன்னும் பத்து வருடங்கள் கழித்து இப்படி ஒரு பனி இங்கு விழுமா என்பது சந்தேகமே
1 comments:
பனியை போட்டோ எடுத்து வைச்சுக்கோங்க. பின்னாடி ஒரு நாள் கோடீஸ்வரர் ஆனாலும் ஆவீங்க.
Post a Comment