இன்று புது ஆண்டு வந்தது

உலகத்தில் தலைசிறந்த புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஒன்றாக எடின்பரோவின் ஹொகமனி என்னும் 5 நாட்கள் கொண்டாட்டத்தை சொல்கிறார்கள். -6டிகிரி குளிரிலும் 80000 ஆயிரம் மக்கள் ராசகுமார தெருவை நிறைத்து விஸ்கியும் மூன்று இசை குழுவினரின் பாடல்களுக்கு ஆட்டமுகாக கொண்டாடினர்.

ஆரம்பத்தில் பனி விழுந்தபோது மிகவும் குதுகலமாகி, பனி விழும் மலர்வனம் என்றெல்லாம் பாட்டை முனுமுனுத்துக் கொண்டு போனது பத்து நாட்களுக்கும் மேலாக தொடர்வதால், சற்றே சலிப்பாகி வீட்டைவிட்டு வெளியே போகவேண்டுமானால் பெருமூச்சு விட்டுக்கொண்டு, ஒன்றன் மேல் ஒன்றாக நான்கு மேலுடுப்பை அணிந்து கிளம்ப வேண்டியுள்ளது. எனினும் ஆசிய நாட்டு பிரஜைகளுக்கு பனி சற்று பிரமிப்பூட்டுவதாகவே உள்ளது.

கடந்த 20 வருடங்களில் இந்த அளவு பனி விழாததால் கவுன்சிலும் மக்களும் இதற்கு தயாரகவிலை. நடைபாதை எல்லாம் பனி உறைந்து ஐஸ் ஆகிவிட்டதால் காலை வைத்தால் ஒரே சறுக்கல், எப்போது வேண்டுமானாலும் விழுவதற்கு தயாராக சற்றே சுஜாதா பாஷையில் டேக்கிக் கொண்டுதான் நடக்க முடிகிறது. 42 பேர் வழுக்கி விழ்ந்ததலில் கால் பிசகல், சிறு முறிவு என மருத்துவமனை செய்தி. சாவியை மறந்து விட்டதால் இரவு வீட்டுக்கு வெளியே தங்க வேண்டி வந்ததில் உறைந்து போய் ஒருவர் மரணமடைந்தார், இருவர் மருத்துவமனையில் அபாகரமான நிலையில் உள்ளனர்.

விற்பனை வரியை 15 சதவிகிதத்திலிருந்து 17 சதவிகிதமாக ஜனவரி முதல் டார்லிங் ஏற்றிவிட்டதால் தேவையோ இல்லையோ வாங்கி குமித்து விட்டார்கள் யுக்கேவாசிகள். எந்த வருடமும் இல்லாத 26% அதிக விற்பனை.

புத்தாண்டில் ரெஷஷன் சரியாகி, RBS முன்பிருந்த நிலைக்கு திரும்பும், லேபர் ஆட்சியை இழந்து கன்சர்வேட்டிவ்ஸ் ஆட்சிக்கு வரக்கூடும், என அவரவருக்கு ஒரு எதிர்பார்ப்பு,

நம்பிக்கைகளே வாழ்வில் பலவற்றை சாத்திய மாக்குகிறாது. இந்த புத்தாண்டில் பலரின் கனவுகள் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன்..

4 comments:

sreesnake said...

"முள் காலனி" (spikes!!) போட்டு நடக்க பழகிக்க வேண்டியதுதான்! அது சரி....global warmingஆ global coolingஆ!!

கிவியன் said...

வருக ஸ்ரீ,

இன்னும் இரண்டு வாரங்களுக்கு இதே நிலை தொடரும் என்று மெட்ராலாஜி நிபுணர்கள் கூறுகின்றனர். முள் காலனி வாங்க வேண்டியதுதான் போலிருக்கிறது.

மீண்டும் ஒரு ice age வரகூடும் என்று ஒரு சில குழு இந்த புவி வெப்ப அதிகரிப்புக்கு எதிராக வாதிக்கிறார்கள். சில ஆதாரங்களையும் முன்வைக்கிறார்கள். ஆனால் இவர்களை ஆதரிப்பவர்கள் மிக மிக குறைந்த அளவில் இருக்கிறார்கள். ஆனால் இப்படி எடின்பரோவில் இருக்கும் நிலையை பார்த்தால் நான் இவர்கள் பக்கம் சேர்ந்துவிடுவேன்:-)).

Siva said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள. இந்த ஸ்காட்லாந்து Whiskey ஒரு தனி ருசி. எங்க ஊரில் ஸ்காட்லாந்து Whiskey ரொம்ப பிரபலம். பனி மற்றும் ஐஸ் சார்ந்த விபத்துகள் இங்கு அவ்வளாக நடபதில்லை. கலிபோர்னியா என்றாவது பனி பெய்தால் அதோ கதி தான். சிறு அளவு மழை பெய்தாலே பிரீவேஸ் ரோம்பிவிடுகிறது. அளவோடு பகிர்ந்து வளமாய் கொண்டாடி இருப்பாய் என நம்புகிறேன். ஒரு பழைய தமிழ் பாடல் வரி ஞாபகம் வருது
" இங்கிலீஷ் காரன் தண்ணி போட்டு பாரு மச்சி.. "

கிவியன் said...

சிவா, இந்த விஸ்கியை பற்றிக் கூட எழுத வேண்டும் என நினைத்திருந்தேன், விரைவில் ஒரு பதிவு போடுகிறேன். விஸ்கி இங்லிஷ்காரன் தண்ணியில்லை, ஸ்காட்டிஸ்காரவுகளோடது.

ரோடெங்கும் பனியாய் இருப்பதால்
`விஸ்கி விஸ்கி`த்தான் நடக்கவேண்டியுள்ளது,

அட கலிபோர்னியா நம்ம சிங்கார சென்னை மாதிரியா மழ பெஞ்சா ஸ்தம்பித்து போக??