“தல வரும் பின்னே புகை வரும் முன்னே”

My name is khan பத்தி அவசரமா எழுதினதுல சில விஷயங்கள் விட்டுப்போச்சு.

இந்த படத்த பாக்குறதுக்கு மொதோ நாள்தான் “தல வரும் பின்னே புகை வரும் முன்னே”, அசல் படத்த ஆக்சிடெண்டா பாக்கவேண்டிதா போச்சு.

14 வயதாகும் என் மகனை இப்படிப்பட்ட மகோன்னத தமிழ் படங்கள் பார்ப்பதன் மூலம் டமிள் மொழியையும் டமிள் கல்சரையும் பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கும் என கொஞ்சமே கொஞ்சம் நம்பிக்கை வைத்திருக்கும் என மனைவி அவனை PS3, DS மற்றும் கணணி விளையாட்டுகளுக்கு ஒதுக்கும் நல்ல நேரத்தை இந்த மாதிரி (வீணாப்போற) படம் பாக்க சொல்லி போராடி பாக்க வெப்பாங்க. பய புள்ள தமிழ் கத்துக்கறானோ இல்லையோ தல ஸ்டைல்ல ஹாவானா புடிக்காம இருக்கனுமேன்னு க்ளாஸ்கோ முருகனுக்கு நேந்துகிட வேண்டியிருக்கு.

இத தொடர்ந்து மை நேம் இஸ் கான் பாத்துட்டு, இடைவேளையிலே பையன் சொன்னது, ”This movie will show a way for the Indian films, it is very good" என்று. படம் முடிஞ்ச பின்னாடி பேசிக்கிட்டே வந்தோம்.

ஏன் இந்திய படங்கள் இப்படி காப்பி அடிச்சு படமெடுக்காம, மை நேம் இஸ் கான் மாதிரி ஒரிஜினலா எடுத்தா நல்லா இருக்குமே என்றான்.

என் மனைவி `காப்பி அடிச்சா என்ன தப்பு?` என்று ஒரு கேள்வி வைத்தாள்.
தமிழ்நாட்டுல இருக்கும் எல்லோரும் உலக சினிமா பாக்க வாய்ப்பில்ல, அப்படி இருக்கும் போது, சிறந்த ஆங்கில/வேற்று மொழி படத்த காப்பி அடிச்சு தமிழ்ல எடுத்தா பலரும் பாக்க வாய்ப்பிருக்கு என்றாள்.

இது ஒரு வகையில் சரியென பட்டாலும் காப்பி அடித்ததை ஒரு வரி இந்த கதை, அல்லது இந்த படத்தில் வரும் சில காட்சிகள், எந்த வேற்று மொழி படத்தை பார்த்து ஃப்பீல் ஆகி எடுக்கப்பட்டது என்று, யாருமே படிக்க முடியாத சைசில்லாவது போடலாமே என்றேன்.

`ஆமா படத்துல கடைசில போடற க்ரெடிட்ஸ யாரு படிக்கராங்க` என்றாள்??

ஆக கேள்வி மிக ஆழமானது, காப்பி அடிக்கரதுல என்ன தப்பு??

இயற்கையாகவே மனிதனின் உடலில் நகல் எடுப்பது என்பது வேறூன்றிப்போனது. செல் பிரிவதும், DNAவும் நகல் எடுக்காவிட்டால் நம் தாத்தா மாதிரி பாட்டி மாதிரி கண் காது, குரல், நடை, பாவனை எல்லாம் சாத்தியமில்லை.

மனிதன் எதையுமே கற்பதும் காப்பி அடித்துத்தான். ஆக ஒரு சக மனிதனின் படைப்பை பார்த்து இன்னொரு மனிதன் காப்பி அடிச்சா என்னா தப்பு? நல்ல கலை, கண்டுபிடிப்பு, படைப்பு எதுவானாலும் காலம் கடந்து நிற்கும். யார் செய்தது என்பது காலத்தால் முக்கியமற்றதாக ஆக்கிப்போகிறது. ஒரு வகையில் பொருளீட்டுவதும், சமூகத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்படுவதும் காப்பி அடிப்பதை தடை செய்வதலேயே தொடங்குகிறது.

எங்கோ ஆரம்பித்து இப்படி சோசலிச கொள்கைக்கு கொடிபிடிப்பது போல தோன்றினாலும், ஆதார கேள்வியான, காப்பி அடிப்பதில் என்ன தவறு என்பதை, 14 வயது குழந்தைக்கும் புரியும் வகையில் சொல்ல ஒரு பதில் கிடைக்கவில்லை.

3 comments:

கிவியன் said...

இந்த பதிவுக்கு சம்பந்தமான செய்தி என்பதால் அதை பின்னூட்டமாக இங்கு கொடுத்திருக்கிறேன்.

ஜெயந்தி நாராயணன் said...

//என் மனைவி `காப்பி அடிச்சா என்ன தப்பு?` என்று ஒரு கேள்வி வைத்தாள்.//

தப்பே இல்ல. நல்லா எடுத்துட்டா பாத்துட்டு போலாமே.

காப்பி என்றதும் நான் படித்த இந்த லிஸ்ட் ஞாபகம் வந்தது.

21 grams - சர்வம்
Bangkok Dangerous - பட்டியல்
Network - வேகம்
Hardcore - மகாநதி
Planes Trains and Automobiles - அன்பேசிவம்
What bob can do - தெனாலி
Hot bubblegum and American Pie - பாய்ஸ்
Shop around the corner - காதல்கோட்டை
Big - நியூ
Very Bad things - பஞ்சதந்திரம்
Sliding Doors - 12B
Too Much - காதலா காதலா
She Devil - சதிலீலாவதி
Butch Cassidy & The Sundance Kid - திருடா திருடா
Fear - காதல் கொண்டேன்
Barefoot in the park - அலைபாயுதே
Sense and Sensibility - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
Brewster's Millions - அருணாசலம்
Corsican Brothers - அபூர்வ சகோதரர்கள்
Life of David Gale - விருமாண்டி

கிவியன் said...

வருக ஜெயந்தி,

தப்பே இல்லை என்று சேம் சைட் கோல் போட்டால் எப்படி? ஏன் தப்பே இல்லை?

லிஸ்ட்டுக்கு நன்றி, ஹிந்தி படங்களையும் சேர்ந்து இதைவிட பெரிய லிஸ்ட்டும் இருக்கிறது.