மறுபடியும் ஷா ருக் - கரண் ஜோஹர் படம் எனபதோடு, 8 வருடங்களுக்கு முன் செமி ரிடைர்டு ஆன கஜோலும் இணைந்திருப்பதால் வழக்கமான ஷா ருக் அடுக்கு சிரிப்போடு, நறுக்கி வெட்டிய தலையும் பலூன் அல்லது பாஸ்கெட் பால் சகிதமாக மூக்குக்கு பதிலாக காதை திருகி ஆடிப்பாடும் படமாக இருக்குமோ என்ற சந்தேகத்தோடுதான் போனேன். ஆனால் நம்பவே முடியவில்லை கரண் ஜோஹருக்குள் இருக்கும் இன்னொரு பக்கம் இவ்வளவு எதார்த்தமான ஒரு படத்தை எடுக்க முடியும் என்று. மிக தெளிவான ஸ்க்ரிப்ட் அதுவும் காலகட்டத்துக்கு ஏற்றார் போல் அமைத்திருப்பதால் நம்பும்படி இருக்கிறது.
ஷா ருக் என்னும் பிரம்மாண்டமான இமேஜுக்காக படமெடுக்காமல் ஓரளவுக்கு ஷா ருக்கை மறைத்து ரிஸ்வான் `க்ஹானை` நம் கண் முன் நிறுத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறார். இதுவே இந்திய திரைப்படங்களுக்கு மிக பெரும் முன்மாதிரியாக விளங்க நிறைய வாய்ப்பிருக்கிறது.
படம் பார்க்கும் எவரும் எதாவது ஒரு காட்சியில் கண்கள் நனையாமல், நெஞ்சு கணத்து போகாமல் இருந்தால் அநேகமாக அவர் ஒரு அஸ்பெர்ஜஸ் பாதிப்பு உள்ளவராகத்தான் இருக்க வேண்டும். அந்த அளவுக்கு படமெங்கும் நெகிழவக்கும் திரைக்கதை அமைப்பு. கஜோல், வாவ் சிக்கென்று கண்களாலே படமெங்கும் நடித்து, மிக அற்புதமான பாத்திரம் இதற்காகவே பார்க்கலாம். கஜோலுக்கு இரண்டாம் ஆட்டம் நிச்சயம் ஒரு இடம் உண்டு.
படத்தில் எல்லோரும் அவரவர் பாத்திரத்தை அடக்கி வாசித்து எதார்த்தத்தை படமெங்கும் கடைபிடித்திருப்பது அருமை.
படத்தில் மற்றொரு மிகப்பெரும் பலம் சங்கர் இஷான் லாயின் இசை. எங்கு மெளனமாக இருக்க வேண்டுமோ ஆங்கு காட்சியை முன்னிருத்தி, எங்கு இசையால் காட்சியில் நம்மை ஒன்றவைக்க வேண்டுமோ ஆங்கு பாடலை வைத்து, பின்னனி இசையில் சாதனை புரிந்திருக்கிறார்கள்.
படத்தில் முக்கியமாக ரவி சந்திரனின் படப்பிடிப்பை பாராட்டியே ஆகவேண்டும். சான்பிரான்சிஸ்கோவை அதிகாலை வேளையில் தாழ்வான மேகமூட்டம் மூடி மறைத்து வைத்துதிருக்கும் அந்த கணத்தை பார்க்க வேண்டுமானால் மை நேம் இஸ் க்ஹான் பார்க்கவும்.
மிகச் சில இடங்களில் லாஜிக் இடித்தாலும், நமக்குத்தான் தெரியுமே இந்திய படங்களில் அதெல்லாம் சகஜம்பா என்று மன்னித்து விடலாம். ஷா ருக்கின் நடிப்பு Rain Man ல் டஸ்டின் ஹாஃமேனையும், I am Samல் ஸீன் பென்னையும் நினைவுட்டுவது தவிர்க்க முடியாது. இவர்கள் மூவரின் நடிப்பும் ஆட்டிசம்/அஸ்பெர்ஜர்ஸ் பாதிப்பு உள்ளவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று கட்டம் கட்டுவது போல் இருக்கிறது.
சமீபத்தில் ஷா ருக்கை அமெரிக்காவில் செக்யூரிட்டி செக் செய்தார்கள் என்று செய்திகள் வந்தது ஞாபகமிருக்கலாம். அதை அப்படியே காட்சியாக அமைத்திருக்கிறார்கள். இதுதான் இந்த படத்துக்கான கருவாக இருக்குமோ? ஊருக்கு திரும்ப வந்த கையோடு இதை வைத்து ஒரு படமெடுக்க வேண்டும் என ஷா ருக் சபதம் போட்டு எடுத்த மாதிரி இருக்கிறது.
படத்தின் பஞ்ச் ட்யலாக்: My name is Khan, and I am not a terrorist!!
ஆனால் இந்த படத்துக்கு எதற்காக இத்தனை ஆர்ப்பாட்டம்?? அதுதான் விளங்கவில்லை.
1 comments:
"ஆனால் இந்த படத்துக்கு எதற்காக இத்தனை ஆர்ப்பாட்டம்?? அதுதான் விளங்கவில்லை."
The controversy had nothing to do with the contents of the film per se!. It was just that the film was released after ShahRuk took on the Shiv Sena boss, opposing his contention that 'Mumbai is for Mumbaikars'!!
Post a Comment