சும்மா போற குருவி

உலகெங்கிலும் 48 சதவிகித குரங்கினம் காணாமல் போய்விடும் ஆபத்து உள்ளது என்று நேற்று செய்தியில் காட்டினார்கள். இதற்கு முக்கிய காரணம் அழிந்து வரும் வெப்ப மண்டல காடுகளும், போதா குறைக்கு, வேட்டையாடுதலும் என்று சொல்லுகிறார்கள்.

தன் நலனுக்காக மனிதன் செய்தவைகளால் இப்படி பல மிருக இனங்கள பாதிக்கப்பட்டுள்ளது. சென்ற நூற்றாண்டு துவக்கத்தில் ஒரு லட்சத்திற்கும் மேலாக இருந்த புலிகள் இப்போது வெறும் நாலாயிரமாக குறைந்து போய்விட்டது.

ஒரு மில்லியன் குரல்கள் இயற்கைகாக...........

யுக்கேயில் RSPB பறவைகளை பாதுகாக்க செய்து வரும் சேவை மிக அருமையானது. என்னும் நாடெங்கிலும் பல இடங்களில் பறவைகளுக்கான சரணாலயங்களை பராமரிக்கிறார்கள். இது முற்றிலும் ஒரு தன்னார்வ தொண்டு இயக்கம். வீடு வீடுடாக ஏறி இறங்கி இதற்காக நிதி கேட்டு, இன்னும் பல வகைகளில் இதற்காக செயல்படுகிறார்கள்.

சும்மா போற குவியை சுட்டு தள்ளுவானே....

மால்டா என்னும் மெடிட்டரேனியன் தீவு நாட்டில், ஆப்பிரிக்காவிலிருந்து, ஐரோப்பாவிற்கு வசந்தகாலத்தில் கூட்டம் கூட்டமாக திரும்ப வரும் பறவைகள், மெடிட்டரேனியன் கடலை கடக்கும் முன்பாக இளைப்பாரும். இப்படி வழியில் ஓய்வெடுக்க வரும் பறவைகளை ஜாலியாக வேட்டையாடி போட்டு தள்ளுகிறார்கள் மால்டா வேட்டைகாரர்கள். மால்டா அரசாங்கம், இதை தடுக்கும் சட்டங்கள் இருந்தும், இந்த மாதிரி வேட்டைகளை கண்டு கொள்வதில்லை.






இந்த வேட்டைகளை தடுக்க RSPB யுக்கேயில் பல மக்களிடம் கையெழுத்தும், நிதியும் திரட்டி, ஐரோப்பிய ஒன்றியம் மூலம் மால்டா அரசாங்கத்தை இந்த வேட்டையாடுதலை தடுக்கும் சட்டத்தை கடுமையாக கடைப்பிடிக்கவும், மக்களை வேட்டையாடுவதால் ஏற்படும் இழப்புகள் பற்றி அறிவூட்டவும், மால்டா பறவை பாதுகாப்பு இயக்கத்துக்கு உதவும் முயற்சியை சமீபத்தில் மேற்கொண்டார்கள். இதன் பலனாக ஐரோப்பிய ஒன்றியம் மால்டா அரசாங்கத்தை விளக்கம் கோறியிருப்பது ஒரளவுக்கு நம்பிக்கை தருகிறது.

சும்மா போற குருவிக்கு சோத்த போடுவானே..

சரி இது மனிதனின் உபத்திரவத்தால் உண்டாகும் அழிவு என்றால் RSPB செய்யும் உபகாரத்தாலும் சில மாற்றங்கள் ஏற்படுகிறது. அது எப்படி என்றால், நிதி திரட்டுவதற்காக பல வகை பொருட்களை விற்பனை செய்கிறார்கள். அதில் ஒன்று பறவைகளுக்கு தாணிய வழங்கிகள்.


Domed bird feeder, £20.99, Bird feeders, Window bird feeder, £9.99, Bird feeders, Clingers only bird seed feeder, £10.99, Bird feeders,


பல வகைகளில் கிடைக்கும் இதனை தோட்டத்தில், ஜன்னலில் என பல இடங்களில் வைத்து தாணியத்தை நிரப்பி விட்டால் வீட்டு தோட்டத்தில் வந்து போகும் பறவைகள் உண்ண வசதியாக இருக்கும். சரி நல்ல விஷயமாகத்தானே இருக்கிறது என தோன்றினாலும் இப்படி இந்த விதத்தில் உண்ணும் பறவைகளையும், இதே இன பறவைகள் ஜெர்மனியில் இயற்கையாக உண்ணும் பறவைகளையும் ஆராய்ச்சி செய்ததில் இங்கு யுக்கேயில் வசதியாக இந்த பறவை ஊட்டுவான்களில் சாப்பிடும் பறவைகளின் அலகுகள் மாற்றம் அடைந்து இயற்கையில் உண்ணும் பறவைகளின் அலகைவிட சிறிதாக ஆகிவிட்டதாம்.


நன்றி: Gregor Rolshausen et al Current Biology Volume 19, Issue 24, 29 December 2009, Pages 2097-2101.


இந்த ஆராய்ச்சியில் இந்த பறவைகளின் DNAவிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை குறிப்பிட்டிருக்கிறார்கள். குளிர்காலத்தில் இப்படி உணவு எளிதாக கிடைப்பதால், வழக்கத்தில் இல்லாத குளிர்கால பாதையை(migratory route) புதிதாக இந்த பறவைகள் கடைபிடிப்பதாகவும் கண்டு பிடித்திருக்கிறார்கள். இத்தகைய மாற்றங்கள் நல்லதா கெட்டதா என்னும் கேள்விக்கு விடை கண்டுபிடிக்க இந்த ஆராய்ச்சி முயலவில்லை. அந்த கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லும். ஆனால் அது காலம் கடந்த பதிலாக இருக்குமோ??






3 comments:

Anonymous said...

//உலகெங்கிலும் 48 சதவிகித குரங்கினம் காணாமல் போய்விடும் ஆபத்து உள்ளது என்று நேற்று செய்தியில் காட்டினார்கள். //

மனித இனமும் அழிந்து விடும்னு காட்டினாலும் நாம அசந்துருவமா. :(

sreesnake said...

நாலாயிரம் புலிகள? எங்கே!! வெறும் ஆயிரத்தி சொச்சம் தான் மிச்சம்!!

sreesnake said...

Malta பற்றி கேட்கும் போது எனக்கு 'பயணி புறா' (passenger pigeon) வின் அழிவு (extinction) பற்றித்தான் ஞாபகம் வருது!! கோடிக்கணக்கில் இருந்த பறவைகளை, சும்மா விளையாட்டுக்கு சுட்டே ஒழிச்சங்க!!