லேட்டா வந்தாலும்

இந்த வருடம் பனியால் மார்ச் துவக்கத்திலேயே பூக்க வேண்டிய டஃபோடில்லும் அதன் சகலபாடிகளும் மூன்று வாரங்கள் தாமதமாகி பூக்க துவங்கியுள்ளது

எடின்பரோவின் குறுக்காக லீத்தின் தண்ணீர் (Water of Leith) என்னும் சிற்றாறு ஒடுகிறது. பெரும் பாலும் இந்த மாதிரி பெரு நகரங்களில் அதுவும் அதன் குறுக்காக ஓடும் நதிகளின் நிலமை எப்படி இருக்கும் என்பது தெரிந்ததே. ஆனால் இந்த நதி அப்படி இல்லாமல் மிகவும் சுத்தமாகவே வைத்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது. இந்த வருடம் பனி அதிகமாதலால் சுற்றியுள்ள மலைகளிலிருந்து உருகி வரும் தண்ணீர் தெள்ள தெள்ளிவாக ஓடுகிறது. சென்ற வார இறுதியில் இதன் கரையோரமாக 7 மைல் நடந்து சென்ற போது பிடித்து வந்த படங்கள்.








இறுதியாக, இந்த நதியின் கரையோரமாக ஒரிடத்தில் 2004ல் எய்ட்ஸ் நாள் துவங்கியபோது அதன் நினைவுச் சின்னமாக இந்த சிமிண்டினால் ஆன பலகையை பதிந்து வைத்திருக்கிறார்கள். இது எடின்பரோவின் புகழ் பெற்ற டீன் காலரி, மற்றும் கலை அருங்காட்சியகம் போகும் வழியில் உள்ளது.

3 comments:

தமிழ் மதுரம் said...

புகைப்படங்களும் தகவல்களும் அருமை நண்பா. தகவல் பரிமாறலுக்கு நன்றிகள்.

துளசி கோபால் said...

ஆஹா..... படங்கள் அருமை. அதிலும் முதல் படம் ஸாஃப்ரான் பூவைப்போல் இருக்கு. க்ரோக்கஸ்.

ஊரின் குறுக்கே ஓடும்நதி.......

கூவத்துக்கு எப்போ விமோசனமுன்னு பெருமூச்சு விடத்தான் முடியுது:(

கிறைஸ்ட்சர்ச் ஏவான் ரிவரும் பளிர்ன்னு தெளிவாத்தான் ஓடுது.

கிவியன் said...

வருகைக்கும் சிரமம் பார்க்காமல் பின்னூட்டமும் இட்டதற்கு நன்றி கமல்.

துளசி, நியூசியை இந்த மாதிரி சுற்றுப்புறசூழல் பாதிப்பு விஷயத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது. இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள ஏராளம் உள்ளது. கி.சவின் ஏவான் நதியில் படகில் போனதுண்டு, அதே போல் நம்ம லோவர் ஹட்டின் குறுக்காக ஒடும் ஹட் நதியும் தெளிவே. கூவம் ஒரு நாள் தெளியும் என்று நம்புவோம்.