நடந்தவை நடப்பவை-14

என்ன பெரிசா ஒண்ணும் நடக்கல, வட துருவத்துல இருந்து தென் துருவத்துக்கு மாறினத தவிர. வளர்ந்து வரும கோடை காலத்திலிருந்து உச்சத்திலிருக்கும் பனிக்காலத்துக்கு புகுந்ததால் உடலும் மனமும் சற்று அசுவாச படுவதற்குள் ஒரு மாதம் ஓடி விட்டது.

ஒரு முறைகு இரண்டு முறையாக விமான பயணத்தின் போது ஹிந்து சைவ உணவு என கேட்டுக்கொண்டாலும், அது என்னவோ அந்த வேண்டுகோள் எப்படியோ குளறுபடியாகி பயணத்தின் போது, மேசையில் சிக்கனோ இல்லை மாமிசமோ போட்ட உணவை காது வரை சிரிப்போடு கொண்டு வைத்து விட்டு, “Enjoy your meal" என்று சிப்பந்தி சொல்லும் போது வரும் ஆற்றாமையை தவிர்க்கவே முடியாது போலிருக்கிறது. இந்த மேம்பட்ட சேவையை இந்த முறை வழங்கியவர்கள் வளர்ந்து வரும் கொரியன் ஏர்வேஸ். வாழ்க வளமுடன்.

வந்ததும் கவனித்தது, முன்னூற்றி சொச்சம் தமிழ் பேசும் மக்களுக்கு, ஏற்கனவே இருந்த வெலிங்டன் தமிழ் சொசைட்டியையும், வெலிங்டன் தமிழ் டாக்கீசையும் தவிர புதிதாக முத்தமிழ் (??) மன்றம் என்றுஒன்று முளைத்து அவர்கள் நடத்தும் பட்டிமன்றத்துக்கு வரச்சொன்னார்கள். இப்பத்தான்யா நாட்டுக்குள்ள வந்தேன், அடுத்த முறை அவசியம் வருகிறேன் என்று கூறிவிட்டேன். எனினும் அடுத்த தலைமுறை இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் நல்ல தமிழில் பேசினார்கள் என்று கேள்விப்பட்டேன், இது மிகவும் வரவேற்க தக்கது.

உடனடியாக வாங்கியது கைப்பேசி சேவை. இது இல்லா விட்டால் ஒரு வேலையும் ஆகாது. இந்த சேவையை வழங்குபவர்கள், டெலிகாம் மற்றும் வோடாஃபோன் என இரண்டே நிறுவனங்கள் இருந்தது. இப்போது இவர்களுக்கு போட்டியாக 2டிகிரி (ட்டுடிகிரி என வாசிக்கவும்) என புதிதாக ஒன்று வந்திருக்கிறது. மிக குறைச்சலான விலையில் சேவை வழங்குவதால் ஒரே வருடத்தில் பல பேர் இதில் சேர்ந்திருக்கிறார்கள். எனக்கென்னவோ இது யுக்கே பார்டிதான் என உறுதியாக சொல்ல முடியும். உதாரணத்துக்கு இந்த லோகோவை பாருங்கள்.

இது யூக்கேயின் O2 மொபைல் நிறுவத்தின் லோகோ


இது நியுசியுன் புதிய ட்டுடிகிரி நிறுவனத்தின் லோகோ.

இரண்டும் O-வும் இடம் மாற்றி, அதாவது ஒருவித கண்ணாடி பிம்பம் போல். என்னமா யோஸ்ச்சிருக்காய்ங்க பாருங்க.

மற்றபடி இப்போதைய முதல்வர் ஜான் கீ காலையில் TVNZல் ஒலிப்பரப்பாகும் ப்ரேக்ஃபாஸ்ட் நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட தினமும் வந்து என்னா நடந்தது ஏது நடந்தது என நேரடியாக ஒரு செய்தியாளர் ரேன்சுக்கு சொல்வதால் சற்று நம்பும்படி இருக்கிறது.

நந தொடரும்..

5 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

தலைவா ஜூப்பரு

துளசி கோபால் said...

நல்வரவுன்னு இங்கிருந்தே கூவிக்கிறேன்.

விமானச் சாப்பாட்டுலே எல்லா விமானச் சேவைகளிலும் இந்தக் குழப்படி தீரவே தீராது போல.

'நியூஸியின் ஒரே வலைப்பதிவர்' என்ற பெருமையை உங்களுக்கே உங்களுக்குன்னு விட்டுவைக்கப் போறேன் இன்னும் சில மாதங்களுக்கு.

மத்தபடி ஊரெல்லாம் விட்டுட்டுப்போன மாதிரியே இருக்குதானே?

கிவியன் said...

அட இன்னுமா நியுஸியின் ஒரே (தமிழ்) வலைபதிவர்?? வாங்க வாங்க, கம்போடியா வரைக்கும் வந்தாச்சு,அப்படியே மலேசியா, இந்தோனேஷியா, ஆஸ்த்ரேலியா வழியா சிலபமா நியுஸி வந்துவிடலாம்.

இங்க வெலிங்டன்ல சில மேம்பாலங்களும், வட்டபாதைகளும் (Roundabout) மாற்றி அமைக்கபட்டிருப்பதை தவிர நான் வேறு எதுவும் பெரியா மாற்றதை காணவில்லை. கை.சர்ச் எப்படி என்று போனால்தான் தெரியும்.

Anonymous said...

நியூஸியின் ஒரே தமிழ் வலைப்பதிவர் அவர்களே, செட்டில் ஆகியாச்சா.

முத்தமிழ் மன்றமா. நல்லது. அதுதானே தமிழர் கலாச்சாரம். நாலு பேர் இருந்தா நாலு மன்றம், சொசைட்டின்னு இருக்கணுமே :)

Anonymous said...

சாப்பாடு விசயத்துல எந்த ஏர்வேசும் இன்னும் மாரலேன்னு நல்லா தெரியுது. Indian Vegetarians are different and difficult to understand!

BTW, what 14?