மீள்ச்சி

ஒரு வருடங்களுக்கு மேலாக ஒரு மண்ணும் எழுதவில்லை இந்த வலையில்.
இந்த ”ஒரு” பிரயோகம் சற்றே விவகாரமானது அதை தவிர்க பார்க்கிறேன்.

இப்போது மீண்டு வந்து எழுதுமளவுக்கு எதுவும் இல்லை

140 அட்சரங்களில் அவ்வவ்போது தோன்றுவதை ட்விட்டிவிடுவதால் அதற்கு மேல் வலையில் எழுதுவது என்பது முடியாமலேயே போய்விட்டது.

புது முயற்சியாக  கார்டூன் வரைவது என்று முடிவானதால் வரைந்த வற்றை இங்கே சேர்த்து வைப்போம் என்பதை தவிர இந்த மீள் வருகையில் வேறு எதையும் பற்றி எழுதுவதாக இல்லை. (சரக்கே இல்லை அப்புறம் என்ன இப்படி ஒரு நொள்ளை??)


மேலே உள்ள கார்டூன் 5000 வருடங்களுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் சகாரா இன மக்களால் பால் பதப்படுத்தும் நுட்பத்தை உபயோகித்திருப்பதற்கான சான்றுகளை கண்டுபிடித்த செய்தியை பற்றியது. செய்தி இங்கு.

சரி ஏன் காட்டூன் என்றால்  டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் You Said it  வரைந்த R K லெக்ஷ்மண், மதன், வசனமே இல்லாது வெறும் படங்கள் மூலமாகவே  நையாண்டி செய்யும்  சிரியாவை சேர்ந்த அலி ஃபர்சத், ஸ்காட் ஆடம்-ன் தில்பர்ட், இன்னும் பல கார்டூனிஸ்ட்களின் பாதிப்புதான். இந்த லெக்ஷ்மண் எப்படி தினமும் கார்டூன் வரைந்தார் என்பது மிகவும் ஆச்சர்யமே. இவர் வரைந்த Mr Common Man-ன்  உருவ மூலம் காந்தி என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

1 comments:

Anonymous said...

போட்டுத் தாக்குங்க சார்!