மரணத்தைவிட கொடியது மறக்கப்படுவது

இந்த இரவலாக பெறப்பற்ற தலைப்பு சொல்வது தனிமனிதன் செய்கைக்கும் பொருந்துமானாலும், இன்றைய உலகில் ஒடுக்கப்பட்ட பல இனங்களுக்கு நடக்கும் துயரத்தை சொல்லும் ஒரு நாடகத்தை பற்றியது. இலங்கை தமிழ் மக்களுக்கு இயற்கையும் ஏற்படுத்திய சீரழிவை ஒரே நடிகர் பல பாத்திரம் ஏற்று நடித்த ஆங்கில நாடகத்தை சென்ற வெள்ளியன்று பார்த்தேன்.

Written and Performed by Ahi Karunaharan

The Mourning After ஆங்கிலத்தில் அமைந்த நாடகம் என்றாலும் கதை நடக்கும் களம் இலங்கை என்பதால் இடையிடையே சில தமிழ் வசனங்களும் ஒரு பாடலும் கலந்து வந்தது மிக இயல்பாக இருந்தது. நாடகத்தின் ஒரு வசனம் இந்த் பதிவின் தலைப்பு என்பது எழுதி நடித்த அகி(லன்) கருணாகரனின் திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு. இங்கிலாந்தில் பிறந்து, ஏழு வருடங்கள் இலங்கையில் வளர்ந்து பின்பு நியுஸியிலாந்த்தில் குடிபுகுந்தவர் அகி.

2004ல் பாக்ஸிங் டே சுனாமியால் பாதிக்கப்பட்ட பெறும்பாலான தமிழர் பகுதி இன்று இருக்கும் நிலைமையை, நியுசியில் வளர்ந்த சேகர், இலங்கையில் இருக்கும் மாமன் சோமு, ஒன்றுவிட்ட சகோதரன் ராஜு, மீனவன் பாலா மற்றும் பக்கத்து வீட்டு சாரோஜா பாட்டி என்ற ஐந்து பாத்திரங்களாலும், மேலும் கபரகோயா என்ற சுனாமியால் கரையேறிய ஒரு பிராணியையும் வைத்துக்கொண்டு தத்ரூபமான் நடிப்பாலும் வசனங்களாலும் கண் முன் கொண்டு வந்தது, இது அகியின் முதல் நாடகம் என்பதை நம்ப முடியவில்லை. 15 மாதங்கள் இதற்காக உழைத்திருக்கிறார். ஒரு விசிறியை மேடைப் பொருளாக (prop) கொண்டு, தன் உடல் மொழியால் பாத்திரங்களை வேறு படுத்தியது காட்டியது மிக அருமையாக இருந்தது. சுனாமிக்கு பின்பு சோறு வைத்து கூப்பிட்டும் காக்கைகள் கூட வருவதில்லை என்பது, இந்த பாதிக்கப்பட்ட மக்களை உலகம் மறந்தே போய்விட்டது என்பதை சொல்லாமல் சொல்லும் காட்சி மிக வலிமை மிக்கது.

'The Mourning After'HUTahiweb.jpg




Dias எனப்படும்படியான் ஒரு குறுமேடையில் கச்சிதமான ஒளி மற்றும் ஒலி மூலம் இப்படி ஒரு முயற்சி பாராட்டத்தக்கது. இந்த நாடகத்தை வெலிங்டனில் உள்ள டவத்தா ப்ரொடக்ஷன்(Tawata Productions) என்னும் கெளபப்பா நாடக நிறுவனம் (Kaupapa Theatre Company) தயாரித்துள்ளது.

அகியிடம் நாடகம் முடிந்த பின் கேட்ட போது நாம் அன்றாட வாழ்க்கையில் பல சமயம் வாக்குறுதி கொடுப்பதும் பின்பு அதை நிறைவேற்ற முடியாமல் போதும் சகஜமாக நிகழ்வது, அகி சொல்ல வருவது வாக்குறுதி நிறைவேராமல் போன பின்பு ஏற்படும் பாதகங்களை எப்படி எதிர்கொள்வது என்ற நிலையை பற்றி யோசித்த போது இந்த நாடகத்தின் தலைப்பு கிடைத்ததாக சொன்னார். அகி மிக அருமையான ஒரு படைப்பாளியாகவும் கலைஞராகவும் வெளி உலகுக்கு தெரியவரும் நாள் வெகுவிரைவிலேயே நடக்கும் என நம்புகிறேன்.


Image Courtesy: Tawata Productions

0 comments: