இந்த பதிவு நாவலின் விமர்சனமல்ல. அந்த தகுதியெல்லாம் எனக்கில்லை, ஆனால் இது வாசிப்பனுவத்தை பற்றியது. புத்தக வாசிப்பு அருகி வரும் இக்காலத்தில் ஏன் படிப்பது அவசியம் என்ற ஒரு அனுபவ பகிர்தல்.
இந்த நாவல் மூன்று தேசங்களில் பயனிக்கிரது. கதாசிரியர் வாழ்ந்த நாடுகள் என்பதை சொல்லத் தேவையில்லை. உதாரணத்துக்கு நாவலில் வரும் எடின்பரோவில் வசித்தவனாதலால் கதையில் வரும் எடின்பரோ நகர வர்ணனைகள் எடின்பரோவை அப்படியே கண் முன் நிறுத்துகிறது.
முருகனின் இழையோடும் நக்கல் நையாண்டி கதையெங்கும் கூடவே அந்த செம்பு போலவே வருகிறது.
என்னை கவர்ந்த ஒன்று அத்தியாயம் 53 காலம் 28 மே 1910 சாதாரண வருஷம் வைகாசி 15 சனிக்கிழமை
கதையின் போகிர போக்கில் இப்படி எழுதுகிறாா்:
இந்த நிகழ்வு ஒரு உண்மையில் நடந்த சரித்திர மற்றும் வானியல் நிகழ்வு. கதையில் குறிப்பிடும் வால் நட்சத்திரம் Haley's comet. கிட்டத்தட்ட 75 வருடங்களுக்கு ஒரு முறை பூமிக்கு அருகே கடந்துசெல்லும். கடைசியாக வந்தது 1986ல், மீண்டும் 2061ல் வரும். 1910ல் இது தோன்றியபோது மக்கள் பல வகையில் பீதியடைந்தது விஞ்ஞானத்தின் வீச்சு பரவலாக இல்லாததால் ஏற்பட்ட பகுத்தறிவு இல்லாத மூடநம்பிக்கைகள் மிகுந்திருந்ததால் வந்த விளைவு என்று புரிந்துகொள்ள முடியும். இதுவே 1986ல் விஞ்ஞானம் பரவலாக வளர்ந்துவிட்ட காரணத்தால் 1910ல் இருந்ததைப்போல் அவ்வளவு பீதியை கிளப்பவில்லை.
மேலும் ஹேலீஸ் வால் நட்சத்திரம் பற்றிய சுவாரசியமான ஒரு செய்தி அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வைன் சம்பந்தபட்டது. இவர் பிறந்த வருடம் 1835 ஹேலீ வால் நட்சத்திரம் தோன்றிய வருடம். சரியாக 75 வருடங்கள் கழித்து மீண்டும் இந்த வால் நட்சத்திரம் தோன்றுவதற்கு ஒரு வருடம் முன்பு, "நான் இந்த வால் நட்சத்திரம் தோன்றியபோது பிறந்தேன், இது மறுபடி அடுத்த வருடம் வருகிறது அப்போது அதனுடனே நானும் செல்வேன் . அப்படி நிகழவில்லை என்றால் அது மிகப்பெரும் ஏமாற்றமாக இருக்கும். கடவுள் சொல்லியிருக்கிறார். சந்தேகமேயில்லை, கணக்கில் கொள்ளவியலாத இரண்டு மனம் போனபோக்கில் உலவும் இந்த இருவரும் சேர்ந்தே வந்ததுபோல் இப்போது சேர்ந்தே செல்லவும் வேண்டும்" என்று தனக்கே உரித்தான நகைச்சுவையுடன் ஆரூடம் சொல்லியிருந்தார்.
என்ன மாதிரியான தீர்க்கதரிசனம், மிகச் சரியாக 1910 ஏப்ரல் மாதம் 21ம் தேதி மாரடைப்பால் இறந்தார், வால் நட்சத்திரம் தோன்றிய மறுநாள்!!
விஸ்வரூபம் நாவலில் வரும் ஸ்தூலமாக அலையும் ஆன்மாக்கள் போன்று, ஒருவேளை மார்க் ட்வைன்னும் இந்த வால் நட்சத்திரம் மீண்டும் 1986ல் வந்தபோது கூடவே வந்திருப்பாரோ என்ற எண்ணம் ஏனோ குறுகுறுக்கிறது. முருகனுக்கு நன்றி இப்படி ஒன்றை கதையில் இணைத்து எழுதியதற்கு. வாசிப்பு என்பது இப்படியான அனுவங்களை ஏற்படுத்தக்கூடியது.
0 comments:
Post a Comment