உள்ளே கடவுள்

இயந்திரம் மாதிரி NZ வந்து இரண்டு வருஷம் வாழ்ந்ததுல உடம்பு வெயிட்டென்னமோ $-கனக்கா ஏறிபோச்சு. சரி கட்டுபடுத்திரவேண்டிதான்னு ஜிம்முல போய் சேர்தேன். மொத நா பெர்சனல் ட்ரெயினர் (பின்ன எதுல எப்படி பண்ணனும்னு தெரியவேண்டாமா?) கேட்டப்ப குடி, புகை ரெண்டுங்கிடையாது அப்பால சைவம்ன்னும் சொன்னேன். அதுக்கு அவன் சொன்னான், Body is Temple-ன்னு. சட்டுனு தோணுச்சு ஆகா மிக சரியான வாக்குன்னு. அய்யா, கடவுள் உள்ளார இருக்கும்போது, தம்மு, தண்ணி அடிக்கலாமோ?
நம்ம கிழக்கத்திய பிலாஸபி இதத்தான சொல்லுது. ஓவ்வொரு ஜீவனிலுல் கடவுள் உள்ளார் என்று.

இத ஜஃக்கி வாசுதேவ் விளங்குரமாதிரி இப்படி சொல்லறார்:

உனக்கு தெரியும் அது உனக்கு தெரியும் என்று
உதாரனமா, சைக்கிள் ஓட்டுவது, சமைப்பது.. அதாவது சைக்கிள் உனக்கு ஓட்ட தெரியுமென்பது
உனக்கு தெரியும்

உனக்கு தெரியும் அது உனக்கு தெரியாதென்று.
உதாரனமா, உனக்கு ஒரு விமானத்த எப்படி ஒட்டுரது என்று தெரியாது, இல்லேன்னா ஸ்க்கூபா டைவிங் (தமிழ்ல என்னபா?) எப்படின்னு தெரியாது. அதாவது உனக்கு ஒரு விமானத்த எப்படி ஒட்டுரதுன்னு உனக்கு தெரியதுன்னு உனக்கு தெள்ளதெளிவா தெரியும்.

ஆனா, ஒரு விஷயம் மட்டும் உனக்கு தெரியாதுன்னு உனக்கு தெரியாதுங்கறதே உன்க்கு தெரியாது..
அது உனக்குள் இருக்கும் இறைவன், கடவுள், தெய்வம்....எதுவேனா...

இன்னா தெரிஞ்சுதா?
முயற்ச்சி செஞ்சி கண்டுபிடிச்சிட்டீன்னா 21-ம் நூற்றாண்டு புத்தர் நீதான்.

2 comments:

Anonymous said...

எனக்குள் இருக்கும் இறைவன், கடவுள், தெய்வம் ...... அப்ப்படிங்கிர மனசாட்சியைதான் நான் கொன்னுட்டேனே. இப்ப இன்னா செய்வீங்க இப்ப இன்னா செய்வீங்க ?
Kanchi Films

Anonymous said...

Dear Suresh,

NZ lE engE? naan christchurch. inthap pakkam
vanthaal santhikka mudiyumaa?

endrum anbudan,
thuLasi