அடுத்த தலைமுறை

இப்பல்லாம் நாம் தமிழ்ல கேட்டா புள்ளாண்டன் ஆங்கிலத்திலேயே பதில் சொல்ல ஆரம்பித்திருக்கிரார். என்ன செய்வது? ஆகா ஆங்கிலத்துல வெளுக்கிறானே என்று மயங்குவதா இல்லை இப்படியே போனால் இன்னும் 2 வருஷத்ல் சுத்தமா தமிழ மறந்துருவான்னு வருத்தப்படறதா? (இதே மாதிரி இக்கடான் நிலைதான் பலருக்கும்).. இதப்பத்தி யோசிச்சப்போ
அம்பிகை பாகன் எப்பவோ எழுதிய கவிதை ஞாபகம் வந்தது... அது இங்கே:இன்று நல்ல குளிர் நாள் எது நல்ல "புள் ஓவர்"
என்றாய்ந்த பத்து வயதினளை - சென்றணைந்து
அன்னை தனதன்பால் "ஆஷா இதைப்போடேன்"
என்று சொன்ன சொல்லை சகியாமல் - சின்னவளோ
"லெற்மீ எலோன் மம்மி லெற்மீ டிசைட்" என்றாள்
சற்றே மயங்கினாள் தாய்.


(நன்றி அம்பிகை பாகன்)

0 comments: