தமிழ் மணி

நீங்க பல மணியை பாத்திருப்பீங்க, ஆனா இங்கே வெலிங்டன் Te Papa எனும்
அருங்காட்சியகத்தில் எப்படி, எந்த காலத்தில் இந்த மணி வந்தது என்பது இன்னும் புதிராகவே உள்ளது. இருந்தாலும் ஒரு தமிழன் இவ்வளவு தூரம் கப்பல் பயனத்தை அப்போதே செய்திருக்கிறான்னு பாக்கரப்போ புல்லரிச்சு போச்சு போங்க.

தமிழ் மணி (புகைப்படம் நன்றி Te Ara, Wellington, NZ)

மேற்கொண்டு இதப் பத்தி நா ஒண்ணும் பிரஸ்தாபிக்க வேண்டாம்னு சகோதரி சந்திரலேகா அவங்க வலையான புத்துயிர்ப்புல ஏற்கனவே எழுதிருக்காங்க. ஆனா பாருங்க படம் போடல. (அதான் நீ பிலிம் காட்றியோன்னெல்லாம் முனுமுனுக்க கூடாது) அங்கன யாரும் படிச்சாப்புல தெரியல அதனால ட்ராஃபிக்கை அங்கே திருப்புறேன். வலை மகா ஜனங்கள் அங்கே படித்து இங்கேயும் பின்னூடமிடலாம்.

4 comments:

Anonymous said...

சுரேஷ்,

10 நாட்களுக்கு முன் ஷ்ரேயா தன்னுடைய மழையில் "வந்தேறுகுடிகளா?" என்று செய்த ஆராச்சிக்கு, நான் கொடுத்த பின்னோட்டத்தில் உள்ள இணைப்பினை பாருங்கள்.

ஆனால் என்ன நீங்கள் படம் போட்டதற்காகவேனும், பொடிநடையாக போய் ஒரு முறை அந்த மணியை பார்க்கலாமே.

ஆமா நீங்கள் Brookline இற்கு எந்தப்பக்கம்?

http://mazhai.blogspot.com/2005/05/blog-post_06.html

http://mazhai.blogspot.com/2005/05/blog-post_06.html#111534929206892908

குமரேஸ் said...

சுரேஷ்,

மேலே உள்ள இரு பின்னோட்டங்களும் என்னுடையவையே, நான் என்றைக்கும் அநாமோதயமாக பின்னோட்டம் கொடுப்பதில்லை, உங்கள் பின்னோட்டப் பெட்டி என்னை குழப்பிவிட்டது

கிவியன் said...

நன்றி குமரேஸ்,

இந்த மணி பற்றிய துல்லியமான் பதிவு எனக்கு தெரிந்து சந்திரலேகவுடையதுதான்.
பின்னூட்டம் தகறாருதான். சரி செய்கிறேன்.